Eiichiro Oda உருவாக்கிய ஜப்பானிய காமிக்ஸை மையமாக வைத்து அதே பெயரில் உருவாகியிருக்கும் லைவ் ஆக்ஷன் சீரிஸ் தான் One Piece. Monkey D. Luffy ஒரு புதையலைத் தேடி செல்லும் பயணமே சீரிஸின் கதை.
ஹன்செல் மெஹ்தா இயக்கிய Scam 1992 பெரிய ஹிட்டானது. இப்போது அதன் இரண்டாவது சீசனாக, இன்னொரு Scamஐ சீரிஸாக எடுத்திருக்கிறார்கள். 2003ல் Abdul Karim Telgi நடத்திய முத்திரைத்தாள் மோசடி பற்றி இந்த சீரிஸ் சொல்ல இருக்கிறது.
'A Ticket To Syria' புத்தகத்தை தழுவி உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் `The Freelancer'. முன்னாள் காவலதிகாரி அவினாஷ் காமந்த், போர் பகுதியில் மாட்டிக் கொண்ட அலியா என்ற பெண்ணை மீட்டு வரச் செல்கிறார். அதில் சந்திக்கும் சவால்கள்தான் கதை.
மாய உலகத்தில் நடக்கும்படியான கதைக் களம் கொண்டது The Wheel Of Time. இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது.
Celso R. García இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்பானிஷ் மொழிப் படம் `The Great Seduction'. தாங்கள் சார்ந்திருக்கும் ஊரை செழிப்பாக்க, அந்த ஊர் மக்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டியிருக்கிறது. அது என்ன விஷயம், அதை செய்தார்களா என்பதே படத்தின் கதை.
Stuart McDonald இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Choose Love'. கேமி ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார். நல்ல வேலை, அன்பான பாய் ஃப்ரெண்ட். ஆனாலும் ஏதோ இல்லாதது போல் உணர்கிறார். அந்த சந்தர்பர்த்தில் அவர் சந்திக்கும் ஒரு நபரால், என்ன விஷயங்கள் நடக்கிறது என்பதே படத்தின் கதை.
Vatsal Neelakantan இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்திப் படம் `Friday Night Plan'. அம்மா, அலுவலக பயணமாக கிளம்பிய பின்பு, அவரின் இரு மகன்களும் ஒரு பார்ட்டிக்கு கிளம்புகிறார்கள். அம்மா வருவதற்குள் வீட்டுக்கு திரும்புவது திட்டம். அது நிறைவேறியதா என்பதே கதை.
Fares Fares இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்வீடிஷ் மொழிப் படம் `A Day and a Half'. தன்னுடைய மகளை மீட்க போராடும் ஒரு தந்தையின் பயணமே படத்தின் கதை.
நிடா மன்ஸூர் இயக்கத்தில் உருவான படம் `Polite Society'. அக்காவுக்குத் திருமணம் நடக்க இருக்கிறது, ஆனால் மாப்பிள்ளை வீட்டில் ஏதோ சரி இல்லை எனத் தெரிந்து கொள்ளும் தங்கை என்ன செய்கிறார் என்பதே கதை. ஆக்ஷன் காமெடி கலந்த படம்.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளியான படம் `டிடி ரிட்டர்ன்ஸ்’. பணத்துக்காக பேயுடன் விளையாடும் ஹீரோ & கோவின் காமெடி கலாட்டாதான் படம்.
பிரஷாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் படம் `கிக்’. சந்தோஷ் - சிவானி இருவருக்கும் இடையேயான காதல் - காமெடி கதையே படம்.
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார் - அமிதாஷ் நடித்திருக்கும் படம் `பரம்பொருள்’. சூழ்நிலை காரணமாக சிலைக் கடத்தலை செய்யும் ஒருவன், அவனுக்கு வரும் சிக்கல்கள் அதுவே படத்தின் கதை.
பாலாஜி இயக்கத்தில் யோகிபாபு நடித்திருக்கும் படம் `லக்கி மேன்’. அதிர்ஷ்டமே இல்லாத ஒருவனாக தன்னை நினைக்கும் நபர், அவரது வாழ்வில் நடக்கும் சிக்கல்களை காமெடி கலந்து கருத்தாக சொல்ல இருக்கிறது படம்.
வேலு தாஸ் இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் படம் `துடிக்கும் கரங்கள்’. அநியாயத்திற்கு எதிராக போராடும் ஹீரோ, அவருக்கு வரும் பிரச்சனைகள் என கமர்ஷியல் ஃபார்முலா கதை.
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஹமரேஷ் நடித்திருக்கும் படம் `ரங்கோலி’. பள்ளி மாணவனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களே படத்தின் கதை.
தங்கர் பச்சன் இயக்கத்தில் பாரதி ராஜா, கௌதம் மேனன், யோகிபாபு நடித்திருக்கும் படம் `கருமேகங்கள் கலைகின்றன’. தந்தைக்கும் - மகனுக்குமான பாசப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்ல இருக்கிறது படம்.
ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின், அபர்னதி நடித்திருக்கும் படம் `டீமன்’. விக்னேஷுக்கு மிக கொடூரமான கனவுகள் வருகிறது. அந்தக் கனவுக்கான காரணம் என்ன என அவனது தேடலே படத்தின் கதை.
ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்திருக்கும் தெலுங்குப் படம் `குஷி’. திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்சனைகளே படத்தின் கதை.
கோதிபன்னா சாதர்ண மைகட்டு, காவலுதாரி படங்களின் இயக்குநர் ஹேமந்த் ராவ், இந்த முறை ஃபுல் ரொமாண்டிக்காக களம் இறங்கியிருக்கும் கன்னடப் படம் `Sapta Sagaradaache Ello - Side A'. மனு - ப்ரியா இருவரும் உருகி உருகி காதல் வளர்ப்பதே படத்தின் கதை. படத்தின் அடுத்த பாகம் அடுத்த மாதம் வெளியாகிறது.
Equaliser படத்தின் முதல் இரு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு Antoine Fuqua இயக்கத்தில் அதன் மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது. ராபர்ட் மெக்கால் இந்த முறை தனது நண்பர்களை தொல்லை செய்யும் லோக்கல் தாதாவை போட்டு பொளப்பதுதான் கதை.
நியூயார்க் நகரத்திற்கு வரும் ஆபத்துகளை தடுத்து மக்களை காப்பாற்றும் ஆமை சகோதரர்களின் கதை தான் Teenage Mutant Ninja Turtles: Mutant Mayhem. அனிமேஷன் படமான இதனை, The Mitchells vs. the Machines படத்தை இயக்கிய Jeffrey Rowe இயக்கியிருக்கிறார்.