மெர்சல் ஆடியோ ரிலீஸ் விழாவை நேரலையாக ஒளிபரப்ப அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் 61வது படமான மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி நடைபெற இருக்கிறது. திரைத்துறையில் அடியெடுத்து வைத்து விஜய்க்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இது 25வது ஆண்டு. தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸுக்கு மெர்சல் 100வது படைப்பு என்பதால் மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப்பைரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மெர்சல் படத்தின் அனைத்துப் பாடல்களையும் மேடையில் இசைக்க இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிகழ்ச்சி நேரலையாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. கமலும், ரஜினியும் அரசியலில் நுழைய இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், விஜயின் மெர்சல் படமும் அரசியல் பேசுவதாக கூறப்படுகிறது. அத்துடன் அவரும் அரசியலில் குதிக்க தயாராகி வருகிறார் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த மேடை பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.