நினைவுப் பாதையில் ஒரு பயணம்.. ’ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை’ ஆர்வத்துடன் கண்டு ரசித்த ரஜினிகாந்த்!

சென்னையில் உள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் அங்கு காட்சிப் படுத்தப்படடிருந்த பொருட்களை கண்டு ரசித்ததோடு தனது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
rajnikanth
rajnikanthpt desk
Published on

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான 'ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்' தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இதில், ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், திமுக எம்பி டி.ஆர்.பாலு, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் சிவகுமார் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

rajnikanth
rajnikanthpt desk

இந்த மியூசியத்தில், ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்கள். முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று (ஜூன் 7) நடிகர் ரஜினிகாந்த் இந்த மியூசியத்துக்கு வருகை தந்து தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் எம்எஸ்.குகன் ஆகியோருடன் இணைந்து மியூசியத்தை சுற்றிப் பார்த்தார். அதோடு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை கண்டு ரசித்தோடு அவைகளை நினைவு கூர்ந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com