13 வயது சிறுவர்கள் தியேட்டருக்கு வந்தால் சங்கடம்தான்: இயக்குநர் ராம்

13 வயது சிறுவர்கள் தியேட்டருக்கு வந்தால் சங்கடம்தான்: இயக்குநர் ராம்
13 வயது சிறுவர்கள் தியேட்டருக்கு வந்தால் சங்கடம்தான்: இயக்குநர் ராம்
Published on

இயக்குநர் ராம் இயக்கியுள்ள தரமணி படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது சென்சார் போர்டு. இயக்குநர் ராம் இயக்கியுள்ள தரமணி படத்தின் ட்ரெய்லரும், ஆடியோவும் ரிலீசாகி ஆண்டுக்கணக்கில் ஆகி விட்டது. ஆனால் படம் ரிலீசாக தாமதமாகி விட்டது. இந்நிலையில் ’ஆண்டவா காணோம்’ படத்தில் இந்தப்படம் குறித்து பேசியவர், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி தரமணி ரிலீசாகும் எனக்கூறினார். 
மேலும் பேசிய அவர், ஜே.எஸ்.கே பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு. ஒரு படத்தை எடுத்து இவ்வளவு நாள் ரிலீசாகமல் இருந்தால் எந்தத் தயாரிப்பாளரும் இயக்குநருடன் மோதலில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் எங்களுக்குள் மோதல் உருவாகவில்லை. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் இல்லாமல் ஒரு கம்பெனி இயங்க முடியும் என்பதை நிரூபித்தவர். இந்தப்படத்தின் சென்சார் முடிந்து விட்டது. 14 கட் செய்தால் யு/ஏ சான்றிதழ் தருகிறோம். இல்லையெனில் ஏ சான்றிதழ் தான் வழங்க முடியும் எனத் தெரிவித்து விட்டனர். நான் ஏ சான்றிதழே இருந்துவிட்டுப்போகட்டும் என கூறி விட்டேன். வேறு தயாரிப்பாளராக இருந்திருந்தால் 14 கட் செய்து யு/ஏ சான்றிதழை பெறவே முயற்சித்து இருப்பார். ஆனால் சதீஸ்குமார் ஏ சான்றிதழே இருந்துவிட்டுப்போகட்டும் 13 வயதுக் குழந்தைகள் தியேட்டருக்கு வந்து சங்கடமாகி விடக்கூடாது என அவர் உறுதியாக இருந்தார். ஆபாசம் இல்லாத படம் தான். ஆனால் கதை பேசக்கூடிய அமைப்பு அப்படி இருப்பதால் ஏ சான்றிதழே இருந்துவிட்டுப்போகட்டும் என முடிவுக்கு வந்தோம் என அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com