பிகினி டிரெஸ் என்ன சும்மாவா? ராய் லட்சுமி

பிகினி டிரெஸ் என்ன சும்மாவா? ராய் லட்சுமி
பிகினி டிரெஸ் என்ன சும்மாவா? ராய் லட்சுமி
Published on

பிகினி ஆடை அணிவது எல்லோராலும் முடியாத விஷயம். அதற்கான உடல்வாகு வேண்டும் என்று நடிகை ராய் லட்சுமி கூறினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘கடந்த ஒன்றரை வருடமாக இந்தியில் நான் நடிக்கும், ’ஜூலி 2’ படத்தில் பிசியாக இருக்கிறேன். இந்தப் படத்துக்காக சில தியாகங்களை செய்திருக்கிறேன். சில பிரச்னைகளை சந்தித்திருக்கிறேன். அதெல்லாம் என் கேரக்டருக்கு நியாயம் செய்ய வேண்டும் என்பதற்காக. முதலில் உடல் எடையை அதிகரித்தேன். பிறகு குறைத்தேன். பின் திரும்பவும் 18 கிலோ கூட்டினேன். இப்படி மாறி மாறி செய்தேன். இதில் எனக்கு ஹீரோவுக்கும் மேலான கேரக்டர் என்பதால் அப்படி நடித்துள்ளேன். பிகினி உடை அணிந்தும் நடித்துள்ளேன். பிகினி உடை அணிவது சுலபமான விஷயமல்ல. எல்லோராலும் பிகினி உடை அணிந்து விட முடியாது. அதற்கு உடல்வாகு வேண்டும். அது எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன்.

ஒரே மாதிரியான கிளாமர் கேரக்டர்களாகவே வந்ததால் தமிழ், தெலுங்கில் சில படங்களை நிராகரித்திருக்கிறேன். புதுமையான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். தமிழில் இப்போது ’யார்’ என்ற படத்தில் நடித்திருக்கிறேன். இது சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com