Raghu Thatha, Goli Soda Raising, Nanban Oruvan Vantha Piragu, Bench Life என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...
மானசா ஷர்மா இயக்கியுள்ள சீரிஸ் `Bench Life'. சாஃப்ட்வேர் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட காமெடியான சம்பவங்களே கதை.
தேவன்ஷு சிங் இயக்கியுள்ள சீரிஸ் `Khalbali Records'. ராகவ் என்ற இசைக்கலைஞருக்கு நிகழும் ஒரு விஷயம், அதன் விளைவுகள் இதுவே கதை.
விஜய் மில்டன் இயக்கியுள்ள சீரிஸ் `Goli Soda Raising'. கோலி சோடா படத்தின் ஸ்பின் ஆஃபாக உருவாகியுள்ளது. கோயம்பேட்டில் ஃபுட் ட்ரக் துவங்கும் சில நண்பர்கள், அவர்களுக்கு வரும் சிக்கல்கள், அதிலிருந்து அவர்கள் வெளி வந்தார்களா என்பதே கதை.
Natasha Rothwell நடித்துள்ள சீரிஸ் `How to Die Alone'. மெலிசா, அவரது வாழ்க்கையில் காதல் இல்லை, தனது தோற்றம் ஈர்ப்புடையதாக இல்லை என வருந்துகிறார். ஆனால் சாவின் விளிம்பிற்கு சென்று திரும்பிய பிறகு அவருக்குள் வரும் மாற்றம் என்ன என்பதே கதை.
அதுல் ஷபர்வால் இயக்கியுள்ள படம் `Berlin’. 1993ல் நியூ டில்லியில் ஒரு deaf-mute இளைஞர் உளவாளி என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார். அவரின் பதில்களை மொழிபெயர்க்க வரும் நபர் வந்த பின், அவிழும் மர்மங்கள் என்ன என்பதே கதை.
விஷ்வந்த் பிரதாப் இயக்கியுள்ள படம் `Balu Gani Talkies'. தனது தந்தை தனக்கு அளித்த தியேட்டரை, எப்படி வெற்றிகரமாக நடத்துவது என பாலு செய்யும் முயற்சிகளே கதை.
ஆதித்யா நிம்பல்கர் இயக்கத்தில் விக்ராந்த் மாஸே நடித்துள்ள படம் `Sector 36'. நிஜ சம்பவத்தை தழுவி உருவாகியுள்ள படம். செக்டர் 36ல் இருந்து சில குழந்தைகள் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். இதன் பின்னால் ஒரு சீரியல் கில்லர் இருப்பதை தெரிந்து கொள்ளும் காவலரின் துரத்தல்களும், அதன் பின் என்ன என்பதுமே கதை.
Charlie's Angels, 3 Days to Kill, The Babysitter, Family Switch படங்களை இயக்கிய Joseph McGinty Nichol தற்போது இயக்கியுள்ள படம் `Uglies’. டிஸ்ட்ரோபியன் உலகில், தொலைந்து போன தன் நண்பரைத் தேடி அலையும் பெண்ணின் கதை.
ஜிஸ் ஜாய் இயக்கத்தில் பிஜூ மேனன், ஆசிஃப் அலி நடித்த படம் `Thalavan’. தன் காவல்துறை பணி பற்றி ஓய்வு பெற்ற காவலதிகாரி உதயபானு சொல்கிறார். அதில் Chepanamthota case பற்றி அவர் சொல்வதே படத்தின் கதை.
சூரஜ் டாம் இயக்கியுள்ள படம் `Vishesham’. சைஜூ - சஜிதா திருமண வாழ்க்கையை துவங்கிய சமயத்திலேயே இரு வீட்டாரிடமிருந்தும் குழந்தை பெற்றுக் கொள்ள அழுத்தம் கொடுக்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
Bertrand Bonello இயக்கியுள்ள படம் `The Beast'. எதிர்காலத்தில் ஏ ஐ கண்ட்ரோலில் மனித வாழ்க்கை அமைகிறது. அதில் தன்னுடைய உணர்வுகளை மீட்கப் போராடும் ஒரு பெண்ணின் கதை.
Biodun Stephen இயக்கிய படம் `Muri and Ko’. கார் திருடன் ஒருவனுக்கு காருடன் சேர்த்து, எட்டு வயது சிறுவனும் கிடைக்கிறான். அதன் பின் நடப்பவையே கதை.
அஜய் தேவ்கன் நடித்து 2018ல் வெளியான Raid படத்தின் தெலுங்கு ரீமேக் `Mr. Bachchan'. இந்திய தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை மையமாக வைத்து உருவான படத்தின் தெலுங்கு ரீமேக்கை, ஹரீஷ் ஷங்கர் இயக்க ரவி தேஜா நடித்தார்
அஞ்சி மனிப்புத்ரா இயக்கியுள்ள படம் `Aay’. கிராமத்தில் வசிக்கும் சில நண்பர்களும் அவர்களது வாழ்வும் தான் படத்தின் கதை.
யது வம்சி இயக்கியுள்ள படம் `Committee Kurrollu'. அமைதியான கோதாவரி கிராமத்தில், ஒரு பிரச்சனையால் அந்த அமைதி மொத்தமும் குழைகிறது. அது என்ன பிரச்சனை, எப்படி சரியானது என்பதே கதை.
Emma Westenberg இயக்கிய படம் `Bleeding Love'. நீண்ட வருடங்களாக மகளிடமிருந்து பிரிந்திருந்த தந்தை, மகளுடன் இணைந்து ஒரு பயணம் செல்கிறார். இப்பயணத்தில் நிகழ்வதே கதை.
சுமன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் `ரகு தாத்தா’. இந்தி - திருமணம் இவை இரண்டிலும் கராராக இருக்கும் பெண், அவை இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதை எப்படி கையாள்கிறார் என்பதை நகைச்சுவையாக சொல்கிறது படம்.
ஆனந்த ராம் இயக்கி நடித்துள்ள படம் `நண்பன் ஒருவன் வந்த பிறகு’. ஆனந்த தன்னுடைய வாழ்க்கையில் பல பக்கங்களை புரட்டிப் பார்ப்பதே கதைக் களம்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பேசில் ஜோசப் நடித்த படம் `Nunakuzhi’. பணக்கார இளைஞன், ஒருவர் லேப்டாப்பை மீட்டு வர கிளம்புகிறார். அந்த இரவு அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை காமெடியாக சொல்கிறது படம்.
Colin Cairnes, Cameron Cairnes இயக்கிய `Late Night With the Devil’. 1977ல் ஒரு தொலைக்காட்சி ஒளிப்பரப்பில் நேரலையில் நிகழும் அமானுஷ்ய அசம்பாவிதமே கதை.
ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள படம் `Ajayande Rendam Moshanam’. 1900, 1950, 1990 என மூன்று தலைமுறைகளில் மணியன், குஞ்சிகேலு, அஜயன் என மூவரும் செய்யும் செயல்கள் அதன் விளைவுகளே கதை.
தின்ஜித் இயக்கத்தில் ஆசிஃப் அலி நடித்துள்ள படம் `Kishkindha Kaandam'. நகரத்தில் நிகழும் ஒரு தொந்தரவு, அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணைகளே படத்தின் கதை.
விவேக் இயக்கத்தில் சன்னி லியோன், ப்ரியாமணி, ஜாக்கி ஷெரஃப், சாரா நடித்துள்ள படம் `கொடேஷன் கேங்க்’. காண்ட்ராக்ட் கில்லிங் செய்யும் பெண், அவர்களுக்கு வரும் ஆபத்து பற்றிய கதை.
2019ல் வெளியான Mathu Vadalara படத்தின் இரண்டாம் பாகம். இதனையும் ரிதேஷ் ராணாவே இயக்கியுள்ளார். டெலிவரி ஏஜெண்ட் பாபு, யேசு இருவரும் இம்முறை ஸ்பெஷல் ஏஜெண்ட்டாக மாறி செய்யும் சம்பவங்களே கதை.
அஜித் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ள படம் `Kondal’. முனாம்பம் துறைமுகத்திலிருந்து இமானுவேல் கிளம்ப வேண்டிய சூழல் உருவாகிறது. ஆண்டனியில் படகில் ஏறி சொந்த ஊரிலிருந்து கிளம்புபவருக்கு, அதன் பின் நடக்கும் சம்பவங்களே கதை.
ஓமர் லூலூ இயக்கத்தில் ரஹ்மான் நடித்துள்ள படம் `Bad Boyz'. அந்தப்பன் என்பவனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை காமெடி கலந்து சொல்லும் படம்.
ஹன்சல் மெஹ்தா இயக்கத்தில் கரீனா கபூர் நடித்துள்ள படம் `The Buckingham Murders'. ஜஸ்மீத் என்ற துப்பறியும் நிபுணரிடம், 10 வயது குழந்தையில் கொலை வழக்கு வருகிறது. அந்தக் கொலையாளியைத் தேடும் அவரது விசாரணையே கதை.
James Watkins இயக்கத்தில் ஜேம்ஸ் மெக்வாய் நடித்துள்ள படம் `Speak No Evil’. ஒரு விடுமுறை பயணம், மிகக் கொடூரமான விஷயமாக ஒரு குடும்பத்திற்கு மாறுகிறது. அந்த திக் திக் சம்பவங்களே கதை.