Nayanthara Beyond the Fairytale தொடங்கி Kishkindha Kaandam, Lineman, Sookshmadarshini, நிறங்கள் மூன்று, எமக்குத் தொழில் ரொமான்ஸ் என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...
Dune universeல் இடம்பெற்றுள்ள சீரிஸ் `Dune: Prophecy'. ட்யூன் படத்தின் கதைக்கு 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளே கதை.
Maite Alberdi இயக்கிய The Mole Agent என்ற ஆவணப்படத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது `A Man on the Inside'. ரிட்டயர்ட் புரஃபசர் ஒருவர் செய்யும் சீக்ரெட் எஜெண்ட் வேலையே கதை.
தஹிர், ஸ்வேதா, அன்சல் நடித்த சீரிஸ் `Yeh Kaali Kaali Ankhein'. அரசியல் ஒருவரின் மகள் ஒருவனைக் காதலிக்கிறாள், அவளை மறுத்தால் உயிரை இழக்க நேரும் என்பதால் அவளையே மணந்து கொள்வதாக சென்ற சீசன் முடிந்தது. அதன் பின் என்ன என்பது இந்த சீசன்.
சித்தார்த் இயக்கியுள்ள சீரிஸ் `Thukra Ke Mera Pyaar'. குல்தீப் - ஷான்விகா இடையேயான காதலே கதை.
ராணா டகுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி `The Rana Daggubati Show'. எட்டு எப்பிசோடுகள் உள்ளடக்கிய இதில் துல்கர் சல்மான், நாக சைதன்யா, சித்து, ஸ்ரீலீலா, நானி, ராஜமௌலி, ராம் கோபால் வர்மா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தின் ஆவணப்படமே `Nayanthara Beyond the Fairytale'.
சார்லி நடித்துள்ள படம் `லைன்மேன்’. ஒரு ஈபி லைன்மேன் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே படம்.
`Shame', `12 Years a Slave' படங்களின் இயக்குநர் Steve McQueen இயக்கியுள்ள படம் `Blitz'. இரண்டாம் உலகப்போரில் ஒரு சிறுவனின் பயணமே கதை.
Ben Taylor இயக்கியுள்ள படம் `Joy’. முதல் டெஸ்ட் ட்யூப் பேபியை உருவாக்கிய சம்பவத்தை மையமாகக் கொண்ட படம்.
Vicky Jenson இயக்கியுள்ள அனிமேஷன் படம் `Spellbound’. மாய உலகு ஒன்றில் சிறுமி ஒருத்தி சாபத்தை முறிக்கப் போராடுவதே கதை.
Amber Sealey இயக்கியுள்ள படம் `Out of My Mind'. cerebral palsyயால் வீல் சேரில் முடங்கியுள்ள மெலடியின் கதையே படம்.
Malcolm Washington இயக்கியுள்ள படம் `The Piano Lesson'. 1936ல் நிகழ்ந்த பெரும் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு. பிட்ஸ்பெர்க்கில் உள்ள சார்லஸ் குடும்பம் என்ன நிலமைக்கு உள்ளாகிறது என்பதே கதை.
`Fifty Shades of Grey’ பட இயக்குநர் Sam Taylor-Johnson இப்போது இயக்கிய படம் `Back to Black'. ப்ரிட்டிஷ் இசைக்கலைஞர் Amy Winehouse பற்றிய பயோபிக்காக உருவாகியிருக்கிறது படம்.
புவன் ராஜகோபாலன் இயக்கிய படம் `விவேசினி’. மிக மர்மமான, பேய்கள் நடமாட்டம் உள்ளது என சொல்லப்படும் காட்டுக்குள், சக்தியும் அவளது நண்பர்களும் செல்கிறார்கள். அதன் பின் அவர்கள் தெரிந்து கொள்ளும் உண்மைகளே கதை.
பிரேம் சங்கர் இயக்கத்தில் விநாயகன், சுராஜ் வெஞ்சாராமூடு நடித்த படம் `Thekku Vadakku'. ரிட்டயரான மின் பொறியாளருக்கும், ரைஸ் மில் ஓனருக்கும் இடையே எப்போதும் போட்டி இருக்கும். அவர்களின் பகைமை அவர்களை எங்கு கொண்டு செல்கிறது என்பதே கதை.
தின்ஜித் இயக்கத்தில் ஆசிஃப் அலி நடித்த படம் `Kishkindha Kaandam'. தொலைந்து போன துப்பாக்கியை கண்டுபிடிக்கும் வேளையில் வெளிவரும் பல உண்மைகளே கதை.
A P அர்ஜூன் இயக்கத்தில் துருவ் சார்ஜா நடித்த படம் `Martin’. நாட்டுக்காக போராடும் ஒரு இளைஞனின் கதை.
Fede Alvarez இயக்கிய படம் `Alien: Romulus'. 1979ல் வெளியான Alien மற்றும் 1986ல் வெளியான Aliens படங்களுக்கு இடைப்பட்ட கதைதான் இது. இளம் விண்வெளி வீரர்கள், ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் ஏலியனால் எதிர்கொள்ளும் பிரச்சனையே கதை.
Potsy Ponciroli இயக்கியுள்ள படம் `Greedy People’. ஒரு தீவில் உள்ள நகரத்தில், கொலை ஒன்றிற்குப் பிறகு அமைதி கெடுகிறது. அதன் பின் என்ன என்பதே கதை.
ரமேஷ் செல்லப்பா இயக்கத்தில் உருவான படம் `Laggam’. ஒரு குடும்பம் கடினமான சூழலுக்கு உட்படும் போது என்ன ஆகிறது என்பதே கதை.
Carlos Saldanha இயக்கியுள்ள படம் `Harold and the Purple Crayon'. எதை வரைந்தாலும் கிடைக்கும் ஜீபூம்பா க்ரேயான் ஹாரோல்டுக்கு கிடைக்க அதன் பின் நடப்பவையே கதை.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார், ரஹ்மான் நடித்துள்ள படம் `நிறங்கள் மூன்று’. நான்கு கதைகள் ஒரு புள்ளியில் இணையும் கதை.
பாலாஜி கேசவன் இயக்கத்தில் அஷோக் செல்வன், அவந்திகா நடித்துள்ள படம் `எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. காதலர்களுக்குள் நடக்கும் மோதல்களே கதை.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் `ஜாலியோ ஜிம்கானா’. நான்கு பெண்கள் இணைந்து ஒரு பிணத்தை மறைக்கப் போராடும் காமெடி கலாட்டாவே கதை.
எழில் பெரியவேடி இயக்கியுள்ள படம் `பராரி’. தொழிளாலர்களின் சிக்கல்களைப் பேசும் படம்.
ரவிதேஜா இயக்கத்தில் விஷ்வாக் சென் நடித்துள்ள படம் `Mechanic Rocky’. தன்னிடம் டிரைவிங் கற்றுக்கொள்ளும் இரு பெண்களுடன் லவ், லோக்கல் தாதாவுடன் மோதல், பிறகென்ன வழக்கமான அடிதடி ஆக்ஷன்தான்.
ஈஷ்வர் கார்த்திக் இயக்கியுள்ள படம் `Zebra’ பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சிக்கலில் சிக்கும் ஹீரோவின் கதை.
பாயல் கபாடியா இயக்கியுள்ள படம் `All We Imagine As Light '. மும்பையில் வசிக்கும் பிரபா, அனு என்ற இரு நர்ஸ்களின் கதை.
எம் சி ஜிதின் இயக்கத்தில் நஸ்ரியா, பேசின் ஜோசப் நடித்துள்ள படம் `Sookshmadarshini’. தன் வீட்டுக்கு திரும்பும் இமானுவேல் ஏதோ ஒரு தவறு செய்கிறார் என நினைத்து துப்பு துலக்குகிறார் ப்ரியதஷினி. என்ன நடந்தது என்பதே கதை.
அர்ஜூன் இயக்கியுள்ள படம் `Parakramam’. ஆர்மியில் சேர நினைக்கும் ஹீரோவுக்கு வரும் பிரச்சனைகளே கதை.
வைசாக் இயக்கியுள்ள படம் `Hello Mummy’. போனி தனது திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்சனைகளே படம்.
சூஜித் சிர்கார் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கும் படம் `I Want to Talk'. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப் போராட்டமே களம்.
அனீஸ் பஸ்மி இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்த படம் `Naam’. பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த படம் இப்போது வெளியாகிறது. ஹீரோவின் கடந்த காலம் இப்போது அவரை துரத்துவதே கதை.
Tyler Taormina இயக்கியுள்ள படம் `Christmas Eve in Miller's Point’. கிறிஸ்துமஸைக் கொண்டாட, பூர்வீக வீட்டில் குழுமுகிறது குடும்பம். அதன் பின் நடப்பவையே கதை.
Jon M. Chu இயக்கியுள்ள படம் `Wicked'. எல்ஃபா - க்ளிண்டா இடையேயான நட்பு எப்படி பகையாய் மாறியது என்பதை மாயா ஜாலம் கலந்து சொல்லும் கதை.