Pushpendra Nath Misra உருவாக்கியுள்ள இந்தி சீரிஸ் Choona. எதிரியின் எதிரி நண்பன் என்ற லாஜிக்கின் படி, தங்களின் எதிரி ஒரே ஆள் தான் என புரிந்து கொள்ளும் குழு, அந்த எதிரியிடமிருந்து கொள்ளையடிக்க முடிவு செய்கிறது. அதன் பின் நடப்பவைதான் சீரிஸின் கதை.
பெங்காலியில் வெளியான Taqdeer சீரிஸின் தெலுங்கு ரீமேக் தான் Dayaa. ஜே.டி.சக்கரவர்த்தி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஃப்ரீசர் வேன் டிரைவர் ஒருவர், வேனுக்குள் பிணம் இருப்பது தெரிந்த பின் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
வீரப்பனின் வாழ்க்கையையும், அவர் மரணத்தை சுற்றிய மர்மங்களையும் பற்றி சொல்லும் ஆவணக் குறுந்தொடர் The Hunt for Veerappan. நான்கு எப்பிசோடுகளாக வெளியாகும் இதனை செல்வமணி செல்வா இயக்கியிருக்கிறார்.
Daniel Markowicz இயக்கத்தில் உருவான போலிஷ் மொழி திரைப்படம் Soulcatcher. மிகவும் ஆபத்தான ஆயுதக் கடத்தல் ஒன்றை தடுத்து, அந்த ஆயுதங்களை கைப்பற்றும் பொறுப்பு ஹீரோவுக்கு. அதை செய்வதில் இருக்கும் சிக்கல்கள் தான் படத்தின் கதை.
வறுமையான சூழலில், சித்தியின் கோபங்களையும் சகித்துக் கொண்டு வாழும் அக்கா - தம்பியின் கதை தான் `எறும்பு’. ஒரு மோதிரத்தை அவர்கள் தொலைப்பதால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதை சொல்கிறது படம்.
கமோராவின் இழப்பிலிருந்து பீட்டர் மீண்டு மறுபடி உலகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை எப்படி கையில் எடுக்கிறார், அதை செய்ய முடிந்ததா என்பதே Guardians of the Galaxy இந்த பாகத்தின் கதை.
Pawan Basamsetti இயக்கத்தில் நாக சௌர்யா நடித்த தெலுங்குப் படம் Rangabali. தன் ஊரை நேசிக்கும் ஒரு இளைஞன், அதற்கு ஒரு ஆபத்து வரும் போது எப்படி தடுக்கிறான் என்பதே கதை.
தெலுங்கில் வெளியான நியூ வேவ் சினிமா Pareshan. ஒரு இளைஞனின் வாழ்க்கையில், காதலில், நட்பில் வரும் சிக்கல்கள் தான் படத்தின் கதை.
சசிக்குமார் இயக்கிய `சுப்ரமணியபுரம்’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறார்கள்.
அடுத்த வாரம் ரஜினிகாந்தின் `ஜெயிலர்’ வருவதால் இந்த வாரம் தமிழில் பெரிய ரிலீஸ் ஏதும் இல்லை. ஆனாலும் ஹரிகுமாரின் `சான்றிதழ்’, நட்ராஜின் `வெப்’, ஸ்ரீகாந்தின் `முருடன்’, அஷோக் குமாரின் `ப்ரியமுடன் ப்ரியா’ போன்ற படங்கள் வெளியாகிறது.
2018ல் வெளியான The Meg படத்தின் இரண்டாம் பாகம் The Meg 2: The Trench. சென்ற பாகத்தைப் போல இதுவும் Steve Alten எழுதிய நாவலை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. இதிலும் முதன்மைக் கதாபாத்திரம் ஜேசன் ஸ்டாதம் தான். அதே ராட்சத சுறா தன் இதிலும் வில்லன். ஒரே மாற்றம் இந்த பாகத்தை Ben Wheatley இயக்கியிருக்கிறார்.