பூஜா ஹெக்டே பிறந்த நாள்: ராதே ஸ்யாம் பட போஸ்டர் வெளியீடு

பூஜா ஹெக்டே பிறந்த நாள்: ராதே ஸ்யாம் பட போஸ்டர் வெளியீடு

பூஜா ஹெக்டே பிறந்த நாள்: ராதே ஸ்யாம் பட போஸ்டர் வெளியீடு
Published on

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளான இன்று (அக்டோபர் 13) அவர் நடித்துள்ள 'ராதே ஸ்யாம்' படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஒரு முழுமையான இந்தியப் படமாக அது தயாராகிவருகிறது. படத்தில் பூஜா கதாபாத்திரத்தின் பெயர் பிரேரனா.

இந்த போஸ்டரில் பிரபாசுக்கு எதிரே புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார் பூஜா ஹெக்டே. பச்சை நிறத்தில் அழகிய உடை அணிந்துள்ள அவர் மலர்களின் டிசைன்களைக் கொண்ட கோட் அணிந்திருக்கிறார். ராதே ஸ்யாம் படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முழுமையான இந்தியப் படமாக அது உருவாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இது 70 களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதை. ஹைதராபாத், இத்தாலி, ஜார்ஜியா போன்ற நாடுகளில் ராதே ஸ்யாம் படத்திற்கான படப்பிடிப்புகளை நடத்தியுள்ளார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com