“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்

“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்
“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்
Published on

பிக்பாஸ் தாடி பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காமெடி நடிகரான பாலாஜி, அவ்வப்போது தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவருக்கும், இவரது மனைவியான நித்யாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தான் பாலாஜி மீது நித்யா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அத்துடன் இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய செயலில் ஈடுபடும் பாலாஜி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் அவர் முறையிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com