ஒன்பது அனிமேட்டட் குறும்படங்களின் தொகுப்பே இந்த ஸ்டார் வார்ஸ் விஷன் வால்யூம் 2
துருக்கிய மொழி சீரிஸ் `தி டெய்லர்’. மிக பிரபலமான டெய்லர் ஒருவர், தனது நண்பரின் வருங்கால மனைவிக்கு திருமண உடையை தைக்கிறார். ஆனால் இந்த மூவருக்கும் பல ரகசியங்கள் இருக்கிறது, அவை வெளிவரும் போது என்ன பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதே சீரிஸின் கதை.
அரசி சார்லொட்க்கும் அரசர் ஜார்ஜூக்குமான திருமணம் பற்றிய சீரிஸ் தான் இது. `ப்ரிட்கர்டன்’ சீரிஸின் ப்ரீக்குவலாக உருவாகியிருக்கிறது இந்த `குயின் சார்லொட்: ஏ ப்ரிட்கர்டன் ஸ்டோரி’.
ஓஸி என்ற இளம் சுமோ வீரரைப் பற்றிய ஜப்பானிய மொழி சீரிஸ் தான் இந்த ‘சான்சுரி’. ஓஸியின் வாழ்க்கை, அவனது போட்டிகள், அவனுடைய சுபாவத்தால் நடக்கும் விளைவுகள் என பலவற்றை பேசுகிறது சீரிஸ்.
சத்யஜித் ரே எழுதிய `கங்டோகே கோண்டோகோல்’ குறு நாவலை பெங்காலி வெப் சீரிஸாக இயக்கி நடித்திருக்கிறார் பரம்ப்ரட்டா. ஃபெலுடா - டோப்சே என்ற டிடெக்டிவ் கூட்டணி பல மர்மமான கேஸ்களை தீர்த்து வைத்திருக்கிறது. அவர்களுக்கு ஒரு தொழிலதிபரின் கொலைக் கேஸை கண்டுபிடிக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதை செய்தது யார் எனக் கண்டுபிடித்தார்களா என்பதே கதை.
சாவித்ரி ஒரு அண்டர்கிரவுட் ட்ரக் கார்டெல் தலைவி. தனக்கடுத்து தன்னுடைய இடத்தை யாருக்கு அளிப்பது என்பதற்கு ஒரு பேட்டியை அறிவிக்கிறார். யார் வென்றது என்பதே சீரிஸின் கதை. இந்த இந்தி மொழி சீரிஸில் டிம்பிள் கபாடியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 15 1947, பிரிட்டிஷிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. ஆனால் சுதந்திரம் கிடைத்ததே தெரியாமல் ஒரு கிராமம் இருந்தால்?! அப்படியான ஒரு கிராமம் தான் செங்காடு. அங்கு அவர்களை ஆளும் ப்ரிட்டிஷ் அதிகாரிக்கும், கிராமத்து மக்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை தான் கதைக் களம். பொன் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக் நடித்துள்ளார்.
லவ் ராஜன் இயக்கத்தில் ரன்பீர் கபூர் - ஷ்ரத்தா கபூர் நடித்த இந்திப் படம் `தூ ஜூத்தி மேய்ன் மக்கர்’. ரோஹன் ஒரு ப்ரேக்கப் ஸ்பெஷலிஸ்ட். காதலில் இருந்து ப்ரேக்கப் வேண்டும் என யாராவது கேட்டால், இணையரது மனம் கோணாமல் அவர்களது ப்ரேக்கப்பை நடத்திவிடுவார். ஒரு சந்தர்பத்தில் அவருக்கு வரும் ஒரு ப்ரேக்கப் அசைன்மெண்ட் அவரது வாழ்க்கையை சிக்கலாக்குகிறது. அதை எப்படி கையாள்கிறார் என்பதை ரொமான்ஸ் காமெடி கலந்து கொடுக்கிறது படம். இதில் நமது அப்டேட் ஸ்டார் போனி கபூர் நடித்திருக்கிறார் என்பது கொசுறு தகவல்.
ரமேஷ் இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடித்த தெலுங்குப் படம் `மீட்டர்’. போலீஸ் வேலையையே வெறுக்கும் ஹீரோ, சந்தர்ப சூழலால் போலீஸ் ஆக நேர்கிறது. இதன் பின் ஹீரோயினுடன் கொஞ்சம் காதல், வில்லன்களுடன் கொஞ்சம் மோதல் என மிகப்புதுமையான கதைக் களத்தைக் கொண்ட படம்.
தமிழில் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான எட்டு தோட்டாக்கள் படத்தின் மலையாள ரீமேக் தான் `கொரோனா பேப்பர்ஸ்’. சீனியர் இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்க ஷேன் நிகம், ஷைன் டாம் சாக்கோ, சித்திக், காயத்ரி நடித்திருந்தார்கள். தொலைந்து போகும் ஒரு காவலதிகாரியின் துப்பாக்கி, அதை வைத்து நடக்கும் குற்றங்கள் என சுவாரஸ்யமான ஒன்லைன். ரீமேக் எப்படி இருக்கிறது எனப் பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்.
பிரபல பாடகர் எட் ஷீரன் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது ஹாட்ஸ்டார். எட்டின் வாழ்க்கையைப் பற்றியும், அவரது இசைப் பயணத்தைப் பற்றியும் கூறுகிறது ஆவணப்படம்.
சரவண ஷக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப் நடித்திருக்கும் படம் குலசாமி. விமலில் முந்தைய ரிலீஸான தெய்வ மச்சான் படத்துடன் ஜோடியாக வர வேண்டிய படம் ஜஸ்ட் மிஸ்ஸாகி சிங்கிளாக வருகிறது. ஹீரோவின் தங்கைக்கு சில பல பிரச்சனைகள். அதை எப்படி ஹீரோ தடுக்கிறார் என்பதே படத்தின் ஒன்லைன்.
மோகன் - சுந்தர் என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கி சத்யராஜ் - அஜ்மல் நடித்துள்ள படம் `தீர்க்கதரிசி’. நடக்க இருக்கும் அனைத்தையும் போலீஸுக்கு சொல்லும் மர்ம நபர், தொடந்து நடக்கும் குற்றங்கள், அதைத் தடுக்க செல்லும் காவல்துறையினர் இதுதான் படத்தின் ஒன்லைன்.
இரண்டு வாரங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி பம்பர் ஹிட் அடித்த படம் `விருபாக்ஷா’, இந்த வாரம் தமிழ் டப்பில் வெளியாகிறது. சாஜ் தரம் தேஜ், சம்யுக்தா நடித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் வர்மா இயக்கியிருக்கிறார். ருத்ரவனம் எனும் ஊரில் தொடர்ந்து மர்மான மரணங்கள் நடக்கிறது. அதன் பின் இருக்கும் அமானுஷ்யம் என்ன? என்பதை ஹீரோ கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் கதை.
கோபிசந்த் நடிப்பில் வெளியாகும் தெலுங்குப் படம் `ராமபாணம்’. இதற்கு முன் `லக்ஷ்யம்’, `லௌக்யம்’ என கோபிசந்துக்கு இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த ஸ்ரீனிவாஸ் தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இயற்கையான உணவுகளை மக்களுக்கு கொடுக்க நினைக்கும் ஒருவர், அவரை எதிர்க்கும் கார்ப்ரேட் வில்லன், வில்லனை வெளுக்க வரும் ஹீரோ என பக்கா மாஸ் படம்.
அல்லரி நரேஷுக்கு `நாந்தி’ படம் மூலம் கம்பேக் கொடுத்த விஜய் கனகமேடலா இயக்கியிருக்கும் தெலுங்குப் படம் `உக்ரம்’. அல்லரி நரேஷ், மிர்னா இதில் நடித்திருக்கிறார்கள். சிவா ஒரு போலீஸ் அதிகாரி. நகரத்தில் திடீரென பல நபர்கள் காணாமல் போக, அந்த வழக்கை விசாரித்து இதன் பின் இருப்பது யார் என சிவா கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் கடைசி மார்வல் படம் `கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸி வால்யூம் 3’. கமோராவின் இறப்பு ஏற்படுத்திய கவலையில் இருந்து வெளிவராமல் இருக்கிறார் பீட்டர் குவில். ஆனாலும் கார்டியன்ஸுக்கான பொறுப்பு தேடி வருகிறது. இந்த முறை என்ன சிக்கல்? அதை கார்டியன்ஸ் எப்படி தீர்த்தார்கள்? என்பதே படத்தின் கதை. இந்தப் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு கிஃப்ட், க்றிஸ்டஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `ஓப்பன்ஹெய்ன்மர்’ படத்தின் புது டிரெய்லரை இந்தப் படத்துடன் இணைத்து திரையிட இருக்கிறார்கள். என்ஜாய்!
ஓம் சாந்தி ஓசன்னா, ஒரு முத்தஷி கதா, சாராஸ் படங்களை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `2018’. டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்னா பாலமுரளி, லால், இந்திரன்ஸ், ஷிவதா என கேரள சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்தப் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். காரணம் 2018ல் நிகழ்ந்த கேரள வெள்ளம், அதன் பாதிப்புகள், அதிலிருந்து கேரளா மீண்டது இதுதான் கதைக் களம்.
ரஹாப் - நிவி இருவரின் வாழ்வை ஒரு வதந்தி எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே `அஃபா’ இந்திப் படத்தின் கதை. நவாசுதீன் சித்திக், புமி பெட்னகர் நடித்திருக்கும் இந்தப் படத்தை சுதீர் மிஷ்ரா இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான `த கேரளா ஸ்டோரி’ இந்திப் படத்தின் டிரெய்லரே பல சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக படம் பிரிவினை வாதத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது என்பதே பலரின் குரல். பெண்களை மூளை சலவை செய்து மதமாற்றி, தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துகிறார்கள் என்ற கதைக் களத்தை கையில் எடுத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் சுடிப்டோ சென். படம் வெளியானதும் பல எதிர்ப்புக் குரல் எழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.