ஜோதிடம் சொல்வதுபோல் கதை ஆரம்பித்தாலும்கூட ஐந்து கதைகளில் கடைசிக் கதையான ‘மிராக்கிள்’ தான். ’நாரதகானா’ சபாவிலிருந்து வெளியில் வந்து ‘ஹப்பாடா’ என்று சாலையோரக் கடையில் டீ குடிப்பதுபோல் உள்ளது. இதுதான், புத்தம்புதுகாலையின் உண்மையான மிராக்கிள் என்று யோசித்தபடி பார்க்க ஆரம்பித்தால், நடுவே மஹாபாரதம் பார்க்கலாம் என்பதுபோன்ற உரையாடல் வந்துபோகிறது.
ஒரு பக்கம் அதிசயம் நடக்கும் என்று ஜோதிடர் பேசுவது மற்றொரு பக்கம் கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுவது என மாறி மாறி காண்பித்து தமிழக மக்களுக்கு ஏதோ ஒன்றைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
வாழ்க்கையில் மிராக்கிள் நடக்கும் புளியோதரைக்கு பதில் பிரியாணி சாப்பிடலாம் என்ற ஆசையோடு திருடச்செல்கிறார்கள் பாபி சின்ஹாவும் நண்பன் ஷரத்ரவியும். மிராக்கிள் நடந்ததா? என்பதுதான் க்ளைமாக்ஸ். மிராக்கிள் நடக்கும் என்கிற ஜோதிடரின் பதுக்கி வைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணமே திருடுபோவது செம்ம மிராக்கிள். வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் பாபி சின்ஹாவும் அவரது நண்பரும்.
யோகா, தியானம், சங்கீதம், காஃபி, ஜோதிடம், குருஜி, மஹாபாரதம் என ஏதோ ‘கி வேர்டு’ கொடுக்கப்பட்டு படம் இயக்கியதுபோல் இருக்கின்றன புத்தம் புது காலை படத்தில் வரும் ஒவ்வொரு கதையுமே. ஆனால், ஐந்து கதைகளிலும் மிராக்கிள்தான் நம் மனதில் நிற்கிறது. அதனால்தான், இதனை கடைசிக் கதையாக சேர்த்துள்ளார்கள் என்று நினைக்க வைக்கிறது.
- வினி சர்பனா