Jim Loach, Shaun James Grant இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Criminal Record'. ஒரு அனுபவம் மிக்க மூத்த டிடெக்டிவ் மற்றும் புதிதாக பணியில் சேர்ந்த டிடெக்டிவ் இருவரும் இணைந்து ஒரு பழைய கேஸை கிளறுகிறார்கள். அந்த கேஸின் மர்மத்தை தீர்த்தார்களா என்பதே கதை.
Ishqiya, Udta Punjab, Sonchiriya படங்களை இயக்கிய Abhishek Chaubey இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Killer Soup'. செஃப் ஆகும் கனவுகள் இருந்தாலும் திறமை கைகூடிவராதவர் ஸ்வாதி. தன் கணவன் பிரபாகரை விட்டு பிரிந்து, உமேஷுடன் இணைய விரும்புகிறார். ஸ்வாதியாக கொன்கொனா சென் நடிக்க, பிரபாகர், உமேஷ் என இரண்டு பாத்திரங்களில் மனோஜ் பாஜ்பாய் நடித்திருக்கிறார். ப்ளாக் காமெடி பிரியர்களுக்கு தரமான விருந்து.
Bharat Nalluri, Jocelyn Moorhouse, Kim Mordaunt இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Boy Swallows Universe’. 1980களில் நிகழும் கதை. ஆஸ்திரேலியாவின் Brisbane நகரில் இரு சகோதரர்களின் வாழ்க்கை, ஒரு போதைப் பொருள் கும்பல் தலைவனால் எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதே கதை.
Marvel Comicsல் வந்த Maya Lopez கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் சீரிஸ் `Echo'. பேச்சு சவால் கொண்ட Maya Lopez, ஒரு கேங்ஸ்டரில் வழிகாட்டுதலின் படி அதிரடி ஆளாக வளர்கிறார். அதன் பின் அவருக்கு வரும் எதிரிகள் யார்? அவர்களை எப்படி எதிர்கொண்டார் என்பதே கதை.
சேரனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `ஜர்னி’. ஐந்து நபர்கள், ஐந்து காரணங்கள், அவர்கள் ஜெயிக்க ஒரே வாய்ப்பு. அதில் ஜெயிக்கப் போகும் அந்த ஒரு நபர் யார்? என்பதே கதை.
டென்னிஸ் விளையாட்டைப் பற்றிய ஆவணத் தொடரே `Break Point'. முதல் சீசன் சென்ற வருடம் வெளியான நிலையில் இரண்டாவது சீசன் வருகிறது. உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்களுடன் பயணம், அவர்கள் தயாரவது, விளையாடுவது எனப் பலவற்றை சொல்லும் தொடர்.
நக்கலைட்ஸ் ராஜேஷ்வர், பிரசன்னா தயாரிப்பில், எம்.எஸ்.ராஜா இயக்கியிருக்கும் படம் `செவப்பி’. ஒரு சிறுவனுக்கும், செவப்பி என்ற அவனுடைய செல்லப்பிராணி கோழிக்கும் இடையேயான பாசம் தான் கதை. ஒரு கட்டத்தில் சிறுவனும் கோழியும் பிரிய நேர்கிறது. மீண்டும் அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதை சொல்கிறது படம். பிக்பாஸ் பூர்ணிமாவும் ஒரு பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
The Italian Job, FF8, Men in Black: International போன்ற படங்களை இயக்கிய F. Gary Gray இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Lift'. உலகத்தரமாக கொள்ளையடிக்கும் கும்பல், 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிக்கும் விமானத்தில் இருந்து 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தைக் கொள்ளையடிக்க திட்டமிடுகிறது. அது நடந்ததா என்பதே கதை. Standup Comedian Kevin Hart லீட் ரோலில் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
Thomas Vincent இயக்கத்தில் உருவான படம் `Role Play’. எம்மா தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் நியூ ஜெர்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் தான் ஒரு கான்ட்ராக்ட் கில்லர் என்ற ரகசியத்தை காத்து வருகிறார். அது ஒரு கட்டத்தில் எம்மாவின் கணவனுக்குத் தெரிந்து விட, அதன் பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
இந்தியில் Band Baaja Baaraat, Ladies vs Ricky Bahl, Shuddh Desi Romance, Fan படங்களை இயக்கிய மனீஷ் ஷர்மா இயக்கி வெளியான படம் `Tiger 3. ஏஜெண்ட் டைகர் - ஸோயா இருவரும் தேச விரோதி என முத்திரை குத்தப்படுகிறார்கள். அந்த களங்கத்தை துடைக்க அவர்கள் எடுக்கும் அதிரடி முடிவுகளே கதை.
Ishrat R Khan இயக்கத்தில் உருவான படம் ` Guthlee ladoo’. குத்லீ ஒரு தூய்மைப் பணியாளர் மகன். அவனுக்கு பள்ளி சென்று படிக்க ஆசை, ஆனால் அவனது சாதியை காரணம் காட்டி படிப்பு மறுக்கப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அவனை பள்ளியில் சேர்த்துக் கொள்ள விரும்பினாலும், அங்கிருக்கும் அதிகாரம் மிக்கவர்களை அவரால் பகைத்துக் கொள்ள முடியாது. இதன் பின் அந்த தலைமை ஆசிரியருக்கும், குத்லீக்கும் இடையேயான உரையாடலே கதை.
Christopher McQuarrie இயக்கத்தில் Tom Cruise நடித்து வெளியான படம் `Mission: Impossible - The Dead Reckoning Part I'. இந்த முறை ஈதன் ஹண்டும் அவனது Impossible Missions Force குழுவும் the Entity என்ற சக்தி வாய்ந்த AIஐ எதிர்த்து போராடுகிறார்கள். அதில் பாதி கதையை முடித்ததும் பார்ட் 1 முடிந்தது. அடுத்த பாகத்துக்கு 2025 வரை காத்திருக்க வேண்டும்.
தேஜா மர்னி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், வரலக்ஷ்மி, ராகுல் விஜய், ஷிவானி நடித்த படம் `Kotabommali PS’. 2021ல் வெளியான மலையாளப்படம் `Nayattu’வின் தெலுங்கு ரீமேக் தான் இது. சில காவலர்கள் ஒரு சதி வலையில் சிக்கிக் கொள்ள, அதிகாரமும், அரசியலும் அவர்களை எப்படி வேட்டையாடுகிறது என்பதே கதை.
ஆனந்த் படா இயக்கத்தில் உருவான படம் ` Lingoccha’. சிவா - நூர்ஜஹான் இருவரது காதல் கதைதான் படம்.
Million Dollar Arm, Cruella பண்டங்களை இயக்கிய Craig Gillespie இயக்கிய படம் `Dumb Money'. கேம் ஸ்டாப் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்து வால் ஸ்ட்ரீட்டை அலர விட்ட Keith Gillன் கதைதான் படம்.
`Anjaam Pathiraa’ படத்தின் வெற்றிக்குப் பிறகு Midhun Manuel Thomas இயக்கியிருக்கும் படம் `Ozler'. ஆப்ரஹாம் ஓஸ்லர் என்ற காவலதிகாரி, கையிலெடுக்கும் சீரியல் கொலை வழக்கும் அதிலிருந்த மர்மங்களுமே கதை.
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் `கேப்டன் மில்லர்’. 1930 - 1940 காலகட்டத்தில் நடக்கும் கதை. ப்ரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது, கேப்டன் மில்லர் என்ற ஒருவன் செய்த கொள்ளைகளும், கொலைகளும், அதற்கு பின் இருந்த காரணங்களும் என விரிகிறது படம்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் `அயலான்’. தவறுதலாக பூமியில் லேண்டான ஏலியன் மீண்டும் தன் கிரகத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கும் போது, ஹீரோ கண்ணில்படுகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள படம் `மிஷன் சேப்டர் 1’. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் சிறையில் உள்ள ஒரு கைதியின் கதை. குற்றமே செய்யாமல் சிறையில் அடக்கப்பட்ட அவன், தன் மகளை சந்திக்க எடுக்கும் அதிரடி முயற்சிகளே கதை.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்திருக்கும் படம் `Guntur Kaaram'. வீட்டைவிட்டு ஒதுக்கப்பட்ட மகன் பெரிய ரௌடியாகிறார். தன் அம்மாவுக்கு ஆபத்து எனத் தெரிந்ததும் அவரை பாதுகாக்க திரும்ப வருகிறார். பின்பு நடக்கும் அடிதடி ஆக்ஷனே படம்.
Awe படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரஷாந்த் வர்மா இயக்கியிருக்கும் படம் `Hanu Man'. அஞ்சனாத்ரி என்ற நகரத்தில் ஹனுமானுடைய சக்திகளைப் பெற்ற ஹீரோ, ஊருக்கு ஒரு ஆபத்து வரும் போது எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் படம் `Merry Christmas'. இந்தி மட்டுமில்லாமல் தமிழிலும் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். முன்பின் அறிமுகமில்லாத ஆணும் - பெண்ணும் கிறிஸ்துமஸ் இரவில் சந்திந்துக் கொள்கிறார்கள். அந்த இரவில் நடக்கும் பரபர நிகழ்வுகளே படத்தின் கதை.
சைலேஷ் இயக்கத்தில் வெங்கடேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் `Saindhav’. சைந்தவ் தன் மகளை ஒற்றை ஆளாக வளர்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் மனோக்யாவுடன் காதலும் மலர்கிறது. இந்த சமயத்தில் தன் மகளுக்கு Spinal Muscular Atrophy எனத் தெரியவருகிறது. அதனை சரிசெய்யும் இன்ஜெக்ஷன் 16 கோடி. அந்தப் பணத்தை சம்பாதிக்க சைந்தவ் எடுக்கும் முடிவு என்ன? அவரது கடந்தகாலம் என்ன? என்பது மீதிக்கதை.
விஜய் பின்னி இயக்கத்தில் நாகார்ஜூனா, ஆஷிகா, அல்லரி நரேஷ், மிர்ணா நடித்திருக்கும் படம் `Naa Saami Ranga'. மலையாளத்தில் ஜோஷி இயக்கி 2019ல் வெளியாகி ஹிட்டான Porinju Mariam Jose படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இது. 1980 -90களில் திரிஷூரில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்ட கதை. ஒரு ரௌடியின் வாழ்க்கையில் இருந்த நட்பு, காதல், பழிவாங்குதல் போன்றவற்றை சொல்கிறது.