தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை... விளக்கம் கொடுத்த பார்த்திபன்

தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை... விளக்கம் கொடுத்த பார்த்திபன்
தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை... விளக்கம் கொடுத்த பார்த்திபன்
Published on
கொரோனா தடுப்பூசி பக்கவிளைவு காரணமாகவே வாக்களிக்க வர இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் நடிகர் பார்த்திபன் வாக்களிக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ட்வீட் செய்திருந்தார். ஆனால், அடுத்த நாள் அவரே வாக்களிக்கவில்லை. இது குறித்து இன்று காலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
''வணக்கமும் நன்றியும்... ஜனநாயகக் கடமையை சீராகச் செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும், இயலாமையும்.... இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் தடித்து வீங்கிவிட்டது.டாக்டருக்குக் கூட போட்டோ எடுத்தனுப்பியே மருத்துவம் செய்துக் கொண்டேன்.மாலை வரை சற்றும் குறையவில்லை. 

தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்'' என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com