காஷ்மீரில் நடந்த ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விடுப்பில் சொந்த ஊர் சென்று, பின் மீண்டும் பணியில் சேர வந்த வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 350 கிலோ வெடிபொருட்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
இந்த தாக்குதல் இந்தியாவையே அதிரச்செய்துள்ளது. இந்திய மக்கள் அனைவரும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலர் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் குறித்த தகவலால் மனம் உடைந்தேன். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Deeply Saddened and heartbroken to know about the cowardly attack on #CRPFJawans convoy in #Pulwama. My heartfelt condolences to their families who have lost a son,brother,husband or a father for us.