இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படைப்புகளின் லிஸ்ட்
இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படைப்புகளின் லிஸ்ட்புதிய தலைமுறை

தங்கலான் | ரகு தாத்தா | Jailer Unlocked | Demonte Colony 2.. இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!

தங்கலான், ரகு தாத்தா, Jailer Unlocked, Demonte Colony 2, வாஸ்கோடாகாமா, My Perfectt Husband என இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படைப்புகளின் லிஸ்ட் இதோ..!

1. Industry: S3 (English) Jio Cinema - Aug 12

Industry: S3
Industry: S3

இளம் பேங்கர்ஸ் மற்றும் ட்ரேடர்ஸ் இணைந்து செய்யும் விஷயங்களே Industry சீரிஸ் கதை. இப்போது இதன் மூன்றாவது சீசன் வெளியாகிறது.

2. Bad Monkey (English) Apple TV+ - Aug 13

Bad Monkey
Bad Monkey

Marcos Siega இயக்கியுள்ள சீரிஸ் `Bad Monkey'. முன்னாள் காவலதிகாரி ஆண்ட்ரூ விசாரிக்கும் ஒரு விஷயம் பிரச்சனையில் மாட்டிவிடுகிறது. அதன் பின் நடப்பவையே கதை.

3. Shekhar Home (Hindi) Jio Cinema - Aug 14

ஸ்ரீஜித் முகர்ஜி - ரோஹன் சிப்பி இயக்கத்தில் கே கே மேனன் நடித்துள்ள சீரிஸ் `Shekhar Home'. ஷெர்லாக் ஹோம்ஸ் போல, ஷேகர் ஹோம்ஸ் ஒரு டிடெக்டிவ். இவர் தீர்க்கும் ஒரு மர்மமே கதை.

இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படைப்புகளின் லிஸ்ட்
பூதாகரமாக வெடித்த தனுஷ் - சிவகார்த்திகேயன் மோதல்?என்னதான் நடக்கிறது?

4. Vera Maari Office: S2 (Tamil) Aha - Aug 15

வேற மாறி ஆஃபீஸ்: S2
வேற மாறி ஆஃபீஸ்: S2

சென்ற வருடம் வெளியான `வேற மாறி ஆஃபீஸ்’ சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. சென்ற முறை ஆஃபீஸில் வேலை செய்தவர்கள், இம்முறை ஸ்டார்ட் அப் துவங்குகிறார்கள். அதில் நடக்கும் கலாட்டாக்களே கதை.

5. Emily in Paris S4: Part 1 (English) Netflix - Aug 15

Emily in Paris S4: Part 1
Emily in Paris S4: Part 1

Emily in Paris 4வது சீசனின் முதல் பாகம் வெளியாகிறது. இளம் அமெரிக்க பெண், பாரிஸில் உள்ள ஒரு மார்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அங்கு நடப்பவையே கதை.

இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படைப்புகளின் லிஸ்ட்
“சிறந்த வெர்சன் உங்களுக்காக..” - The G.O.A.T. படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் அறிவிப்பு!

6. My Perfectt Husband (Tamil) Hotstar - Aug 16

My Perfectt Husband
My Perfectt Husband

மறைந்த இயக்குநர் தாமிரா இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள சீரிஸ் `My Perfectt Husband'. ஒரு கணவனின் ரகசியம் வெளிப்பட்ட பின், அந்தக் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களே கதை.

7. Jailer Unlocked (Tamil) Sun NXT - Aug 16

Jailer Unlocked
Jailer Unlocked

ஜெயிலர் படம் உருவானதைப் பற்றி படக்குழுவினர் பகிரும் சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு.

இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படைப்புகளின் லிஸ்ட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | அபூர்வ ராகங்கள் | கே.பி-யின் ‘ஜென்டில்மேன்’ ரஜினிகாந்த்!

8. Veeranjaneyulu Vihara Yatra (Telugu) ETV Win - Aug 14

Veeranjaneyulu Vihara Yatra
Veeranjaneyulu Vihara Yatra

அனுராக் இயக்கியுள்ள படம் `Veeranjaneyulu Vihara Yatra'. ஒரு குடும்பம் ரோட் ட்ரிப் கிளம்புகிறது. அந்தப் பயணத்தில் நடப்பவையே கதை.

9. Manorathangal (Malayalam) - Aug 15

Manorathangal
Manorathangal

புகழ்பெற்ற எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரின் 9 சிறுகதைகளை, குறும்படங்களாக ப்ரியதர்ஷன், சந்தோஷ் சிவன், ரஞ்சித், ஜெயராஜ், ஷ்யாம் பிரசாத், மகேஷ் நாராயணன், ரதீஷ் அம்பத், அஷ்வதி நாயர் ஆகியோர் இயக்கியுள்ளனர். கமல், மம்மூட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

10. Jackpot (English) Prime - Aug 15

Jackpot
Jackpot

Paul Feig இயக்கியுள்ள படம். ஒரு ஜாக்பாட் பரிசை கொள்ளையடிக்க நடக்கும் சண்டைகளே கதை.

11. The Union (English) Netflix - Aug 15

The Union
The Union

Julian Farino இயக்கியுள்ள படம் `The Union'. மைக் என்ற தொழிலாளி, ஒரு மிஷனுக்காக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பின் நடப்பவையே கதை.

12. EVOL: A Love Story in Reverse (Telugu) Prime - Aug 16

Evol
Evol

ராம் இயக்கிய படம் `EVOL: A Love Story in Reverse’. ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியிருக்கிறது படம்.

13. Darling (Telugu) Hotstar - Aug 13

Darling
Darling

தமிழில் அன்பறிவு படத்தை இயக்கிய அஷ்வின் ராம், தெலுங்கில் இயக்கிய படம் `Darling’. ஹனிமூனுக்கு பாரிஸ் செல்ல வேண்டும் எனப் பணம் சேர்க்கும் ராகவ், எதேர்ச்சையாக சந்திக்கும் அனந்தியை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் என்ன பிரச்சனைகள் எழுகிறது என்பதே கதை.

14. The Birthday Boy (Telugu) Aha- Aug 13

The Birthday Boy
The Birthday Boy

ரவி கிருஷ்ணா நடித்த படம் `The Birthday Boy’. சிறுவயதிலிருந்தே நண்பர்களான ஐவர், மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர். அங்கு ஒரு நண்பரின் பிறந்த நாளை கொண்டாட, அந்தக் கொண்டாட்டம் அவர்கள் வாழ்வை புரட்டி போடுகிறது. அது என்ன என்பதே கதை.

15. Little Hearts (Malayalam) Prime - Aug 13

Little Hearts
Little Hearts

அபி - ஆண்டோ இயக்கிய படம் `Little Hearts’. கட்டப்பனாவில் நிகழும் சில காதல்கள் பற்றிய கதை.

16. Vasco Da Gama (Tamil) Prime - Aug 16

Vasco Da Gama
Vasco Da Gama

RGK இயக்கத்தில் நகுல் நடித்த படம் `வாஸ்கோடகாமா’. குற்றவாளிகளுக்கு டார்கெட், நல்லவர்களுக்கு சிறை என வினோதமான உலகம் ஒன்றில் நிகழும் கதை.

17. Konjam Pesinaal Yenna (Tamil) Prime - Aug 16

கொஞ்சம் பேசினால் என்ன
கொஞ்சம் பேசினால் என்ன

கிரி இயக்கத்தில் வினோத் கிஷன், கீர்த்தி பாண்டியன் நடித்த படம் `கொஞ்சம் பேசினால் என்ன’. அஜய் - சஞ்சனா இருவரின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதே கதை.

18. Stree 2 (Hindi) - Aug 14

Stree 2
Stree 2

2018ல் வெளியான Stree படத்தின் சீக்குவல் உருவாகியிருக்கிறது. மீண்டும் செந்தேரி அமானுஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகிறது. பெண்கள் கடத்தப்படுகிறார்கள். இவை எப்படி சரியாகிறது என்பதை காமெடி கலந்து சொல்கிறது படம்.

19. Thangalaan (Tamil) - Aug 15

தங்கலான்
தங்கலான்

பா இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் `தங்கலான்’. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கே ஜி எஃபில் தங்கத்தை எடுக்க செல்லும் தொழிலாளர்கள் பற்றிய கதை.

இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படைப்புகளின் லிஸ்ட்
“தங்கலான் படத்தை வெளியிட தடையில்லை” - சென்னை உயர்நீதிமன்றம்

20. Demonte Colony 2 (Tamil) - Aug 15

Demonte Colony 2
Demonte Colony 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் `டிமாண்டி காலனி 2’. மீண்டும் ஆத்மாவை ஒருவர் கிளப்பிவிட, பின்பு என்ன ஆகிறது என்ற த்ரில்லரே கதை.

21. Raghu Thatha (Tamil) - Aug 15

ரகு தாத்தா
ரகு தாத்தா

சுமன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் `ரகு தாத்தா’. இந்தி திணிப்புக்கு எதிரான நகைச்சுவை படமாக உருவாகியிருக்கிறது.

22. Mr. Bachchan (Telugu) - Aug 15

Mr Bachchan
Mr Bachchan

அஜய் தேவ்கன் நடித்து 2018ல் வெளியான Raid படத்தின் தெலுங்கு ரீமேக் `Mr. Bachchan'. இந்திய தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை மையமாக வைத்து உருவான படத்தின் தெலுங்கு ரீமேக்கை, ஹரீஷ் ஷங்கர் இயக்க ரவி தேஜா நடித்துள்ளார்.

23. Double iSmart (Telugu) - Aug 15

Double iSmart
Double iSmart

பூரி ஜெகன்னாத் இயக்கிய iSmart Shankar படத்தின் சீக்குவலாக உருவாகியிருக்கிறது, `Double iSmart’. வழக்கம் போல் மாஸ் கமர்ஷியல் மசாலா தான்.

24. Nunakkuzhi (Malayalam) - Aug 15

Nunakkuzhi
Nunakkuzhi

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பேசில் சோசப் நடித்துள்ள படம் `Nunakkuzhi’. இளம் தொழிலதிபரின் வாழ்க்கை மோசமான நிலைக்கு செல்ல, அதன் பின் சிக்கல்களில் இருந்து அவன் தப்பிக்க பொய் மட்டுமே சொல்கிறான். அதனால் நடக்கும் பிரச்சனைகளே கதை.

25. Vaazha (Malayalam) - Aug 15

ஆனந்த் இயக்கியுள்ள படம் `Vaazha’. உறுப்படாதவர்கள் என முத்திரை குத்தப்பட்ட மூன்று இளைஞர்கள், வாழ்வில் என்ன செய்கிறார்கள் என்பதே கதை.

26. Khel Khel Mein (Hindi) - Aug 15

Khel Khel Mein
Khel Khel Mein

முடாசர் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள படம் `Khel Khel Mein’. ஒரு டின்னருக்காக கூடும் நண்பர்கள் குழு ஒன்று, ஒவ்வொருவரைப் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்த துவங்கியதும் கலவரமாகிறது. அதன் பின் என்ன என்பதே கதை. 2016ல் வெளியான Perfect Strangers என்ற இத்தாலிய படத்தின் ரீமேக் இது. ஏற்கெனவே மலையாளத்தில் 12th Man, 1001 Nunakal என இருமுறை ரீமேக் செய்யப்பட்டு வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படைப்புகளின் லிஸ்ட்
அவதார்-3 ரிலீஸ் தேதி எப்போது?

27. Vedaa (Hindi) - Aug 15

Vedaa
Vedaa

நிகில் அத்வானி இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள படம் `Vedaa’. வேதா என்ற பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனப் போராடும் ஒருவனின் கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com