கவிஞர் வைரமுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதனையொட்டி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள்,நிறுவனங்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனையொட்டி, தயாரிப்பாளரும் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன் ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வரிடம் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்தார். இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ், அஜித் ஆகியோர் தலா ரூ.25 லட்சம் அளித்துள்ளனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ரூ.5 லட்சம் கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளார்.