Percy Jackson & the Olympians நாவலை மையமாக வைத்து அதே பெயரில் உருவாகியிருக்கிறது சீரிஸ். க்ரீக் கடவுள் ஸியூஸின் தண்டர்போல்ட்டை, 12 வயது பெர்சி ஜேக்சன் திருடிவிட்டான் என குற்றம் சாட்டப்படுகிறான். இதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.
Divyanshu Malhotra இயக்கத்தில் உருவாகியிருக்கிறது Flames சீரிஸின் நான்காவது சீசன். டீன் ஏஜ் இளசுகளின் காதல், அதில் வரும் சிக்கல்களே கதை.
What If...? முதல் சீசனைப் போலவே இதிலும் இந்த தலை அந்த உடலுடன் இணையப்போகிறது மொமண்ட்களை தொடர்கிறார்கள். உதாரணத்திற்கு 1602லேயே அவஞ்செர்ஸ் அசம்பல் ஆகியிருந்தால் ஒரு சின்ன கற்பனை என்றெல்லாம் ஒரு எப்பிசோட் இருக்கிறது. 22ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை மொத்தம் 9 எப்பிசோடுகளை ஒவ்வொரு நாளும் வெளியிட இருக்கிறார்கள்.
கேரளாவையே அதிரவைத்த ஒரு குற்றச்சம்பவத்தை பற்றிய ஆவணப்படம் தான் `Curry & Cyanide The Jolly Joseph Case’. கோழிக்கூடில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் (இரண்டு வயது குழந்தை கூட) சைனைடு வைத்துக் கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு காரணமாக அவர்கள் கைது செய்தது யார்? நடந்தது என்ன என்பவற்றை விளக்குகிறது இந்த ஆவணப்படம்.
2018ல் வெளியான` A Star Is Born’ படத்திற்குப் பிறகு மீண்டும் `Maestro’வில் இயக்குநராக களமிறங்கியிருக்கிறார் நடிகர் Bradley Cooper. இசைக்கலைஞர் Leonard Bernstein - நடிகை Montealegre Cohn Bernstein இருவரின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது படம். Leonard Bernstein நடித்திருப்பதும் Bradley Cooper தான்.
பாலிவுட் நடிகர், இயக்குநர் Saurabh Shukla இயக்கியிருக்கும் படம் `Dry Day'. ஜகோதார் என்ற நகரத்தைச் சேர்ந்த கன்னு ஒரு குடிநோயாளி. அவருக்கு சீக்கிரம் கவுன்சிலர் ஆகும் ஆசையும் உண்டு. இந்த சமயத்தில் அவரது குடிப்பழக்கத்தை காரணம் காட்டி, இப்படியே தொடர்ந்தால் வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிடுவேன் என மிரட்டுகிறாள் கன்னுவின் மனைவி. கவுன்சிலர் கனவு + மனைவியை சமாதானப்படுத்த ஆகிய ரெண்டு ப்ராப்ளம் ஒரே சொல்யூஷன் என கன்னு போடும் திட்டமே படம்.
Mani Shankar இயக்கியுள்ள படம் `Hey Kameeni’. கௌரி என்ற பெண் காமினியை சந்தித்த பின், கௌரியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களே படம்.
Zack Snyder இயக்கத்தில் உருவாகியிருக்கிறது `Rebel Moon - Part One: A Child of Fire'. அடக்குமுறையை கையாளும் அரசாங்கத்தை எதிர்த்து சண்டை செய்யும் ரெபல் கோராவின் கதையே இது. இதன் சீக்குவல் `Rebel Moon – Part Two: The Scargiver’ April 19, 2024 வெளியாக இருக்கிறது.
Emerald Fennell இயக்கியிருக்கும் படம் `Saltburn’. கல்லூரி விடுமுறைக்காக தனது குடும்பத்தை சந்திக்க எஸ்டேட் கிளம்பும் Felix Catton, தன் வகுப்புத் தோழன் Oliver Quickஐ விருந்தாளியாக அழைத்துச் செல்கிறான். அங்கு நடக்கும் விஷயங்களே படம்.
Maggie Q லீட் ரோலில் நடித்திருக்கும் படம் `Fear the Night'. இராணுவப் போராளி டெஸ் அவரது தங்கையின் பேச்சுலரேட் பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு அழையா விருந்தாளியாக சில மர்ம நபர்கள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கையையும், அவளது நண்பர்களையும் டெஸ் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.
நந்தமுரி பாலகிருஷ்ணாவின் கலாட்டாவான ஷோ `Unstoppable with NBK’. Limited Editionன் மூன்றாவது எப்பிசோடில் இயக்குநர்கள் ஹரீஷ் ஷங்கர், ஜெயந்த் மற்றும் நடிகைகள் சுஹாசினி, ஷ்ரேயா சரண் விருந்தினர்களாக சிறப்பித்திருக்கிறார்கள்.
Hereditary, Midsommar படங்களை இயக்கிய Ari Asterன் மூன்றாவது படம் `Beau Is Afraid’. Beau என்ற கதாப்பாத்திரத்தின் பயங்களைப் பற்றியதே படம்.
பேசில் ஜோசப் லீட் ரோலில் நடித்த மலையாளப்படம் `Family’. ஒரு குடும்பம் வாரணாசிக்கு கிளம்புகிறது, இந்தப் பயணத்தில் நடக்கும் கலாட்டாக்களே கதை.
Gareth Edwards இயக்கிய படம் `The Creator'. மனிதர்களுக்கும் - AI போர் படைக்கும் இடையேயான யுத்தமே கதைக் களம்.
அருள்செழியன் இயக்கத்தில் யோகிபாபு, வித்தார்த் நடித்த படம் `குய்கோ’. சவுதி அரேபியாவில் வேலை செய்பவர் மலையப்பன். அவரின் தாய் ஊரில் இறந்துவிட, தான் வரும் வரை ஃப்ரீசரில் வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறார். இதன் பிறகு நடப்பவைதான் கதை.
Panja Vaisshnav Tej, Joju George, Sreeleela நடித்த படம் `Aadikeshava’. ஜாலியாக சுத்தும் இளைஞன், அவனுக்கு ஒரு காதல், எந்த அநியாயம் நடந்தாலும் தட்டிக்கேட்கும் வீரம் என மிகப் புதுமையான இந்திய சினிமாவே பார்க்காத கதாபாத்திரத்தில் பஞ்ச வைஷ்ணவ் தேஜ். அவர் என்ன பஞ்சாயத்தை பைசல் பண்ணுகிறார் என்பதே கதை.
Shine Tom Chacko, Ahaana Krishna நடித்திருக்கும் படம் `அடி’. நந்து, கீத்திகா இருவரது திருமணத்திற்குப் பிறகு எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவம். அதன் பின் வரும் பிரச்சனைகளே படம்.
Raj B Shetty லீட் ரோலில் நடித்த படம் Toby. டோபி ஒரு அப்பாவி, ஆனால் அவனைப் பயன்படுத்தி தனக்குத் தேவையான கொலைகளை செய்து கொள்கிறார் ஊர்த்தலைவர் ஆனந்தா. ஆனால் ஆனதாவை எதிர்க்கும் சூழல் டோபிக்கு உருவாகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதே படம்.
Wrong Side Raju குஜராத்தி படம் மூலம் பரவலாக அறியப்பட்ட Mikhil Musale இயக்கத்தில் உருவான படம் Sajini Shinde Ka Viral Video. காணாமல் போனதாக கருதப்பட்ட பள்ளி ஆசிரியை சஜினி ஷிண்டே, பாலத்திற்கு கீழே பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். அவர் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ வைரல் ஆனதால், தற்கொலை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை என்ன என்பதை விசாரிக்கிறார்கள். அந்த விசாரணையே படம்.
Rajkumar Hirani இயக்கத்தில் Shah Rukh Khan, Taapsee Pannu, Vicky Kaushal, Boman Irani நடித்திருக்கும் படம் `Dunki’. நான்கு நண்பர்கள் பஞ்சாபில் இருந்து இங்கிலாந்து செல்ல விரும்புகிறார்கள். டிக்கெட்டுக்கு காசோ, விசாவோ கூட இல்லாத அவர்கள் வாழ்வில் ஒரு இராணுவ வீரர் வருகிறார். அவர்களின் கனவை நிறைவேற்றித் தருவதாக வாக்களிக்கிறார். இதன் பின் நடப்பவையே கதை.
Jeethu Joseph இயக்கத்தில் Mohanlal, Priyamani, Anaswara Rajan நடித்திருக்கும் படம் `Neru'. பார்வை சவால் கொண்ட ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதிக்கு நியாயம் கேட்டு நடக்கும் சட்டப் போராட்டம் தான் படத்தின் கதை.
James Wan இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Aquaman And The Lost Kingdom'. 2018ல் வெளியான Aquaman படத்தின் சீக்குவலாக நகர்கிறது கதை. Cursed Black Tridentஐ அடைவதற்காக மிகப்பழமையான ஒரு சக்தியை Black Manta வெளிப்படுத்துகிறார். அவரைத் தடுக்க Aquamanக்கு ஒரு உதவி தேவை. அதை அவர் பெற்றாரா, Black Mantaவை தருத்தாரா என்பதுதான் கதை.
அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா, சாந்தினி நடித்துள்ள படம் `சபா நாயகன்’. நாயகனுக்கு பள்ளியில் துவங்கி வரும் பல காதல்கள், அவற்றால் அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே கதை.
வித்தார்த் - சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கிறது `ஆயிரம் பொற்காசுகள்’. வேலைவெட்டிக்குச் செல்லாமல் இருக்கும் மாமா - மருமகன் காம்போவின் கையில் ஆயிரம் பொற்காசுகள் புதையலாகக் கிடைக்கிறது. இதில் பங்கு கேட்டு வெளியாள் ஒருவனும் வர, அதன் பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
Prashanth Neel இயக்கத்தில் Prabhas, Prithviraj நடித்திருக்கும் படம் `Salaar: Cease Fire - Part 1’. தன் நண்பனுக்காக பல எதிரிகளை துவம்சம் செய்கிறார் ஹீரோ. ஒரு கட்டத்தில் அவர்களுக்குள்ளேயே பகை உருவானால் என்ன ஆகும் என்பதே படம். முழுக்க Violence... Violence... Violence... என்பதால் படம் A சான்றிதழ் பெற்றிருக்கிறது.