இயக்குநர் ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளை வாங்கியுள்ள தளங்கள் குறித்த அறிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 13 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கும் ஓடிடி தளங்கள், சேனல்கள் குறித்து இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி, ’ஆர்ஆர்ஆர்’ படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் ’ஜீ 5’ ஓடிடி தளத்திலும், இந்தி, ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மொழி, கொரிய மொழி, துருக்கிய மொழி மற்றும் ஸ்பானிஷ் ஆகிய ’நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி தளத்திலும் வெளியாகிறது. சேட்டிலைட் உரிமையை தமிழில் விஜய் டிவி வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.