Julio Jorquera இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Baby Bandito'. கெவின் ஒரு ஸ்கேட்டர், ஆனால் அவன் யார் என்று துருவினால், மிகப்பெரிய கொள்ளையை திட்டமிட்டிருக்கும் ஹெய்ஸ்ட் பேர்வழி. அவன் நடத்தும் கொள்ளை என்ன? எதற்காக செய்கிறான் என்பதே கதை.
`Skylab’ படத்தின் இயக்குநர் விஷ்வாக் இயக்கத்தில் லாவண்யா த்ரிபாதி நடித்திருக்கும் சீரிஸ் `Miss Perfect'. மேனேஜ்மெண்ட் கன்சல்டெண்ட் லாவண்யாவுக்கு எல்லாம் சுத்தமாக, ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற `ஓசிடி’யிஸ்ட். ஆர்வக் கோளாரில் ஒரு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கையில் இவர் வீட்டு வேலை செய்பவர் என தவறாக புரிந்து கொள்கிறார் ஹீரோ. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
2005ல் வெளியான Mr. & Mrs. Smith படத்தின் சீரிஸ் வடிவமே இப்போது அதே பெயரில் தயாராகியிருக்கிறது. இரண்டு ஸ்ட்ரேஞ்சர்ஸ், இருவரும் உளவாளிகள். கணவன் - மனைவியாக இவர்கள் ஒரு மிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட, அதன் பின் நடக்கும் அடிதடிகளே கதை.
Detroit Youth Choir குழவினரின் மேடை நிகழ்வைப் பற்றிய ஆவணத் தொடரே `Choir’. 2019ம் ஆண்டு America’s Got Talent கலந்து கொண்ட இந்தக் குழு, அடுத்ததாக இந்த பெரிய மேடையில் தங்கள் திறமையை வெளிக்காட்டுகிறார்கள். அவர்கள் தயாராவது முதல், குழுவில் நடந்த மாற்றங்கள், நிகழ்வு எனப் பலவும் இதில் இடம்பெறுகிறது.
Hugh Ballantyne இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவணத் தொடர் Alexander: The Making of a God. கிரேக்க மன்னரான அலெக்ஸாண்டரின் வாழ்க்கை, அவர் செய்த போர், உலகையே கைபற்ற வேண்டும் என அவர் நினைத்தது ஏன் போன்ற விஷயங்களை விவரிக்கிறது இந்த தொடர்.
After பட வரிசையில் ஐந்தாவது பாகமாக உருவாகியிருக்கும் படம் `After Everything'. ஹார்ட்லின் தனது காதல் வாழ்க்கையில் செய்த தவறுகளை திருத்த எடுக்கும் முயற்சிகளே இந்த படத்தின் கதை.
Emma Yarlett எழுதிய குழந்தைகளுக்கான கதைப் புத்தகம் அதே பெரியல் அனிமேஷன் படமாக உருவாக்கப்பட்டிருப்பதே, `Orion and the Dark'. ஓரியன் என்ற சிறுவனுக்கு எதைப் பார்த்தாலும் பயம். அவனது பயத்தைப் போக்கும் ஒரு சம்பவம் நடக்கிறது. எது என்ன? எப்படி? என்பதே கதை.
மந்த்ர வீரப்பன் இயக்கத்தில் உருவான படம் `மதிமாறன்’. தோற்றத்தை வைத்து கேலிக்குள்ளாகும் ஒருவன், அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதும், கூடவே ஒரு த்ரில்லர் சம்பவமும் இணைத்து சொல்லப்பட்டிருக்கும் படம்.
Yogaraj Bhat இயக்கத்தில் Yashas Surya நடித்த படம் `Garadi'. மல்யுத்த வீரனாக ஆசைப்படும் ஹீரோ, அவன் சந்திக்கும் பிரச்சனைகளை பேசுகிறது படம். சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷன் படத்தில் ஒரு கேமியோவும் கொடுத்திருக்கிறார்.
சாய் கிரண் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்த படம் `Pindam’. தெலுங்கானாவின் நல்கொண்டாவில் 1930களில் உண்மையாக நடந்ததாக சொல்லப்படும் சம்பவத்தை மையமாக வைத்து உருவான ஹாரர் படம் இது.
சைலேஷ் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்த படம் `Saindhav ’. தன் குழந்தை உயிரைக் காப்பாற்ற, மறுபடி கொலைவெறி பிடித்த வேங்கையாக மாறும் தந்தையைப் பற்றிய கதை.
`டிக்கிலோனா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் யோகி - சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கிறது `வடக்குப்பட்டி ராமசாமி’. 60-70 காலகட்டங்களில் நடக்கும் ஒரு காமெடி படமாக உருவாகியிருக்கிறது.
`சவரக்கத்தி’ படத்தின் இயக்குநர் ஆதித்யாவின் அடுத்த படம் `டெவில்’. ஹேமா - அலெக்ஸ் - அருண் என மூவரின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள், சரி - தவறுகள் எல்லாம் தான் கதை.
ரக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் `மறக்குமா நெஞ்சம்’. 2008ல் கான்வெண்ட் ஸ்கூலில் படித்த மாணவர்கள் பத்து வருடங்கள் கழித்து, மீண்டும் 3 மாதங்கள் அதே பள்ளிக்கு திரும்ப வந்து பரிட்ச்சை எழுத வேண்டிய சூழல் உருவாகிறது. அந்த காலகட்டத்தில் நடப்பவையே கதை.
துஷ்யந்த் இயக்கத்தில் சுஹாஸ் நடித்திருக்கும் படம் `Ambajipeta Marriage Band'. 2000ல் அம்பஜிபேட்டா என்ற பகுதியில் நடக்கும் கதை. மல்லிகார்ஜூனா தனது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். சாதிய பிரச்சனை ஒன்று குறுக்கே வர, அதன் பின் நடப்பவையே கதை.
Thor: Ragnarok, Thor: Love and Thunder, Jojo Rabbit போன்ற படங்களை இயக்கிய Taika Waititi இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Next Goal Wins'. அமெரிக்காவின் Samoa soccer team பற்றிய படமே இது. 2001 FIFA, 31க்கு 0 என்ற கணக்கில் இமாலய தோல்வியடைந்த அந்தக் குழுவை வெற்றி பெற வைக்க ஒரு பயிற்சியாளர் அனுப்பி வைக்கப்படுகிறார். அதன் பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
The King's Man பட வரிசையின் இயக்குநர் Matthew Vaughn இப்போது இயக்கியிருக்கும் படம் Argylle. உளவாளி ஒருவர், ஒரு புதையலைத் தேடி உலகமெங்கும் சுற்றும் மிஷனே படத்தின் கதை.