த்ரிஷாவின் காதலை முறித்தது ஏன்? உண்மையை சொன்னார் நடிகர் ராணா!

த்ரிஷாவின் காதலை முறித்தது ஏன்? உண்மையை சொன்னார் நடிகர் ராணா!
த்ரிஷாவின் காதலை முறித்தது ஏன்? உண்மையை சொன்னார் நடிகர் ராணா!
Published on

நடிகை த்ரிஷாவின் காதலை முறித்தது ஏன் என்று நடிகர் ராணா விளக்கம் அளித்துள்ளார்

தமிழில், ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பாகுபலி, பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் ராணா. இவரும் நடிகை த்ரிஷாவும் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாயின. ராணா, சென்னை வந்தால் த்ரிஷாவின் வீட்டில் தான் தங்குவார்.

சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்த சினிமா விழாக்களுக்கு ஒன்றாகவே இருவரும் சென்று வந்தனர். ஆனால், தாங்கள் நண்பர்கள்தான் என்றும் காதலிக்கவில்லை என்றும் நடிகர் ராணா கூறி வந்தார்.

இந்நிலையில் இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹர் நடத்தும் டி.வி நிகழ்ச்சி ஒன்றில், பிரபாஸ், ராணா, ராஜமவுலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராணா, ‘’பாகுபலி செட்டுக்கு போகும்போது ஏதோ ஸ்கூலுக்கு சென்று வருவது போல இருந்தது. இரண்டு மூன்று பிறந்த நாள்களை அந்த செட்டில்தான் கொண்டாடினேன்’’ என்றார். 

பின்னர் ராணாவிடம் த்ரிஷா பற்றி கரண் ஜோஹர் கேட்டார். அதற்கு பதிலளித்த ராணா, ‘’பத்து வருடத்துக்கும் மேலாக அவர் எனக்கு நல்ல தோழியாக இருந்தார். எனது நீண்ட நாள் தோழி அவர். குறைந்த காலம் இருவரும் காதலித்தோம். பின்னர் இது சரியாக இருக்காது என்று நினைத்ததால் அதை முடித்துக்கொண்டேன்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து இவர்கள் பற்றி வந்த கிசு கிசு உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது.

இதே போல அனுஷ்கா பற்றி பிரபாஸிடம் கேட்டபோது, ‘’அவர் எனக்கு தோழி மட்டும்தான்’’ என்று சொன்னார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com