பிரான்ஸில் ஒன்று கூடிய குயின்ஸ்!

பிரான்ஸில் ஒன்று கூடிய குயின்ஸ்!
பிரான்ஸில் ஒன்று கூடிய குயின்ஸ்!
Published on

நடிகைகள் மஞ்சிமா மோகன், தமன்னா, காஜல் அகர்வால், பாரூல் யாதவ் ஆகியோர் பிரான்சில் ஒன்று கூடியுள்ளனர்.

கங்கனா ரனவ்த் நடித்து இந்தியில் சூப்பர் ஹிட்டான படம், ‘குயின்’. இந்தப் படம் இப்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பாரூல் யாதவ், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிக்கின்றனர். தமிழ், கன்னடத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கு படத்தை நீலகண்ட ரெட்டி இயக்குகிறார்.

தமிழில் இந்தப் படத்துக்கு பாரிஸ் பாரிஸ் என்றும் மலையாளத்தில் ஜம் ஜம் என்றும் கன்னடத்தில் பட்டர்பிளை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தின் ஷூட்டிங் பிரான்ஸில் தொடங்கியுள்ளது. இதற்காக  தமன்னா, காஜல் அகர்வால், மஞ்சிமா, பாரூல் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். படப்பிடிப்புக்கு முன் அவர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com