இந்த வார தியேட்டர், ஓடிடி லிஸ்ட்
இந்த வார தியேட்டர், ஓடிடி லிஸ்ட்புதிய தலைமுறை

The GOAT | Call Me Bae | Vasco Da Gama | இந்த வார தியேட்டர், ஓடிடி லிஸ்ட்...

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

The GOAT, Call Me Bae, Vasco Da Gama, English Teacher, Problemista என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Series

1. English Teacher (English) Hotstar - Sep 3

English Teacher
English Teacher

Brian Jordan Alvarez நடித்திருக்கும் சீரிஸ் `English Teacher'. ஈவான் என்ற ஆசிரியர், அவரது வாழ்வில் நிகழும் சம்பவங்களைப் பற்றி கூறும் கதை.

2. The Perfect Couple (English) Netflix - Sep 5

The Perfect Couple
The Perfect Couple

Bird Box படம் இயக்கிய Susanne Bier தற்போது இயக்கியிருக்கும் சீரிஸ் `The Perfect Couple'. திருமண நிகழ்வு ஒன்றில், ஒரு பிணம் கிடைக்கிறது. அங்கிருப்பவரில் யார் கொலை செய்தது என்பதை சொல்கிறது சீரிஸ்.

3. Call Me Bae (Hindi) Prime - Sep 6

Call Me Bae
Call Me Bae

Colin D'Cunha இயக்கத்தில் அனன்யா பாண்டே நடித்துள்ள சீரிஸ் `Call Me Bae'. மிகப்பெரிய பணக்கார சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண், அவை எல்லாவற்றையும் இழந்த பின் மிடில் க்ளாஸ் வாழ்க்கை வாழ தடுமாறுவதே கதை.

4. Fight Night: The Million Dollar Heist (English) Netflix - Sep 6

Fight Night The Million Dollar Heist.
Fight Night The Million Dollar Heist.

Craig Brewer இயக்கியுள்ள சீரிஸ் `Fight Night: The Million Dollar Heist '. 1970ம் ஆண்டு மொஹம்மத் அலி மீண்டும் பாக்ஸிங் செய்ய வரும் சமயத்தில், திட்டமிடப்படும் ஒரு கொள்ளை சம்பவம் தான் கதை.

OTT

5. Problemista (English) Jio Cinema - Sep 1

Problemista
Problemista

Julio Torres இயக்கியுள்ள படம் `Problemista’. அலஹாண்ட்ரோ ஒரு பொம்மை வடிவமைப்பாளர். அவர் சாதிக்க நினைக்கும் விஷயங்களை எப்படி செய்கிறார் என்பதே கதை.

6. Visfot (Hindi) Jio Cinema - Sep 6

Visfot
Visfot

Kookie Gulati இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Visfot'. பொருளாதார சூழலில் நேரெதிராக உள்ள இரு குடும்பங்களைப் பற்றிய கதை.

 இந்த வார தியேட்டர், ஓடிடி லிஸ்ட்
’நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.. நீங்கஒரு தலைசிறந்த இயக்குநர்’! - மாரி செல்வராஜை புகழ்ந்த ரஜினி

7. Rebel Ridge (English) Netflix - Sep 6

Rebel Ridge
Rebel Ridge

Jeremy Saulnier இயக்கியுள்ள படம் `Rebel Ridge'. டெர்ரிக்கும் - மோசமான போலீஸ் ஒருவருக்கும் இடையேயான மோதலே கதை.

Post Theatrical Digital Streaming

8. The Ladykiller (Hindi) Youtube - Sep 2

The Ladykiller.
The Ladykiller.

அஜய் பால் இயக்கத்தில் அர்ஜூன் கபூர், புமி பெட்னகர் நடித்த படம் `The Lady Killer’. ஒரு இளைஞன், மிக ஆபத்தான ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். இதன் பின் அவர்களது பயணத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்ற த்ரில்லர் தான் படம்.

9. The Fall Guy (English) Jio Cinema - Sep 3

The Fall Guy
The Fall Guy

Deadpool 2, Bullet Train படங்களை இயக்கிய David Leitch தற்போது இயக்கிய படம் `The Fall Guy'. சினிமா ஸ்டண்ட் மேன் ஒருவருக்கு, காணாமல் போன ஹீரோவை கண்டுபிடிக்கும் பொறுப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் ஆக்‌ஷன்களே கதை.

10. Vasco Da Gama (Tamil) Aha - Sep 6

Vasco Da Gama
Vasco Da Gama

RGK இயக்கத்தில் நகுல் நடித்த படம் `வாஸ்கோடகாமா’. குற்றவாளிகளுக்கு டார்கெட், நல்லவர்களுக்கு சிறை என வினோதமான உலகம் ஒன்றில் நிகழும் கதை.

 இந்த வார தியேட்டர், ஓடிடி லிஸ்ட்
IC 814: The Kandahar Hijack | பயங்கரவாதிகளின் உண்மை பெயர்களை வெளியிட நெட்பிளிக்ஸ் முடிவு!

11. Pavi Caretaker (Malayalam) manoramaMAX - Sep 6

Pavi Caretaker
Pavi Caretaker

திலீப் நடித்த படம் `Pavi Caretaker'. பவி, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கேர் டேக்கர், அவருக்கு அமையும் ஒரு துணை மூலம் பவியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே கதை. 

12. Kill (Hindi) Hotstar - Sep 6

Kill
Kill

நிகில் நாகேஷ் பட் இயக்கிய படம் `Kill’. ஒரு டிரெய்னுக்குள் கொள்ளையர்கள் புகுந்துவிட, அவர்களை எதிர்த்து போராடுகிறார் ஹீரோ. அவர்களை வென்றாரா என்பதே மீதிக்கதை.

13. Bad Boys: Ride or Die (English) Netflix - Sep 6

Bad Boys Ride or Die
Bad Boys Ride or Die

Bad Boys பட வரிசையில் நான்காவது பாகம் `Bad Boys: Ride or Die'. மைக் - மார்கஸ் இவர்களின் முன்னாள் கேப்டன் ஒரு வழக்கில் குற்றவாளியாக சிக்க வைக்கப்படுகிறார். அவரை நிரபராதி என நிரூபிக்க மைக் - மார்கஸ் செய்யும் சாகசங்களே கதை.

Theatre

14. The GOAT (Tamil) - Sep 5

The GOAT
The GOAT

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் `GOAT’. காந்தி Special Anti-Terrorist Squad முன்னாள் ஏஜென்ட். கடந்த காலத்தில் அந்த குழு செய்த ஒரு விஷயத்தின் விளைவு, நிகழ்காலத்தில் துரத்துகிறது. அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.

 இந்த வார தியேட்டர், ஓடிடி லிஸ்ட்
‘அண்ணன் வர்றார் வழிவிடு’ | The GOAT கொண்டாட்டம்... விசில் போடும் ரசிகர்கள்...!

தமிழில் கோட் மட்டுமே. Ibbani Tabbida lleyali (Kannada) - Sep 5, 35 (Telugu), Beetlejuice Beetlejuice (English), Strange Darling (English) - Sep 6 ஆகிய படங்கள் ரிலீஸ் என சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவை வருவது இந்தக் கட்டுரை எழுதும் வரை உறுதியாகவில்லை. 

மற்ற மாநிலங்களில் வேறு படங்களின் புக்கிங் துவங்கினாலும் கூட தமிழ்நாட்டில் செப்டம்பர் 5ம் தேதி கோட் மட்டுமே சோலோ ரிலீஸாக களம் இறங்குகிறது. அதற்குப் பின்னும் கூட பெரிய அளவில் எந்தப் படங்களும் வராததால்,

இந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறை GOATக்குதான்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com