தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்து வரும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் ரிலீஸ் தேதி புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘மகா நடி’. இந்தத் திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றிருந்தார். அதேபோல் தெலுங்கு மொழியில் சிறந்தப் படம் என்ற தேசிய விருதையும் இந்தப் படம் பெற்றிருந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து ‘ப்ராஜெக்ட் கே’ என்ற அறிவியல் புனைவுப் படத்தை மிகப் பிரம்மாண்டாக இயக்கி வருகிறார் இயக்குநர் நாக் அஸ்வின். இந்தப் படத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சங்ராந்தி (பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு 2024-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி படம் வெளியாவதாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு, பிரபாஸ் நடிப்பில் மிகப் பிரம்மாண்டாக உருவாகி வெளிவந்த ‘சாஹோ’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ படங்கள் வசூலில் சாதனைப் புரிந்தாலும் விமர்சன ரீதியாக கைக்கொடுக்காத நிலையில், அடுத்த 7 மாதங்களில் வெளியாகவுள்ள ‘ஆதி புருஷ்’ , ‘சலார்’ மற்றும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தை மிகவும் நம்பியுள்ளார் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Rebelstar #Prabhas upcoming movies release dates as of now :#Adipurush 16 June 2023#Salaar 28 Sep 2023#ProjectK 12 Jan 2024

3 movies in seven months if everything goes well

Thoughts ? pic.twitter.com/l3ERt5qifl
— Prabhas Trends™ (@TrendsPrabhas) February 18, 2023