அலுவலக பெண் ஊழியர்களுடன் ‘திரௌபதி’ படத்தை பார்த்த கிரண் பேடி

அலுவலக பெண் ஊழியர்களுடன் ‘திரௌபதி’ படத்தை பார்த்த கிரண் பேடி
அலுவலக பெண் ஊழியர்களுடன் ‘திரௌபதி’ படத்தை பார்த்த கிரண் பேடி
Published on

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெண்மையை கொண்டாடும் விதமாக வீட்டுவேலை செய்யும் பெண்களுடன் சென்று ‘திரெளபதி’ படத்தை கண்டு ரசித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘திரெளபதி’. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இருந்தே பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனாலும் படம் வெளியானதில் இருந்து சிறப்பாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். இதனை இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது. திட்டமிட்டு காதல் செய்து ஏமாற்றும் நபர்களை குறிவைத்து இப்படம் எடுக்கப்பட்டதாகவும் இது ஒரு உண்மைச் சம்பவம் என்றும் அதன் இயக்குநர் ஏற்கெனவே கூறியுள்ளார்.

இந்நிலையில், ‘திரெளபதி’ படத்தினை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவரது அலுவலகத்தை தூய்மை செய்யும் பணியாளர்களுடன் சென்று திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார். பெண்மையை கொண்டாடும் விதமாக இந்தப் படத்தை கண்டதாகவும் அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதற்கு அவர் #IWD2020 #InternationalWomensDay ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தியுள்ளார்.

இந்தப் படம் வெளியானதில் இருந்து சிலர் அதற்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ‘நாடகக் காதலை’ குறித்து முன்வைக்கும் முதல் படம் என இன்னொரு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே சர்ச்சைகளை தாண்டி தன் அலுவலக ஊழியர்களுடன் கிரண் பேடி இந்தப் படத்தை கண்டு ரசித்திருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com