மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'வேட்டையன்' (தலைவர் 170) திரைப்படத்தின் பிரமாண்டமான வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது லைகா புரொடக்ஷன்ஸ். அதன்படி அக்டோபர் 10-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வேட்டையன் படம் வெளியாக உள்ளது.
தனது படைப்புகளின் மூலம் சமூகம் சார்ந்த கதை சொல்லலுக்கு பெயர் போனவர் இயக்குனர் த.செ.ஞானவேல். இவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துடன் அவர் முதல்முறையாக இணைந்து பணிபுரிகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் இதற்கு முன் 2.0, தர்பார், லால் சலாம் ஆகிய படங்கள் வந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து நான்காவது முறையாக இக்கூட்டணி வேட்டையனில் இணைந்துள்ளது.
அதே போல இன்னொரு அதிரடியான கூட்டணியான ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திர் கூட்டணியும் பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக வேட்டையனில் இணைந்துள்ளது.
சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்தில், 'பாலிவுட் மெகாஸ்டார்' அமிதாப் பச்சன் உட்பட ஒரு தனித்துவமான நட்சத்திரப் பட்டாளமே உள்ளது. அமிதாப் பச்சன் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறார்.
மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரனின் நிர்வாகத்தின் கீழ் தயாரிப்பிற்கு பிந்தைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், 'வேட்டையன்' அதன் பிரம்மாண்டம் மற்றும் அழுத்தமான கதை சொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமாவாக இருக்குமென கூறப்பட்டுள்ளது.
வேட்டையன் படத்தின் நடிகர்கள் :- 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரோகிணி, அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன்.
படக்கழு :-
தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சுபாஸ்கரன்
இயக்குனர் : த.செ. ஞானவேல்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவாளர் : எஸ். ஆர். கதிர்
எடிட்டர் : பிலோமின் ராஜ் தயாரிப்பு
வடிவமைப்பு : கே கதிர்
ஸ்டண்ட் இயக்குனர் : அன்பறிவ்
ஒப்பனை : பானு, பட்டினம் ரஷீத்
ஆடை வடிவமைப்பாளர் : அனு வர்தன்
லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி : ஜி. கே. எம். தமிழ் குமாரன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்