ஷான் லெவி இயக்கியிருக்கும் சீரிஸ் `All the Light We Cannot See'. மரிலார் பார்வை சவால் கொண்ட ஃப்ரென்ச் பதின்பருவ பெண், ஜெர்மன் இராணுவ வீரர் வார்னர் இந்த இருவரின் பாதையும் குறுக்கிடுகிறது. இருவரும் இரண்டாம் உலகப்போர் சூழலில் எப்படி உயிர்பிழைத்து மீள்கிறார்கள் என்பதே கதை.
தேபலாய் பட்டாச்சார்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் `P I Meena’. மீனா என்ற டிடெக்டிவ் ஒரு உண்மையை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் தான் கதை.
சுஷ்மிதா சென் லீட் ரோலில் நடித்த இந்தி சீரிஸ் `Aarya'. இதன் முதல் சீசன் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இதன் மூன்றாவது சீசன் வருகிறது. தன்னுடைய குடும்பத்தைப் பாதுகாக்க ஒரு பெண் என்ன எல்லாம் செய்கிறார் என்பதை த்ரில்லராக சொல்லும் சீரிஸ்.
முத்திரைத்தாள் மோசடி செய்த தெல்கியின் கதைதான் இந்தி சீரிஸான `Scam 2003: The Telgi Story'. வால்யூம் 1 ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது இரண்டாவது வால்யூம் வருகிறது.
Invincible காமிக்ஸை மையமாக வைத்து அதே பெயரில் உருவானது அனிமேஷன் சீரிஸ். பதின் வயது மார்க் கேரிசன், தனது 17வது பிறந்த நாளுக்குப் பிறகு தனக்குள் இருக்கும் சூப்பர் பவர்களை உணர்கிறான். அவனது தந்தை நோலன் உலகிலேயே பெரிய சூப்பர்ஹீரோ. அவர் மூலமாக மார்க் என்ன கற்றுக் கொள்கிறான் என்பதே கதை. முதல் சீசனுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் வருகிறது.
Marissa Jo Cerar உருவாக்கியுள்ள சீரிஸ் `Black Cake'. Eleanor Bennettன் மரணம் பல வித மர்மமான விஷயங்களின் வாசலாக இருக்கிறது. அவரது கடந்த காலப்பயணத்தை அவர் குடும்பத்தினர் எப்படி அறிந்து கொள்கிறார்கள் என்பதே கதை.
ஜெர்மன் மொழி சீரிஸ் `The Three Detectives'. கிம், மரி, ஃப்ரான்ஸி மூன்று சிறுமிகளும் நண்பர்கள். பெரிய டிடெக்டிவ் ஆக வேண்டும் என்பதுதான், மூவரின் கனவும். இவர்கள் வாழ்வில் வரும் சிக்களும், சவால்களும் தான் சீரிஸின் கதை.
கிறிஸ்தவ மத நம்பிக்கைகள் குறித்த ஆவணப்படமாக உருவாகியிருக்கிறது `Mysteries of the Faith’. கிறிஸ்தவ மதத்திற்குள் இருக்கும் மர்மங்கள், புனிதங்கள் எனப் பலவற்றை அலசுகிறது.
Andre Hörmann , Lena Leonhardt இயக்கியிருக்கும் ஆவணப்படம் `Till Murder Do Us Part: Soering vs. Haysom’. ஜென்ஸ் சோரிங் 1985ல் தனது கேர்ள்ஃப்ரெண்டின் பெற்றோரை கொலை செய்ததாக கைதானார். ஆனால் உண்மையில் அவர் தான் கொலையாளியா இல்லையா? என்பதை பற்றி பேசுகிறது இந்த ஆவணப்படம்.
Thom Zimny இயக்கியிருக்கும் ஆவணப்படம் `Sly'. கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலமாக ஹாலிவுட்டை கலக்கும் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் பற்றிய ஆவணப்படம் தான் இது. நடிகராக, எழுத்தாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக மற்றும் அவரது வாழ்க்கை பயணம் பற்றியும் கூற இருக்கிறது.
ஜப்பானிய பொழுதுபோக்கு டிவி நிகழ்ச்சி, Takeshi’s Castle. இது தற்போது இந்தியில் டப் செய்யப்பட்டு வருகிறது. பிரபல காமெடியன் Bhuvan Bam தான், புது ஸ்டைலில் இந்தி வர்ணனைகளை செய்திருக்கிறார்.
Quentin Tarantino இயக்கிய Inglourious Basterds படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் Mélanie Laurent. இவர் இயக்குநராகவும் பல படங்கள் இயக்கியிருக்கிறார். தற்போது இவர் இயக்கத்தில் வெளியாகும் படம் தான் ` Wigwomen’. திருடி திருடி அலுத்துப் போன இரு தோழிகள், கடைசியாக ஒரு திருட்டை திட்டமிடுகிறார்கள். கார் ஓட்ட புது பெண் ஒருவரை சேர்க்கிறார்கள். இந்த திருட்டில் என்ன சவால் வந்தது என்பதுதான் கதை.
Nour Wazzi இயக்கியிருக்கும் படம் `Locked In'. கோமாவில் இருக்கும் நோயாளியைப் பற்றி ஒரு நர்ஸ் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அந்த நோயாளின் கதை என்ன, அவரை துரத்தும் பகை என்ன என்பதெல்லாம் தான் படத்தின் கதை.
நீச்சல் வீராங்கனை Diana Nyadன் பயோபிக்காக உருவாகியிருக்கும் படம் `NYAD’. 60 வயதில், க்யூபாவில் இருந்து ஃப்ளோரிடாவுக்கு 110 மைல்களை நீந்திக் கடக்க வேண்டும் என்ற தன் கனவை எப்படி நிறைவேற்றினார் என்பதுதான் படம்.
Jessica Yu இயக்கியுள்ள படம் `Quiz Lady'. கேம் ஷோவில் நாட்டமுள்ள சகோதரிகள் இருவர், தங்கள் அம்மா கேம்ப்ளிங்கால் உண்டாக்கிய கடன்களை அடைக்க முயல்கிறார்கள். அதை எப்படி செய்தார்கள் என்பதே கதை.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் `ஆர் யூ ஓக்கே பேபி’. ஒரு குழந்தையை தத்தெடுத்த பெற்றோருக்கும், பெற்றெடுத்த பெற்றோருக்கும் இடையில் நடக்கும் போராட்டமே கதை.
Kenneth Branagh இயக்கத்தில் வெளியான படம் `A Haunting in Venice'. அகதா கிறிஸ்டி எழுதிய நாவலை மையமாக வைத்து இதற்கு முன் Murder on the Orient Express, Death on the Nile படங்களை இயக்கினார். இந்த முறையும் அதே துப்பறியும் கதைதான். ஒரு கொலை நிகழ்கிறது, கொலை செய்தவர் யார் என்ற Hercule Poirot விசாரணையே கதை.
போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் `Skanda'. குடும்ப நபருக்கு ஒரு பிரச்சனை வரவே, அதை தீர்ப்பதற்கு ஆந்திரா, தெலுங்கான என இரு மாநில முதலமைச்சர்களையே எதிர்க்கிறார் ஹீரோ. இதன் பின் என்ன ஆகிறது என்பதே மாஸ் மசாலா கதை.
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து பாக்ஸ் ஆஃபீசில் பட்டையை கிளப்பிய இந்திப் படம் `Jawan’. ஷாரூக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2ம் தேதி படத்தை நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதுவும் ரசிகர்கள் கேட்டது போல, படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளையும் இணைத்து Extended Cut வெளியாகவுள்ளது.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான படம் `ரத்தம்’. நகரத்தில் நடக்கும் கொலைகளுள் ஒரு ஒற்றுமையை கண்டுபிடிக்கும் பத்திரிகையாளர், அதன் பின் இருக்கும் உண்மையை கண்டுபிடித்தாரா? என்பதே கதை.
சேரன் நடிப்பில் வெளியான படம் `தமிழ்க்குடிமகன்’. தழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நாயகன், படித்து விஏஓ பணிக்கு சேர்ந்த பின்னும், சாதிய அடக்குமுறை அவரைத் துரத்துகிறது. இதை எதிர்த்து அவர் எப்படி போராடுகிறார் என்பதே கதை.
Kalyan Shankar இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் `MAD’. பொறியியல் கல்லூரியில் பயிலும் சில நண்பர்களைப் பற்றிய கதைதான் படம். அவர்களின் வாழ்க்கை கல்லூரி விடுதியில் நடக்கும் கலாட்டாக்கள் என செல்கிறது கதை.
இந்தாண்டு வெளியான தெலுங்குப் படங்களில் மிகவும் பாராட்டப்பட்ட படம் `Month Of Madhu'. ஸ்ரீகாந்த் நாகோதி இயக்கத்தில் நவீன் சந்திரா, ஸ்வாதி நடித்திருந்தனர். ஒரு தம்பதி தங்கள் 20 ஆண்டு கால திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
Stephen King எழுதிய சிறுகதையை மையமாக வைத்து அதே பெயரில் உருவான படம் `The Boogeyman'. அம்மா இறந்த பின் பல அமானுஷ்யமான விஷயங்கள் நடப்பதை உணர்கிறார்கள் அவரின் இரு மகள்கள். அவரது தந்தை மனைவியை இழந்த துக்கத்தை கடந்து இந்த விஷயங்களை கவனிக்கும் போது, பிரச்சனை பிரளயமாகியிருக்கிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்ற ஹாரர் தான் படம்.
தமிழில் இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை, தீபாவளி வரை லியோ ஃபீவர் தான் தொடர இருக்கிறது. ஆனாலும் லைசன்ஸ், கபில் ரிட்டர்ன்ஸ், ரா ரா சரசக்கு ரா ரா, ரூல் நம்பர் 4, மூத்தகுடி, கொம்பு குதிரை, திரையின் மறுபக்கம் போன்ற படங்கள் வெளியாகிறது.
தெலுங்கில் பெல்லி சூப்புலு, ஈ நகரானிகி ஏமாயிந்தி போன்ற படங்களை இயக்கிய தருண் பாஸ்கர் இந்த முறை `கீடா கோலா’வுடன் வருகிறார். ஒரு குளிர்பான பாட்டிலுக்குள் கரப்பான்பூச்சியை போட்டால் நிறை பணம் கிடைக்கும் என்ற சவால் வருகிறது. அதை செய்து முடிக்க கிளம்பும் ஒரு குழுவின் பயணமே படம்.
அனில் விஸ்வநாத் இயக்கத்தில் 2021ல் வெளியான தெலுங்குப் படம் `Maa Oori Polimera’. ஒரு கிராமத்தில் மந்திர தந்திரங்களால் நடக்கும் கொலைகள் பற்றி பேசியது படம். அதன் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கியிருக்கிறார் அனில். இதிலும் அதே ப்ளாக் மேஜிக் தான் கதைக் கரு.
அருண் வர்மா இயக்கியிருக்கும் மலையாளப் படம் ` Garudan’. பிஜூ மேனன், சுரேஷ் கோபி நடித்திருக்கும் இது த்ரில்லர் படமாக தயாராகியிருக்கிறது. ஹரீஷ் மாதவ் ஒரு கரடுமுரடான போலீஸ் ஆஃபீசர், நிஷாந்த் ஒரு பேராசிரியர். இந்த இருவருக்கும் இடையே நடக்கும் மோதலே படத்தின் கதை.
ஜார்ஜ் கோரா இயக்கியிருக்கும் மலையாளப் படம் `Tholvi F.C.’. குருவிலா குடும்பம் தோற்றுப் போவதற்கு பெயர் பெற்ற குடும்பம். இந்தக் குடும்பத்தில் நடக்கும் கலாட்டாக்களே கதை.
இந்தியில் Oh My God!, 102 Not Out படங்களை இயக்கிய உமேஷ் ஷுக்லா தற்போது இயக்கியிருக்கும் படம் `Aankh Micholi’ ஒரு NRI மாப்பிள்ளைக்கு தங்கள் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து வைக்க முயல்கிறது ஒரு குடும்பம். அவர்கள் செய்யும் காமெடிகளே கதை.
அஜய் பால் இயக்கத்தில் அர்ஜூன் கபூர், புமி பெட்னகர் நடித்திருக்கும் இந்திப் படம் `The Lady Killer’. ஒரு இளைஞன், மிக ஆபத்தான ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். இதன் பின் அவர்களது பயணத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்ற த்ரில்லர் தான் படம்.
Masaan, Drishyam போன்றவற்றின் ஒளிப்பதிவாளர் மற்றும் Paatal Lok சீரிஸின் இயக்குநர் அவினாஷ் அருண். இவர் இப்போது இயக்கியுள்ள படம் `Three Of Us’. சைலஜா தனக்கு டிமென்ஷியா என்ற மறதிநோய் இருப்பதை அறிந்து கொண்டதும், ஒரு பயணத்துக்கு தயாராகிறார். தன் பால்ய கால நினைவுகளை ஒரு முறை திரும்ப பார்க்க அவர் செல்லும் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே கதை.
Limitless, Divergent படங்களை இயக்கிய Neil Burger தற்போது இயக்கியுள்ள படம் ` The Marsh Kings Daughter'. ஒரு பெண் தனது தாயைக் கடத்தியவனை பழிவாங்க எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை.