ரஜினி ‘2.0’படத்தில் பயன்படுத்தியுள்ள உடையின் எடை பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘2.0’. இந்தப் படத்தின் வெளியீடு ‘காலா’ படத்திற்கு முன்பாகவே இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் ஹாலிவுட் ஸ்டுடியோவில் படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் முடிவடையாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டுள்ளது. ஆகவே திட்டமிட்டப்படி படம் வெளியாவதில் சிக்கல் நீடித்துள்ளது. எனவே ‘காலா’வை முன்னதாக வெளியிடப் போவதாக தனுஷ் அறிவித்தார். வரும் ஜூன் 7 அன்று உலகம் முழுக்க இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்குப் பிறகே ‘2.0’ வெளியாக உள்ளது. இதில் ரஜினி ரோபோவாக நடித்துள்ளார். இது ‘எந்திரன்’படத்தின் தொடர்ச்சியல்ல என்றும் தனிக் கதையே என்றும் ஷங்கர் விளக்கம் அளித்திருந்தார். எந்திரனாக வரும் ரஜினியின் உடை 40 கிலோ என்று தெரியவந்துள்ளது. இவ்வளவு கனமான உடையை அவர் பயன்படுத்தி நடித்திருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.