இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட்
இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட்புதிய தலைமுறை

வேட்டையன் | வாழை | Black | போகுமிடம் வெகு தூரமில்லை | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!

ரஜினியின் வேட்டையன், மாரி செல்வராஜின் வாழை, ஜீவாவின் Black, விமலின் போகுமிடம் வெகு தூரமில்லை என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

ரஜினியின் வேட்டையன், மாரி செல்வராஜின் வாழை, ஜீவாவின் Black, விமலின் போகுமிடம் வெகு தூரமில்லை என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Series

1. The Franchise (English) Jio Cinema - Oct 7

The Franchise
The Franchise

`American Beauty’, `Skyfall', `Spectre', `1917' போன்ற படங்களை இயக்கிய Sam Mendes இயக்கியுள்ள சீரிஸ் `The Franchise'. ஒரு சூப்பர்ஹீரோ பட உருவாக்கத்தில் நடக்கும் கலாட்டாக்களே கதை.

2. Zindaginama (Hindi) Sony LIV- Oct 10

Zindaginama
Zindaginama

ஆறு இயக்குநர்கள் இணைந்து ஆறு குறும்படங்கள் இயக்கி தொகுத்துள்ள ஆந்தாலஜி `Zindaginama’. வலிமையையும், நம்பிக்கையும் பேசுகிறது ஒவ்வொரு கதையும்.

இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட்
‘என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்..’ மீண்டும் கார் பந்தயத்தில் அஜித்! நீ வேற லெவல் தல!

3. Citadel Diana (Italian) Prime - Oct 10

Citadel Diana
Citadel Diana

Arnaldo Catinari இயக்க்யுள்ள சீரிஸ் `Citadel Diana’. சிட்டாடலில் உள்ள கருப்பு ஆடை கண்டுபிடிக்கும் மிஷனே கதை.

4. Outer Banks S4: P1 (English) Netflix - Oct 10

Outer Banks S4: P1
Outer Banks S4: P1

Josh Pate & Shannon Burke இயக்கியுள்ள சீரிஸ் `Outer Banks'. மூன்று சீசன்களாக ஓடிக் கொண்டிருக்கும் இதன் நான்காவது சீசனின் முதல் பாகம் வெளியாகிறது. பதின்பருவத்தினர் இணைந்து செய்யும் கொள்ளை சம்பவங்களே கதை.

5. Tomb Raider: The Legend of Lara Croft (English) Netflix - Oct 10

Tomb Raider The Legend of Lara Croft
Tomb Raider The Legend of Lara Croft

Tomb Raider வீடியோ கேமை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது `Tomb Raider: The Legend of Lara Croft’ அனிமேட்டட் சீரிஸ். லாரா க்ராஃப்ட் புதிதாக மேற்கொள்ளும் அட்வென்சர் பயணமே கதை.

இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட்
20 ஆண்டு சட்டப் போராட்டம்... 50 கோடி ரூபாய் சொத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி!

6. Jai Mahendran (Malayalam) SonyLIV - Oct 11

Jai Mahendran
Jai Mahendran

ஸ்ரீகாந்த் மோகன் இயக்கத்தில் சைஜூ குருப் நடித்துள்ள சீரிஸ் `Jai Mahendran'. உப தாசில்தாரான மகேந்திரன் ஒரு ஊழல்வாதி. ஒருகட்டத்தில் அவர் வேலைக்கே ஆபத்து வர, அதைக் காப்பாற்றும் பொருட்டு செய்யும் விஷயங்களும், அதன் விளைவுகளுமே கதை.

7. Raat Jawaan Hai (Hindi) Sony LIV- Oct 11

Raat Jawaan Hai
Raat Jawaan Hai

சுமீத் வியாஸ் இயக்கியுள்ள சீரிஸ் `Raat Jawaan Hai'. குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்களை மூன்று நண்பர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதே கதை.

8. Teacup (English) Jio Cinema - Oct 11

Teacup
Teacup

Robert R. McCammon எழுதிய Stinger நாவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சீரிஸ் `Teacup'. ஜார்ஜியாவில் உள்ள ஒரு கிராமப் பகுதிக்கு வரும் ஆபத்தும், அதை அந்த ஊர் மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுமே கதை.

9. Disclaimer (English) Apple TV+ - Oct 11

Disclaimer
Disclaimer

Alfonso Cuarón இயக்கியுள்ள சீரிஸ் `Disclaimer'. பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குநருமான கேத்தரின் சந்திக்கும் ஒரு வினோத பிரச்சனையே கதை.

OTT

10. Girl Haunts Boy (English) Netflix - Oct 9

Girl Haunts Boy
Girl Haunts Boy

Emily Ting இயக்கியுள்ள படம் `Girl Haunts Boy'. தந்தையின் மரணத்திற்குப் பிறகு புது இடத்தில் குடியேறுகிறார்கள் கோல் மற்றும் அவனது தாய். அந்த வீட்டில் 17 வயது பெண்ணின் ஆத்மா இருக்கிறது. கோல் அதனுடன் நண்பனான பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட்
70வது தேசிய திரைப்பட விருது: 7வது முறை விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான்!

11. Lonely Planet (English) Netflix - Oct 11

Lonely Planet
Lonely Planet

Susannah Grant இயக்கியுள்ள படம் `Lonely Planet'. மொராக்கோவில் ஒரு பார்ட்டிக்கு வரும் பெண், தன்னை விட இளம் ஆண் ஒருவரை சந்திக்கிறார். அவர்களின் உறவு, அதில் வரும் சிக்கல் போன்றவையே கதை.

12. Uprising (Korean) Netflix - Oct 11

Uprising
Uprising

Sang-man Kim இயக்கியுள்ள படம் `Uprising'. சோசன் வம்சத்தில் ஒன்றாக வளர்ந்த இரு நண்பர்கள், ஒருகட்டத்தில் எதிரிகளாகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

Post Theatrical Digital Streaming

13. The Boy and the Heron (Japanese) Netflix - Oct 7

The Boy and the Heron
The Boy and the Heron

Hayao Miyazaki இயக்கியுள்ள அனிமி படம் `The Boy and the Heron'.  குடும்பத்தை தொலைத்த மஹிதோவின் அட்வென்சர் பயணமே கதை.

14. Pogumidam Vegu Thooramillai (Tamil) Prime - Oct 8

போகுமிடம் வெகு தூரமில்லை
போகுமிடம் வெகு தூரமில்லை

மைக்கேல் ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடித்த படம் `போகுமிடம் வெகு தூரமில்லை’. அமரர் ஊர்தி ஓட்டுநர், ஒரு பிணத்தை எடுத்துச் செல்லும் பயணமே கதை

15. Khel Khel Mein (Hindi) Netflix - Oct 9

Khel Khel Mein
Khel Khel Mein

முடாசர் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்த படம் `Khel Khel Mein’. ஒரு டின்னருக்காக கூடும் நண்பர்கள் குழு ஒன்று, ஒவ்வொருவரைப் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்த துவங்கியதும் கலவரமாகிறது. அதன் பின் என்ன என்பதே கதை. 2016ல் வெளியான Perfect Strangers என்ற இத்தாலிய படத்தின் ரீமேக் இது. ஏற்கெனவே மலையாளத்தில் 12th Man, 1001 Nunakal என இருமுறை ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

16. Gorre Puranam (Telugu) Aha - Oct 10

Gorre Puranam
Gorre Puranam

பாபி இயக்கத்தில் சுஹாஸ் நடித்த படம் `Gorre Puranam'. ஆட்டுக்கும், அந்த ஆட்டை சந்திகும் ஒரு கைதிக்கும் இடையேயான சம்பவங்களே கதை. 

17. Pailam Pilaga (Telugu) etv WIN - Oct 10

Pailam Pilaga
Pailam Pilaga

ஆனந்த் இயக்கிய படம் `Pailam Pilaga'. சிவா என்ற இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளும், சிக்கல்களுமே கதை.

18. Vaazhai (Tamil) Hotstar - Oct 11

வாழை
வாழை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `வாழை’. பள்ளி விடுமுறை தினங்களில் வாழைத்தார் சுமக்கும் சிவனணைந்தான் பற்றிய கதை.

19. Sabari (Tamil) Sun NXT- Oct 11

சபரி திரைப்படம்
சபரி திரைப்படம்

அனில் இயக்கத்தில் வரலட்சுமி நடித்த படம் `Sabari’. தனது கணவரை விட்டுப் பிரிந்து வந்த பின் சஞ்சனா தெரிந்து கொள்ளும் உண்மைகளும், அதைத் தொடர்ந்து அவள் எடுக்கும் முயற்சிகளுமே படம்.

20. Laandhar (Tamil) Aha - Oct 11

Laandhar
Laandhar

விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `லாந்தர்’. கொலைகாரனைப் பிடிக்க துரத்தும் ஒரு காவலரின் கதை.

21. Sarfira (Hindi) Hotstar - Oct 11

Sarfira
Sarfira

சுதா இயக்கத்தில் சூர்யா நடித்த `சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக் `Sarfira'. குறைந்த விலையில் விமான பயணம் என்ற நாயகனின் கனவு நிறைவேறியதா என்பதே கதை.

Theatre

22. Vettaiyan (Tamil) - Oct 10

Vettaiyan
Vettaiyan

ரஜினிகாந்த் நடிப்பில் த செ ஞானவேல் இயக்கியுள்ள படம் `வேட்டையன்’. எக்கவுண்டர் ஸ்பெஷலிட் அதிகாரியும், அவர் சந்திக்கும் சவால்களுமே கதை.

23. Black (Tamil) - Oct 11

Black
Black

ஜீவா, ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ள படம் `பிளாக்’. 2014ல் வெளியான `Coherence' படத்தின் உரிமையை வாங்கி, கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து எடுக்கப்பட்டிருக்கிறது. வீக் எண்டை கொண்டாடச் செல்லும் ஒரு ஜோடிக்கு நேரும் பிரச்சனைகளும், அதன் பின் இருக்கும் மர்மங்களுமே கதை

24. Viswam (Telugu) - Oct 11

Viswam
Viswam

ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் கோபிசந்த் நடித்திருக்கும் படம் `Viswam'. ஒரு ஆக்‌ஷன் மாஸ் படமாக உருவாகியிருக்கிறது.

25. Martin (Kannada) - Oct 11

Martin
Martin

துருவ் சார்ஜா நடித்துள்ள படம் `Martin'. அர்ஜூன் சந்தேகத்துக்குள்ளான நபர், உண்மையில் அவர் யார் என்பதும், அவரது மிஷன் என்ன என்பதுமே கதை.

26. Jigra (Hindi) - Oct 11

Jigra
Jigra

வாசன் பாலா இயக்கத்தில் அலியா பட் நடித்துள்ள படம் `Jigra’. சத்யாவுக்கு குடும்பமாக இருப்பது அவளது தம்பி மட்டுமே. அவனுக்கு ஒரு சிக்கல் வரும் போது, எப்படி காப்பாற்றுகிறாள் என்பதே கதை.

27. Vicky Vidya ka Woh Wala Video (Hindi) - Oct 11

Vicky Vidya ka Woh Wala Video.
Vicky Vidya ka Woh Wala Video.

ராஜ் ஷாண்டில்யா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், த்ரிப்தி இம்ரி நடித்துள்ள படம் `Vicky Vidya ka Woh Wala Video'. விக்கி - வித்யா தங்களின் முதலிரவை வீடியோவாக பதிவு செய்து ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்கிறார்கள். அந்த சிடி காணாமல் போன பிறகு நடக்கும் கலாட்டாக்களே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com