பைரசியை எதிர்த்து 24 மணிநேர நேரலை பிரச்சாரம்

பைரசியை எதிர்த்து 24 மணிநேர நேரலை பிரச்சாரம்
பைரசியை எதிர்த்து 24 மணிநேர நேரலை பிரச்சாரம்
Published on

பைரசி பிரச்னை தமிழ் சினிமாவை பாடாய்ப்படுத்தி வருகிறது. அதற்கு எதிராக தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உட்பட பல நடிகர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலுள்ள டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமான ''ஹீரோ டாக்கீஸ்'' மற்றும் 'ஷூட் தி பைரேட்ஸ்' இணைந்து  24 மணி நேரம் இடைவிடாத, பைரஸிக்கு எதிரான பிரச்சாரத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி காலை பதினோரு மணிக்கு பிரசாத் லேபிள் தொடங்க உள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இந்தப் பிரச்சாரத்தில் பல்வேறு தலைப்புகளில் பேச்சுக்கள், கலந்துரையாடல்கள், விளக்கக் காட்சிகள், குழு விவாதங்கள் என நடக்க உள்ளன. இதில் பல சினிமா பிரபலங்கள், சாதனையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த ''ஷூட் தி பைரேட்ஸ்'' நிகழ்வு ''Asia Book Of Records'' மற்றும் '' Indian Book Of Records'' ஆகியவையால் ''Longest Anti Piracy Campaign'' என அடையாளம் காணப்படவுள்ளது.

ஒரு படம் எடுக்க சந்தித்தாக வேண்டிய சிரமங்கள், தமிழ் சினிமாவை எந்த அளவிற்கு பைரசி பாதிக்கின்றது. தயாரிப்பாளர் மற்றும் நுகர்வோர் கண்ணோட்டத்தில் சினிமா வணிகம் எப்படியுள்ளது, பைரசியை தடுக்க தேவையான நடவடிக்கைகள், தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட்டுகள் மற்றும் தமிழ் சினிமா துறையின் டிஜிட்டல் பரிமாணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், கலந்துரையாடல்கள், ஆய்வுகள் நடைபெற உள்ளன.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com