இந்த வாரம் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள், சீரிஸ், டாக்குமெண்டரி குறித்த தொகுப்பு.
ஹாலிவுட் நடிகர் ஜெரிமி ரென்னரின் ஒரு வித்தியாசமான பயணத்தை Rennervations பதிவு செய்கிறது. வெவ்வேறு நகரங்களுக்கு சென்று அந்த மக்களுக்கு ஏற்றது போல வாகனங்களை மறுவடிவமைப்பு செய்து கொடுப்பதுதான் இந்த முயற்சி. உதாரணமாக ஒரு இசைக்குழுவுக்கு மொபைல் ஸ்டுடியோ தேவை என்றால் அந்த பேருந்தை அதற்கேற்ப வடிவமைப்பார்கள்.
க்ளேர் (கேத்ரின் ஹான்) ஒரு பிரபலமான எழுத்தாளர். அவரின் வாழ்வில் ஒரு மோசமான பகுதியின் போது என்ன சிக்கல் வருகிறது, அதை எப்படி எதிர்கொள்கிறார் என்ற ஃபீல்குட் ஸ்டோரிதான் கதை. எட்டு எப்பிசோட்கள் கொண்ட இந்த சீரிஸை Liz Tigelaar இயக்கியிருக்கிறார்.
ஜேசன் - நிக்கி இருவரும் முன்னாள் கணவன் மனைவி. பிலெடெல்பியா காவல் துறையின், காணாமல் போகும் நபர்களை கண்டறியும் பிரிவில் பணியாற்றுகிறார்கள். ஒரு சந்தர்பத்தில் தங்களின் மகனையே கண்டுபிடிக்க வேண்டிய நிலமைக்கு ஆளாகிறார்கள். இதன் பின் என்ன ஆகிறதென்பதே கதை.
ஒரு முன்னாள் காவலதிகாரி, வற்புறுத்தி அவரது சொந்த ஊருக்கு ஒரு கேங்ஸ்ரடால் அனுப்பப்படுகிறார். அங்கு அவர் சட்டத்துக்குப் புறம்பான காரியம் ஒன்றை செய்ய வேண்டும். அதை செய்தாரா? என்ன சிக்கல் வருகிறது என்பதுதான் `ஃப்ளோரிடாமேன்’ ஒன்லைன்.
கணவனைப் பிரிந்து வாழ்பவர் மிரியம். அவருக்குள் இருக்கும் ஸ்டாண்டப் காமெடி திறமையை நிரூபிக்கா எடுக்கும் முயற்சிகள் தான் கதை. 1960களில் நடக்கும் கதையாக நகரும் இந்த சீரிஸில் இதுவரை நான்கு சீசன்கள் வந்துள்ளது. இது ஐந்தாவது மற்றும் இறுதி சீசன்.
அனுஸ்ரீ மெஹ்தா இயக்கத்தில் ராதிகா ஆப்தே, சுமீத் வியாஸ் நடித்திருக்கும் இந்திப் படம் `Mrs Undercover'. அண்டர் கவர் ஏஜெண்டாக வாழும் ஒரு இல்லத்தரசி தான் நாயகி. பத்து வருடங்களுக்குப் பிறகு அவருக்கு, ஒரு சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கும் பொறுப்பு தேடி வருகிறது. பிறகு என்ன என்பதுதான் படம்.
எட்வர்டு இயக்கத்தில் அலெக்ஸாண்டர் நடித்திருக்கும் ஆங்கிலப்படம் Seven Kings Must Die. அரசர் எட்வர்டின் இறப்புக்குப் பிறகு நிகழும் அதிகாரத்திற்கான போட்டிகள் தான் கதைக் களம். அவற்றை சரி செய்து இங்கிலாந்தை ஒன்றிணைக்கப் போராடுகிறார் உதேர்ட். அவர் முயற்சி என்னாகிறது என்பதுதான் மீதிக்கதை.
மார்க் ஃபோஸ்டர் இயக்கத்தில் டாம் ஹேங்க்ஸ் நடித்திருக்கும் படம் A Man Called Otto. மனைவியின் இறப்புக்குப் பிறகு எல்லோரிடமும் எரிந்து விழும் நபராக மாறுகிறார் ஓட்டோ. அவரது வீட்டுக்கு எதிரில் குடிவரும் ஒரு குடும்பத்தால் ஓட்டோ வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.
மாறன் இயக்கத்தில் உதயநிதி, பிரசன்னா நடிப்பில் வந்த படம் `கண்ணை நம்பாதே’. எதிர்பாராமல் ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொள்ளும் ஹீரோ அதிலிருந்து தப்பித்தாரா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
விஷ்வாக் சென் இயக்கி நடித்திருக்கும் தெலுங்குப் படம் `தாஸ் கா தம்கி’. கிருஷ்ண தாஸ் - டாக்டர் சஞ்சஜ் ருத்ரா இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பவர்கள். மர்மமான முறையில் டாக்டர் சஞ்ஜய் கொலை செய்யப்பட, அவரது இடத்தில் நடிக்க வருகிறார் கிருஷ்ண தாஸ். இதன் பின் நடப்பவை தான் மீதிக்கதை.
நிகில் முரளி இயக்கத்தில் அர்ஜூன் அசோகன், மமிதா பைஜூ, அனஸ்வரா ராஜன் நடித்திருக்கும் மலையாளப்படம் `ப்ரணய விலாசம்’. வெவ்வேறு கதாபாத்திரங்களின் காதல்களை வெவ்வேறு காலகட்டங்களில் பதிவு செய்கிறது இதன் கதைக் களம்.
சந்த்ரு இயக்கத்தில் உபேந்திரா, சுதீப், ஸ்ரேயா நடித்திருக்கும் கன்னடப் படம் `கப்ஸா’. ஆர்கேஸ்வரா என்ற காவலதிகாரி, மிகப்பெரிய கேங்க்ஸ்டராக எப்படி மாறினார் என்பதுதான் இதன் கதைக் களம்.
தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குநராக களமிறங்கியிருக்கும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர், சரத்குமார் நடித்திருக்கிறார்கள். ஹீரோ - வில்லன் சண்டை என்ற கமர்ஷியல் டெப்ளேட் படம் என்பது டிரெய்லரிலேயே தெரிந்திருக்கும்.
ஹரீஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா நடித்திருக்கும் படம் திருவின் குரல். பேச்ச இயலாத மாற்றுத்திறனாளி அருள்நிதிக்கும் அவரின் அப்பா பாரதிராஜாவுக்கும் இடையேயான பாசம், இதற்கு இடையே வில்லனால் வரும் சிக்கல் இதுதான் படத்தின் களம்.
சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடித்திருக்கும் படம் சொப்பன சுந்தரி. பரிசாக கிடைக்கும் ஒரு கார், அதை வைத்து பலரும் பல திட்டங்களைப் போடுகிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் கதை.
அருண் கார்த்திக் இயக்கத்தில் மகேந்திரன், ஜேம்ஸ், மாரி, ஸ்ரீனி, காவ்யா அறிவுமணி நடித்திருக்கும் ஹாரர் காமெடி படம் `ரிப்பப்பரி’. சாதி மாறி காதலிப்பவர்களை கொலை செய்யும் பேய் ஒன்று. அதைப் பிடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள் மகேந்திரன் மற்றும் நண்பர்கள். இதன் பின் என்ன ஆகிறது என்பதே படம்.
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்து உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் சாகுந்தலம். காளிதாசன் எழுதிய நாடகத்தை, 3டி சினிமாவாக மாற்றியிருக்கிறார்கள். சகுந்தலாவாக சமந்தா, துஷ்யந்தாக தேவ் மோகன், த்ருவாச மகரிஷியாக மோகன் பாபு நடித்திருக்கிறார்கள். சகுந்தலாவின் காதல், அதன் பிறகு அவள் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் தான் சாகுந்தலத்தின் கதை. இதில் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹாவும் ஒரு ரோலில் நடித்திருக்கிறார்.
சுதீஷ் கோபிநாத் இயக்கத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்திருக்கும் மலையாளப்படம் `மதனோல்சவம்’. ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், கனகம் காமினி கலகம், ன்னா தான் கேஸ் கொடு படங்களை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் கதையில் உருவாகியிருக்கிறது படம். கலர் கோழிகுஞ்சு விற்கும் ஹீரோ, அவன் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் காமெடி கலந்து சொல்லப்படுகிறது.
ஆகாஷ் ஸ்ரீவத்சா இயக்கத்தில் ராமேஷ் அரவிந்த் நடித்திருக்கும் கன்னடப்படம் சிவாஜி சூரத்கல் 2. இரண்டு வருடங்களுக்கு முன் இதே கூட்டணி முதல் பாகத்தை உருவாக்கி வெளியிட்டார்கள். டிடெக்டிவ் சிவாஜி குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஒரு இந்தியன் ஷெர்லக் ஹோம்ஸ். அவருக்கு இந்த முறை வரும் கேஸும், அதை அவர் எப்படி தீர்க்கிறார் என்பதும் தான் கதை.
க்ரிஸ் மெக்கே இயக்கத்தில் நிக்கோலஸ் கேஜ், நிக்கோலஸ் ஹவுட் நடித்திருக்கும் ஹாலிவுட் படம் `ரென்ஃபில்ட்’. அப்பாவி மனிதர்களை தின்று வாழும் கொடூர ட்ராகுலா, அவருக்கு உணவாக மனிதர்களை கொண்டு வந்து கொடுக்கும் அவரது உதவியாளன் ரென்ஃபீல்ட். வருடக்கணக்கில் இந்த வேலைகளை செய்து சலித்துப் போய் ட்ராகுலாவிடமிருந்து வெளியேற நினைக்கிறான் ரென்ஃபில்ட். அதன் பிறகு என்னாகிறது என்பதை காமெடி கலந்து படமாக்கியிருக்கிறார்கள்.