தேசியக்கொடி வடிவிலான துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்தபடி போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சுதந்திர தினவிழாவின்போது பிரியங்கா சோப்ரா ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கழுத்தில் தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஆன துப்பட்டாவை அணிந்திருந்தார். அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் அணிந்திருந்த தேசியக் கொடி துப்பட்டாவில் அசோகச் சக்கரம் இல்லை எனக்கூறி தேசிய கொடியை அவமதிப்பதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புகைப்படத்துடன் சுதந்திர தின வாழ்த்துகள், எனது இதயம் இந்தியாவுக்கு சொந்தம், ஜெய்ஹிந்த் என்று பதிவு செய்திருந்தார் பிரியங்கா.
இந்நிலையில், தன் சுய விளம்பரத்துக்காக தேசியக்கொடியை அவமதிக்கக் கூடாது. நாட்டின் கொடிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்று அசோக சக்கரம் இல்லாமால் அணிந்திருக்கும் துப்பட்டாவை பிரியங்கா அணிந்ததற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் இப்படி ஒரு ஆடை அணிந்ததற்கு சேலை அல்லது சல்வார் அணிந்திருக்கலாம் என நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.
முன்னதாக பிரதமர் மோடியின் முன்பு காலின் மேல் காலிட்டு பிரியங்கா அமர்ந்து பேசியது சமூக வலைத்தளங்களில் பாஜகவினரைக் கோபமூட்டியது குறிப்பிடத்தக்கது.