மெக்ஸிகோவில் நடந்த நிஜ சம்பவத்தைப் பற்றிய படமாக உருவாகியிருக்கிறது. மெக்ஸிகோ காவல் படையில் முதன் முதலாக இணைந்த நான்கு பெண்கள், ஒரு சீரியல் கில்லரை பிடிக்க முயன்றதுதான் கதை.
Holly Jackson எழுதிய `A Good Girl’s Guide to Murder’ அதே பெயரில் சீரிஸாக உருவாகியிருக்கிறது. 17 வயது பெண் கொலை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்து, அந்தக் கொலையை செய்தது யார் என விசாரிக்கும் ஒரு மாணவியின் கதை.
சூர்யா மனோஜ் வங்காலா இயக்கியிருக்கும் சீரிஸ் `Brinda'. ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர் சீரிஸாக உருவாகியிருக்கிறது.
இந்திய சினிமாவிலிருந்து, உலகளவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியிருக்கும் ராஜமௌலி பற்றிய ஆவணப்படம். பிரபாஸ், ஜூனியர் என் டி ஆர் துவங்கி ஜேம்ஸ் கேமரூன் வரை பலரும் அவர் பற்றி பேசியிருக்கிறார்கள்.
Binoy Gandhi இயக்கத்தில் சஞ்சய் தத், ரவீணா டாண்டன் நடித்துள்ள படம் `Ghudchadi’. ஃபேமிலி ட்ராமாவாக உருவாகியிருக்கிறது.
ப்ரந்தீப் இயக்கத்தில் பாயல் ராஜ்புத் நடித்த படம் `Rakshana’. ஏசிபி கிரண் குற்றங்களை தடுக்க செய்யும் செயல்கள், அவற்றின் விளைவுகள் இவையே கதை.
Denis Villeneuve இயக்கத்தில் உருவான Dune படத்தின் இரண்டாம் பாகமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. பால் அட்ரேடிஸ் தனது போராட்டத்தை எப்படித் தொடர்ந்தான் என்பதே கதை.
பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவான படம் `ரயில்’. வடமாநிலத்தவர்கள் மேல் இருக்கும் தேவையற்ற வெறுப்பையும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் பேசுகிறது படம்.
The Maze Runner படம் இயக்கிய Wes Ball இயக்கிய படம் `Kingdom of the Planet of the Apes'. 2017ல் வெளியான War for the Planet of the Apes படத்தின் ஸ்டாண்ட் அலோன் சீக்குவலாக உருவாகியிருக்கிறது. அந்தப் படத்து சம்பவங்களுக்கு 300 வருடங்களுக்குப் பின் இக்கதை துவங்குகிறது. சீசர் தன் குரங்கு இனத்தை வழி நடத்துகிறது. இம்முறை என்ன சவால், அது எப்படி சரியானது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சதீஷ் இயக்கிய படம் `Theppa Samudram’. தீபா சமுத்திரம் கிராமத்தில், தொடர்ந்து பள்ளிச்சிறுமிகள் காணமல் போகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்கும் கணேஷ், இந்த மர்மத்தை தீர்த்தாரா என்பதே கதை.
Spenser Cohen, Anna Halberg இயக்கத்தில் உருவான படம் `Tarot’. நண்பர்கள் குழு ஒன்று, பிரச்னைக்குரிய அமானுஷ்ய விளையாட்டு ஒன்றை விளையாடுகிறார்கள். அதில் சில விதிகளை மீற அதன்பின் நடக்கும் ஹாரர்களே கதை.
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் `மழை பிடிக்காத மனிதன்’. தன் பழைய அடையாளங்களை மறைத்து, வேறொரு புதிய இடத்தில் வாழத்துவங்கும் மனிதன் சந்திக்கும் சிக்கல், அதன் பின் நடப்பவையே கதை.
சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் `போட்’. படகு ஒன்றில் தப்பித்துச் செல்லும் 10 நபர்களும், அவர்களின் சர்வைவல் போராட்டமுமே கதை.
RGK இயக்கத்தில் நகுல் நடித்துள்ள படம் `வாஸ்கோடகாமா’. குற்றவாளிகளுக்கு டார்கெட், நல்லவர்களுக்கு சிறை என வினோதமான உலகம் ஒன்றில் நிகழும் கதை.
பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள படம் `ஜமா’. தெருக்கூத்துகளில் பெண் வேடமிடும் கலைஞனும், அவன் சந்திக்கும் பிரச்சனைகளுமே கதை.
ஆனந்த ராம் இயக்கி நடித்துள்ள படம் `நண்பன் ஒருவன் வந்த பிறகு’. ஆனந்த தன்னுடைய வாழ்க்கையில் பல பக்கங்களை புரட்டிப் பார்ப்பதே கதைக் களம்.
ராமச்சந்திரன் இயக்கியுள்ள படம் `பேச்சி’. காட்டுக்குள் கட்டப்பட்டிருக்கும் பேச்சியை, தவறுதலாக விடுவித்த பின் கிராமத்தில் நடக்கும் சம்பவங்களே கதை.
தமிழில் வெளியான டெடி படத்தின் தெலுங்கு ரீமேக் `Buddy’. டெட்டி பியர் உயிருடன் வரும் அதே ஒன்லைனில் சில மாற்றங்கள் செய்து உருவாக்கியிருக்கிறார்கள்.
அப்துல் ஹூசைன் இயக்கியுள்ள படம் `Shivam Bhaje’. கடனை வசூல் செய்யும் ஹீரோ, ஒரு பெரிய விஷயத்தை செய்து முடிக்க கிளம்புவதே கதை.
பவன்குமார் இயக்கி நடித்துள்ள படம் `Average Student Nani’. நானி என்ற மாணவனின் காதல் பயணமே கதை.
சுதன்ஷு இயக்கத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ள படம் `Ulajh'. ஐ எஃப் எஸ் அதிகாரிக்கு அளிக்கப்படும் பொறுப்பும், அதை செய்து முடிப்பதி வரும் சவால்களுமே கதை.
நீரஜ் பாண்டே இயக்கத்தில் அஜய் தேவ்கன், தபு நடித்துள்ள படம் `Auron Mein Kahan Dum Tha’. 2002 - 2023 வரையிலான காலத்தில் நிகழும் காதல் கதை.
Benoit Delhomme இயக்கியுள்ள படம் `Mothers' Instinct'. ஆலிஸ் - செலின் இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் நெருக்கமான தோழிகள். ஆனால் திடீரென நிகழும் ஒரு விபத்தும் அதைத் தொடர்ந்து நடக்கும் உளவியல் போராட்டங்களுமே கதை.
Night Shyamalan இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Trap'. கூப்பர் என்ற சீரியல் கில்லர் தன் டீன் ஏஜ் மகளுடன் ஒரு கான்செர்ட்டில் கலந்து கொள்கிறார். பின்புதான் அந்த கான்செர்ட்டே கூப்பரை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்ட ட்ராப் என்று. பின்பு என்ன நடக்கிறது என்பதே கதை.
Tae-Gon Kim இயக்கியிருக்கும் படம் `Project Silence’. விபத்து ஒன்று நிகழ்ந்த பின் நடக்கும் சிக்கல்களும், போராட்டங்களுமே கதை.