Saripodhaa Sanivaaram, Buddy, விருந்து, The Diary of West Bengal என இந்த வாரம் தியேட்டர், நேரடி ஓடிடி, தியேட்டருக்கு பிறகான ஓடிடி ரிலீஸ் படங்கள், சீரிஸ் என்னென்ன என்ற லிஸ்ட் இதோ...
Steve Martin - Martin Short - Selena Gomez நடித்து ஹிட்டான சீரிஸ் `Only Murders in the Building'. இதன் நான்காவது சீசன் வெளியாகவுள்ளது. மூன்று ஸ்ட்ரேஞ்சர்ஸ், அவர்களின் குடியிருப்பில் நிகழும் கொலைக்குப் பிறகு, அமெச்சூர் டிடெக்டிவாக மாறுவதுதான் கதை. ஆகஸ்ட் 27ல் இருந்து வாரம் ஒரு எப்பிசோடாக வெளியாகிறது
அனுபவ் சின்ஹா இயக்கியுள்ள சீரிஸ் IC 814: The Kandahar Hijack. 1999ல் இந்திய விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது சீரிஸ்.
'The Hobbit' மற்றும் 'The Lord of the Rings' இந்த இரு கதைகளுக்கு முன்கதையாக உருவானதே `The Lord of the Rings: The Rings of Power'. இதன் இரண்டாவது சீசனின் முதல் மூன்று எப்பிசோடுகள் ஆகஸ்ட் 29ம் தேதியும், மற்ற எப்பிசோடுகள் வாரம் ஒன்றாகவும் வர இருக்கிறது.
ஷ்ரவண் திவாரி இயக்கத்தில் கே கே மேனன் நடித்துள்ள சீரிஸ் `Murshid’. டான் தொழிலில் இருந்து ரிட்டயர் ஆன முர்ஷித் பதான், மீண்டும் ஒரு முறை கோதாவில் இறங்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதன் பின் நடக்கும் அதிரடிகளே சீரிஸ்.
விஷ்வஜாய் முகர்ஜி இயக்கியுள்ள சீரிஸ் `Cadets’. 1998ல் இராணுவ பயிற்சிப்பள்ளியில் சேரும் நான்கு நபர்களின் வாழ்வில் நடப்பவையே கதை.
John Woo 1989ல் அவர் இயக்கிய சைனீஸ் படமான `The Killer'ஐ அவரே அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார். ஸீ என்ற ஹிட்வுமனுக்கு வரும் ஒரு பணியும், அதைத் தொடர்ந்து நடக்கும் அதிரடிகளுமே கதை.
Lee Daniels இயக்கியுள்ள படம் `The Deliverance'. இண்டியானவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சந்திக்கும் அமானுஷ்ய பிரச்சனைகளும் அதற்கான தீர்வுமே கதை.
ஆதித்யா இயக்கிய படம் `Munjya’. நாய் என்றாலே பயந்து நடுங்கும் பிட்டு என்ற இளைஞன் ஒரு பேயிடம் சிக்கிக் கொள்ள, அதன் பின் நடப்பவையே கதை.
Jon Gunn இயக்கத்தில் உருவான படம் `Ordinary Angels'. உடல் நிலை சரியில்லாத மகளை காப்பாற்ற போராடும் தந்தைக்கு வரும் உதவிகள், அதைத் தொடர்ந்து நடப்பவையே கதை.
1936ம் ஆண்டு வெளியான `Dracula's Daughter’ படத்தின் ரீ இமாஜின் வெர்ஷன்தான் `Abigail’. Ready or Not, Scream VI போன்ற ஸ்லாஷர் த்ரில்லர் படங்களை இயக்கிய Matt Bettinelli-Olpin மற்றும் Tyler Gillett இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. அண்டர்வேல்ட் கிங்பின் ஒருவரின் மகளை கடத்தி தனிமையான இடத்தில் அடைத்து வைக்கிறார்கள். ஆனால் அந்த சிறுமியின் உண்மையான குணம் வெளிப்பட்ட பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
பால ராஜசேகருனி இயக்கிய படம் `Honeymoon Express'. காதல், திருமணம், விவாகரத்து போன்றவற்றைப் பற்றிய சட்டையராக உருவாகியிருக்கிறது படம்.
ப்ரத்தீக் இயக்கிய படம் `Chilli Chicken’. சைனீஸ் உணவகத்தில் பணியாற்றும் இளைஞர்களைப் பற்றிய கதை.
ராம் இயக்கியுள்ள படம் `Purushothamudu’. ரச்சித் ராம் என்ற இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளும், அதை எப்படி தீர்க்கிறார் என்பதுமே கதை.
2021ல் வெளியான Godzilla vs. Kong படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கிறது `Godzilla x Kong: The New Empire’. இம்முறை காட்ஸில்லாவும், காங்கும் எந்த யுத்தத்தில் கலந்து கொள்கிறது என்பதே கதை.
தமிழில் வெளியான டெடி படத்தின் தெலுங்கு ரீமேக் `Buddy’. டெட்டி பியர் உயிருடன் வரும் அதே ஒன்லைனில் சில மாற்றங்கள் செய்து உருவாக்கியிருக்கிறார்கள்.
பத்மராவ் இயக்கிய படம் `Sarangadhariya’. கிருஷ்ணாவின் குடும்பத்தில் இருக்கும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளுமே கதை.
விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி - எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் `Saripodhaa Sanivaaram'. அநீதிகளை கண்டு பொங்கும் சூர்யா, சனிக்கிழமைகளில் அதைத் தட்டிக் கேட்க புறப்படுவார். அப்படி அவர் தட்டிக் கேட்கும் போது, கொடூரமான போலீஸ் அதிகாரி தயாவை எதிர்க்க நேர்கிறது. அதன் பின் என்ன என்பதே கதை.
அஞ்சி மனிப்புத்ரா இயக்கியுள்ள படம் `Aay’. சில நண்பர்களும் அவர்களது வாழ்வும் தான் படத்தின் கதை.
கண்ணன் இயக்கத்தில் அர்ஜூன் நடித்துள்ள படம் `விருந்து’. தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள, அவரின் மனைவியும் விபத்துக்குள்ளாகி மரணப்படுக்கையில் இருக்கிறார். அந்த தருணத்தி அவர் ஒருவரை சந்திக்க நினைக்கிறார். அதன் பின் நடப்பைவே கதை.
விவேக் இயக்கத்தில் சன்னி லியோன், ப்ரியாமணி, ஜாக்கி ஷெரஃப், சாரா நடித்துள்ள படம் `கொடேஷன் கேங்க்’. காண்ட்ராக்ட் கில்லிங் செய்யும் பெண் குழு ஒன்றைப் பற்றிய கதை.
பேட்ட திரிகோடி இயக்கியுள்ள படம் `Aho Vikramaarka!’. முரட்டுத்தனமான போலீஸ் ஒருவர், தீராத மர்மம் ஒன்றை தீர்க்க கிளம்புவதே கதை.
கிருஷ்ணதாஸ் இயக்கியுள்ள படம் `Bharathanatyam’. ஒரு குடும்பம் தங்களது கலாச்சாரத்தையும் காப்பாற்ற, என்ன எல்லை வரை செல்கிறது என்பதே கதை.
சரோஜ் இயக்கியுள்ள படம் `The Diary of West Bengal'. பங்களாதேஷில் நிகழும் சம்பவம் ஒன்றைப் பற்றிய படம்.
சந்தோஷ் குமார் இயக்கியுள்ள படம் `Pad Gaye Pange’. சாஸ்த்ரி ஜியின் குடும்பத்தில் நிகழும் ஒரு சம்பவமும் அதன் விளைவுகளுமே கதை.
Chris Weitz இயக்கியுள்ள படம் `Afraid’. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு AI டிவைஸை பரிசோதிக்க, க்ரூடிஸ் குடும்பத்திடம் கொடுக்கப்படுகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
Rupert Sanders இயக்கியுள்ள படம் `The Crow’. 1994ல் வெளியான கல்ட் க்ளாசிக் படம் அதே பெயரில் மார்டனாக மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. எரிக் தனது காதலியின் கொலைக்காக பழிவாங்க வருவதை, ஃபேண்டசி கலந்து சொல்கிறது படம்.