காலத்தால் அழியாத காவியங்களைத் தன் பாடல் வரிகளில் கரைத்து, மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட கவியரசு கண்ணதாசன், இசை எனும் மலையில் உச்சாணி கொம்பிலேயே அமர்ந்திருக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... இவர்கள் இருவருக்குமே இன்று (ஜூன் 24) தேதி பிறந்த தினம்.
இது ஓர் அபூர்வ ஒற்றுமை. கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்துவிட்டால், அந்தப் பாடல் காலத்தால் மறக்க முடியாத காவியப் பாடல்களாக உயிர்ப்பித்து நிற்கும் என்று மெச்சுவார்கள் திரையுலக படைப்பாளிகள். இருவருக்கும் அப்படியொரு கெமிஸ்ட்ரி. அப்படி கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.வி. இசையில் உதித்த சில பாடங்கள் இங்கே...
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு | படம்: அவள் ஒரு தொடர் கதை