அரசியல்வாதிகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கும் மோகம் இந்தியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதிலும் ஆந்திர சினிமா உலகம் தலைவர்கள் வாழ்கை வரலாறு படத்தை உருவாக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்களான ராஜசேகர ரெட்டி மற்றும் என்.டி.ராமராவ் வாழ்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
Read Also -> 3 ஹீரோக்களின் ஆக்ஷன் மிரட்டலில் ’வால்டர்’
இதில் ராஜசேகர ரெட்டியாக நடிகர் மம்மூட்டி நடித்து வருகிறார். மேலும் என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தில் அவரின் கதாப்பாத்திரத்தில் ராமராவின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா நடித்து வருகிறார்.என்.டி.ஆர். என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தது படக்குழு. விநாயக சதுர்த்தி தினமான நேற்று ராமராவின் மருமகனும், ஆந்திராவின் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் கதாப்பாத்திரத்த்தின் புகைப்படத்தை வெளியிட்டது.
Read Also -> மீண்டும் சிட்டி ! வெளியானது 2.0 டீஸர்
சந்திரபாபு நாயுடுவின் கதாப்பாத்திரத்தில் பாகுபலி புகழ் ராணா டகுபாட்டி நடித்து வருகிறார். சந்திரபாபுவின் இளம் வயது புகைப்படத்தையும், ராணாவின் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து மிகச்சிறந்த தேர்வு என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆந்திராவின் அடையாளமாக கருதப்படும் என்.டி.ராமாரவின் வாழ்க்கையை வைத்து ஒரு திரைப்படம் தயாராகி வருவதால் எதிர்பார்ப்பு எகிற வருகிறது. இதை தேஜா இயக்குகிறார். இந்தப் படத்தில் வித்யாபாலன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு சேர இருப்பதாக தெரிய வந்துள்ளது. என்.டி.ராமராவின் திரை வாழ்வோடு சம்பந்தப்பட்டிருந்தவர் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா. ஆகவே என்.டி.ராமராவின் வாழ்வை பேசும் போது கூடவே இவர்களின் கேரக்டர்களும் சேர்ந்துள்ளது.
Read Also -> இளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி
ஒரே படத்தில் இரு மாநில முதல்வர்கள் வாழ்வு இணைய இருப்பதால் இப்படத்திற்கு மாநிலம் தாண்டிய மரியாதை கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் கேரக்டருக்கு காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.