”போராடியவர்களுக்கு அன்பும் அரசுக்கு நன்றியும்”: நடிகர் கார்த்தி ட்வீட்

”போராடியவர்களுக்கு அன்பும் அரசுக்கு நன்றியும்”: நடிகர் கார்த்தி ட்வீட்
”போராடியவர்களுக்கு அன்பும் அரசுக்கு நன்றியும்”: நடிகர் கார்த்தி ட்வீட்
Published on

”வேணான் சட்டம் ரத்து குறித்த பிரதமரின் அறிவிப்பு உயிரை ஈந்து போராடிய விவசாயிகளின் இடைவிடாது போராட்டத்தின் வரலாற்று வெற்றி” என்று நடிகர் கார்த்தி ட்வீட் செய்துள்ளார். 

அவரது பதிவில், ”மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையே ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்” என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு  முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி முதல் மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் தொடர்ச்சியாக போராடி வந்தார்கள். இந்த போராட்டங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக கடுங்குளிரையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் ஒரு வருடப்போராட்டம் வரும் 22 ஆம் தேதி முடியவுள்ள நிலையில், பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் விவசாயியாக நடித்த கார்த்தி பிரதமர் மோடியின் அறிவிப்பை பாராட்டி இருக்கிறார். ஏற்கனவே, விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தன்னுடைய உழவன் ஃபவுண்டேஷன் மூலம் ஆண்டுதோறும் சிறந்த விவசாயிகளுக்கு விருதும் பணமும் வழங்கி கவுரவித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com