”புரட்சித்தலைவர் விஜய்; புரட்சித்தலைவி சங்கீதா” - ரசிகர்களின் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

”புரட்சித்தலைவர் விஜய்; புரட்சித்தலைவி சங்கீதா” - ரசிகர்களின் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு
”புரட்சித்தலைவர் விஜய்; புரட்சித்தலைவி சங்கீதா” - ரசிகர்களின் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு
Published on

புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி என விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை வைத்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு நிலவுகிறது.

நடிகர் விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதனைக் கொண்டாடும் விதமாக விஜயின் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் போஸ்டர்கள் மூலமாகவும் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் மக்கள் இயக்கத்தின் புரட்சிதலைவர் விஜய் என்றும் புரட்சித்தலைவி சங்கீதா என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜயின் உருவப்படத்தை எம்ஜிஆர் போன்று சித்தரித்தும் அவரது மனைவி சங்கீதாவின் உருவப்படத்தை ஜெயலலிதாவாக சித்தரித்தும் உள்ளனர். இது அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மூலம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுநாள் வரை நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேண்டுமென்று அவரது ரசிகர்கள் விருப்பத்தை தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவரது மனைவி சங்கீதாவையும் அரசியலுக்கு வரவேற்க இப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com