கொட்டுக்காளி, வாழை, ராயன், Kalki 2898 AD, உறவுகள் தொடர்கதை, Hunt என இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படைப்புகளின் லிஸ்ட் இதோ..!
பாலிவுட் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட கதாசிரியர்கள் சலிம் கான் - ஜாவித் அக்தர் பற்றிய ஆவணத்தொடர் `Angry Young Men’. பல பாலிவுட் நட்சத்திரங்களுடன் சலீம் - ஜாவித்தும் இணைந்து பல விஷயங்களை இதில் பகிர்ந்துள்ளனர்.
விவேக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Tikdam’. ஒரு தந்தையும், அவரது இரு மகன்கள் பற்றிய எமோஷனல் படமாக உருவாகியிருக்கிறது.
Robert Lorenz இயக்கத்தில் Liam Neeson நடித்துள்ள படம் `In the Land of Saints and Sinners'. கொலை செய்வதெல்லாம் வேண்டாம் என ரிட்டயர்மெண்டில் இருக்கும் ஒரு ஹிட்மேனுக்கு வேலை வருகிறது. அதை அவர் எப்படி முடித்தார் என்பதே கதை.
Ethan Jesse Coen இயக்கியுள்ள படம் `Drive-Away Dolls’. இரு தோழிகள் செல்லும் ஒரு ரோட் ட்ரிப்பில் நடக்கும் க்ரைம், அதன் பின் நடக்கும் விஷயங்கள் என்ன என்பதே கதை.
Dave Chernin மற்றும் John Chernin இயக்கியுள்ள படம் `Incoming’. நான்கு நண்பர்கள் தங்களிம் முதல் ஹை ஸ்கூல் பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். அதை தொடர்ந்து நடப்பவையே கதை.
பிரித்விராஜ் நடிப்பில் எஸ்ரா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த ஜே கே, அடுத்து இயக்கிய படம் `Grrr'. விலங்குகள் சரணாலயத்தில் சிங்கம் இருக்கும் பகுதியில் இருவர் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பிக்க செய்யும் முயற்சிகளே கதை.
பாரி இளவழகன் இயக்கி நடித்த படம் `ஜமா’. தெருக்கூத்துகளில் பெண் வேடமிடும் கலைஞனும், அவன் சந்திக்கும் பிரச்சனைகளுமே கதை.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்த படம் `Kalki 2898 AD'. எதிர்கால உலகத்தில் சைன்ஸையும் சாமியையும் கலந்து கட்டி ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அத்யாத் இயக்கிய படம் `Viraaji’. நான்கு பேர் கொண்ட குழு, ஒரு திருமணத்திற்கு செல்கிறது. அங்கு நடக்கும் கலாட்டாக்களே கதை.
தனுஷ் இயக்கி நடித்த படம் `ராயன்’. தன் குடும்பத்துக்கு வரும் ஆபத்திலிருந்து பாதுகாக்க நினைக்கும் அண்ணனுக்கு வரும் தடைகள், அதை எப்படி கடக்கிறார் என்பதே கதை.
பாலு ஷர்மா இயக்கத்தில் உருவான படம் `உறவுகள் தொடர்கதை’. கார்த்திக் - ப்ரியா இவர்களின் திருமண வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே படம்.
நசீர் இயக்கத்தில் உருவான படம் `Swakaryam Sambhavabahulam'. ஒரு கிராமத்திலிருக்கும் சில நபர்களின் வாழ்க்கை ஒரு சம்பவத்தால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதே கதை.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `வாழை’. நிஜ சம்பவம் ஒன்றைத் தழுவிய படமாக உருவாகியிருக்கிறது.
வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, ஆனா பென் நடித்துள்ள படம் `கொட்டுக்காளி’. மீனா என்ற பெண்ணுக்கு அவளின் குடும்பம் என்னவெல்லாம் செய்கிறது என்பதே கதை.
மைக்கேல் ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடித்துள்ள படம் `போகுமிடம் வெகு தூரமில்லை’. அமரர் ஊர்தி ஓட்டுநர், ஒரு பிணத்தை எடுத்துச் செல்லும் பயணமே கதை.
காமராஜ் இயக்கியுள்ள படம் `அதர்ம கதைகள்’. நான்கு வெவ்வேறு நபர்களின் பழி தீர்க்கும் படலமே கதை.
மணிபால் இயக்கியிருக்கும் படம் `சாலா’. ராயபுரத்தில் இருக்கும் பார்வதி பாரை அடைய நினைக்கும் இரு கும்பல், அதற்காக நடக்கும் மோதல்களே கதை.
லக்ஷ்மன் இயக்கத்தில் ராவ் ரமேஷ் நடித்துள்ள படம் `Maruthi Nagar Subramanyam'. சுப்ரமணியம் அவரது வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களை காமெடியாக சொல்லும் படம்.
சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் மஞ்சு வாரியர், வைஷாக் நாயர், காயத்ரி அஷோக் நடித்துள்ள படம் `Footage'. ஒரு மர்மமான வீடியோ ஃபுட்டேஜும், அதற்காக நடக்கும் போராட்டமுமே கதை.
வி கே பிரகாஷ் இயக்கத்தில் மீரா ஜாஸ்மின், அஷ்வின் நடித்துள்ள படம் `Palum Pazhavum’. 23 வயதான சுனிலுக்கு ஃபேஸ்புக்கில் அறிமுகமான 33வயது சுமியுடன் காதல். இதில் வரும் சிக்கல்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதே கதை.
ஹரிதாஸ் இயக்கத்தில் அஜூ வர்கீஸ் நடித்துள்ள படம் `Thaanara'. அஞ்சலி - ஆதர்ஷ் இவர்களின் திருமண வாழ்வில் வரும் சிக்கலும், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே கதை.
சாஜி கைலாஷ் இயக்கத்தில் பாவனா நடித்துள்ள படம் `Hunt'. டாக்டர் கீர்த்தி கண்டுபிடிக்க நினைக்கும் ஒரு உண்மையும், அதன் பின் இருக்கும் மர்மங்களுமே கதை.
நடிகை Zoë Kravitz இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் `Blink Twice'. பணக்காரர் ஒருவரின் பார்ட்டிக்கு செல்கிறார்கள் இரு பெண்கள். அதில் ஒருவர் திடீரென காணாமல் போனதும் என்ன ஆகிறது என்பதே கதை.
Fede Alvarez இயக்கியுள்ள படம் `Alien: Romulus'. 1979ல் வெளியான Alien மற்றும் 1986ல் வெளியான Aliens படங்களுக்கு இடைப்பட்ட கதைதான் இது. இளம் விண்வெளி வீரர்கள், ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் ஏலியனால் எதிர்கொள்ளும் பிரச்சனையே கதை.