ரசிகர்கள் சந்திப்பு தற்காலிக ரத்து: ஆடியோவில் ரஜினி தகவல்

ரசிகர்கள் சந்திப்பு தற்காலிக ரத்து: ஆடியோவில் ரஜினி தகவல்
ரசிகர்கள் சந்திப்பு தற்காலிக ரத்து: ஆடியோவில் ரஜினி தகவல்
Published on

தனது ரசிகர்கள் சந்திப்பை தற்காலிகமாக ரத்து செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

தனது ரசிகர்ளை தொடர்ந்து 6 நாட்கள் சந்திக்க முடிவு செய்திருந்தார் ரஜினி. ஏப்ரல் 12 முதல் 16 வரை இந்த சந்திப்பு ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடக்கும் என்று ரஜினி கூறியிருந்தார். இந்நிலையில் அதை ரத்து செய்திருக்கிறார் ரஜினி. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது:

என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு, நான் ரஜினிகாந்த்... என்னுடைய வணக்கத்தை தெரிவிச்சுக்கிறேன். உங்களுக்கெல்லாம் ஒரு தகவல். பத்தாண்டுகளாச்சு, நான் உங்களையெல்லாம் சந்திச்சு. ஒரு போட்டோ எடுத்து, உங்களோட உரையாடி. ஸோ, நீங்களும் வந்து என்கிட்ட தொடர்ந்து கேட்டுக்கிட்டு இருந்தீங்க, பார்க்கணும், போட்டோ எடுக்கணும் அப்படின்னு சொல்லிட்டு. எனக்கும் நேரம் சரியா அமையல.

சரி இப்ப நேரம் கிடைச்சதால உங்களை பார்க்கதுக்கு 12-ம் தேதியில இருந்து 16-ம் தேதி வரைக்கும் ராகவேந்திரா மண்டபத்துல பிளான் பண்ணியிருந்தோம். ஒரு நாளைக்கு, நாலு இல்ல அஞ்சு மாவட்டத்துல இருந்து, ஆவரேஜா ஒரு முந்நூறு பேரு அந்த மாதிரி நம்ம பிளான் பண்ணி, ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு, ரெண்டாயிரம் பேரை செட் போட்டு அவங்களோட போட்டோ எடுத்து, விருந்து கொடுத்து அனுப்பலாம்ங்கறது என் ஆசை. விருப்பம். ஸோ, அது வந்து அத்தனை பேரோடயும் தனித்தனியா போட்டோ எடுக்கிறதுங்கறது, பிராக்டிக்கலா கஷ்டம்ங்கறதால எட்டெட்டு பேரா, ஒரு குரூப்பா எடுக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தோம்.

அது எல்லா ரசிகர்களுக்கும் ஏமாற்றமா இருக்கு. குரூப் போட்டோ எடுத்தா, அதெப்படி வீட்டுல மாட்டிக்கிறது? தனித்தனியா வந்து எடுக்கணும்னு சொல்லிட்டு ஒருத்தர் விடாம எல்லாருமே கோரிக்கை வச்சாங்க. அவங்க சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு. பட், தனித்தனியா வந்து எடுக்கறது கஷ்டமா இருக்குங்கறதால, 12ம் தேதியில இருந்து 16ம் தேதி வரை நடக்க இருந்ததை கேன்சல் பண்ணிட்டு, வருங்காலத்துல ஒவ்வொரு மாவட்டமா அல்லது ரெண்டு ரெண்டு மாவட்டமா பிளான் பண்ணி, அவங்களை மட்டும் கூப்பிட்டு தனித்தனியா போட்டோ எடுக்கலாம்னு நினைச்சிருக்கதால இப்ப அதை ஒத்திவச்சிருக்கோம்.

பியூச்சர்ல அது எப்பங்கறதை நான் விரைவில் அல்லது நேரம் வரும்போது சொல்றேன். ஐ திங், நீங்கள்லாம் இதை புரிஞ்சுப்பீங்க, ஒத்துழைப்பீங்கன்னு அப்படின்னு நினைக்கிறேன். நன்றி. வணக்கம். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com