The first OMEN | PARASYTE : THE GREY | FAMILY STAR | KALVAN
The first OMEN | PARASYTE : THE GREY | FAMILY STAR | KALVANCanva

கள்வன் | Family Star | Parasyte | THE first OMEN... இந்த வார OTT தியேட்டர் லிஸ்ட் இதோ.!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கள்வன். ஆந்தணி ஹாப்கின்ஸ் நடிப்பில் One Life , `Train to Busan’ படத்தை இயக்கிய Yeon Sang-ho இயக்கியுள்ள சீரிஸ் `Parasyte: The Grey போன்ற படைப்புகள் இந்த வாரம் வெளியாகவிருக்கின்றன.

1. A Gentleman in Moscow (English) Prime - Apr 2

Amor Towles எழுதிய `A Gentleman in Moscow' நாவலை அதே பெயரில் சீரிஸாக இயக்கியிருக்கிறார்கள் Sam Miller, Sarah O'Gorman. அலெக்ஸாண்டர் ரோஸ்டோவ் வீட்டுச்சிறையில் அடைபட்டிருந்தது பற்றி சொல்லுகிறது சீரிஸ்.

2. Ripley (English) Netflix - Apr 4

Patricia Highsmith எழுதிய The Talented Mr. Ripley புத்தகத்தின் தழுவலாக உருவாகியிருக்கும் சீரிஸ் `Ripley’. 1960களில் டாம் ரிப்லேவுக்கு ஒரு வேலை கொடுக்கிறார். இத்தாலியில் இருக்கும் தனது மகனின் மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்பது டாஸ்க். ஆனால் டாம் அதன் பின் செய்யும் வேலைகள் என்ன என்பதே கதை.

3. Parasyte: The Grey (Korean) Netflix - Apr 5

`Train to Busan’ படத்தை இயக்கிய Yeon Sang-ho இயக்கியுள்ள சீரிஸ் `Parasyte: The Grey'. பூமியில் களம் இறங்கும் வினோத க்ரியேச்சர்கள் மனித இனத்தை அழிக்கத் துவங்குகிறது. இதிலிருந்து எப்படி தப்புகிறார்கள் என்பதே கதை.

4. Sugar (English) Apple tv+ - Apr 5

Colin Farrell நடிப்பில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Sugar’. துப்பறிவாளர் ஜான் சுகர், காணமல் போன ஒலிவியாவை தேடுகிறார். இந்த மிஸ்ஸிங் கேஸில் அவர் கண்டுபிடிக்கது என்ன என்பதே கதை.

5. Files of the Unexplained (English) Netflix - Apr 3

நம்ப முடியாத விஷயங்கள் பின்னால் இருக்கும் அமானுஷ்யங்கள் என்ன? ஏன் அதற்கான விளக்கம் கிடைக்கவில்லை என்பனவற்றை விளக்குவதே இந்த ஆவணத்தொடர்.

6. Música (English) Prime - Apr 4

நடிகர் Rudy Mancuso இயக்குநராக களம் இறங்கியுள்ள படம் `Música’. ரூடி என்ற இளைஞனுக்கு இஸபெல்லா மீது காதல். ஆனால் ரூடிக்கு இருக்கும் ஒரு பிரச்சனையால் காதலில் சில சிக்கல்கள். இறுதியில் காதல் கைகூடியதா இல்லையா என்பதே கதை.

7. How To Date Billy Walsh (English) Prime - Apr 5

Alex Pillai இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அமேலியா - ஆர்ச்சி என்ற இரு நண்பர்கள், அவர்களின் வாழ்க்கை, காதல் பற்றி பேசும் படம்.

8. Scoop (English) Netflix - Apr 5

Philip Martin இயக்கத்தில் செக்ஸ் எஜூகேஷன் புகழ் Gillian Anderson நடித்திருக்கும் படம் `Scoop’. BBCயில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி, மிகப்பெரிய உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும், அது கிளப்பிய அதிர்வலைகள் கிளம்பியது. அந்த சம்பவத்தை படமாக எடுத்திருக்கிறார்கள்.

9. Kismat (Telugu) Prime - Apr 2

ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவான படம் `Kismat’. வேலைவெட்டி இல்லாத மூன்று இளைஞர்கள், ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் தப்புவதே கதை.

10. Lambasingi (Telugu) Hotstar - Apr 2

நவீன் காந்தி இயக்கத்தில் வெளியான படம் `Lambasingi'. ஊருக்குப் புதிதாக வரும் இளைஞன், அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். இவர்கள் காதலில் என்ன சிக்கல் என்பதே கதை.

11. Juni (Kannada) Prime - Apr 2

வைபவ் மஹாதேவ் இயக்கிய படம் `Juni’. பார்த்தாவுக்கு ஜூனி மேல் காதல். அந்தக் காதலுக்கு வரும் இடையூறுகள் என்ன என்பதே கதை.

12. Wish (English) Hotstar - Apr 3

Chris Buck, Fawn Veerasunthorn இயக்கத்தில் உருவான அனிமேஷன் படம் `Wish’. ஆஷா என்ற பெண்ணின் வாழ்க்கையில் ஒரு நட்சத்திரம் வருகிறது. அதன் பின் நிகழும் விஷயங்களே படம்.

13. Farrey (Hindi) Zee5 - Apr 5

நெட்ஃப்ளிக்ஸில் பிரபலமான இந்தி தொடர் Jamtaraவை இயக்கிய சோமேந்த்ர பதி இயக்கிய படம் `Farrey’. 2017ல் வெளியான தாய் மொழிப் படமான `Bad Genius' ரீமேக் தான் Farrey. நியாதி ஒரு புத்திசாலி மாணவி. அவளுக்கு மிகப் பெரிய பள்ளியில் சேரும் வாய்ப்பு அமைகிறது. அங்கு படிப்பு ஏறாத பணக்கார மாணவர்கள் சிலர், பரீட்சையில் பிட் அடிக்க நியாதியிடம் பிசினஸ் பேசுகிறார்கள். அவளும் அதை ஏற்றுக் கொள்ள, பின்னர் நடப்பவை என்ன என்பதே கதை. சல்மான் கானின் சகோதரி மகள் அலிஸ் அக்னிஹோத்ரி தான் படத்தில் நியாதி ரோலில் நடித்து சினிமாவில் களம் இறங்கியிருக்கிறார்.

14. Kalvan (Tamil) - Apr 4

பி வி ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா நடித்திருக்கும் படம் `கள்வன்’. கெம்பன் ஒரு தாத்தாவை தத்தெடுத்து ஊருக்குள் நுழைகிறான். அதற்கு முன் அவன் வாழ்வில் என்ன நடந்தது, அதற்கு பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

15. Double Tuckerr (Tamil) - Apr 5

மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ் நடித்துள்ள படம் `டபுள் டக்கர்’. ஆயுட்காலம் முடியும் முன்பே ஒரு இளைஞனின் உயிரைப் பரித்துவிடுகிறார்கள் லெஃப்ட், ரைட் என்ற மேல்லோக வாசிகள். அதன் பின் நடக்கும் காமெடி கலாட்டாக்களே கதை.

16. White Rose (Tamil) - Apr 5

ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி, ஆர் கே சுரேஷ் நடித்துள்ள படம் `White Rose'. கடத்தப்பட்ட தன் குழந்தையை மீட்கப் போராடும் ஒரு தாய், சைக்கோ கொலைகாரன் ஒருவனை பிடிக்க துரத்தும் போலீஸ் இவர்களின் பாதை சந்தித்துக் கொண்ட பின் நடப்பவையே கதை.

17. Vallavan Vaguthadhada (Tamil) - Apr 5

Vallavan Vaguthadhada
Vallavan Vaguthadhada

வினாயக் துரை இயக்கியிருக்கும் படம் `வல்லவன் வகுத்ததடா’. 5 ஸ்டேஞ்சர்களை ஒரு கொள்ளை சம்பவம் இணைக்கிறது. அதன் பின் நடப்பதென்ன என்பதே கதை.

18. Aalakaalam (Tamil) - Apr 5

Aalakaalam
Aalakaalam

ஜெயகிஷ்ணமூர்த்தி இயக்கி நடித்திருக்கும் படம் `ஆலாகாலம்’. கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞனின் வாழ்வில் வரும் காதல், அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

19. Iravin Kangal (Tamil) - Apr 5

சுரேஷ் குமரன் இயக்கி நடித்திருக்கும் படம் `இரவின் கண்கள்’. விக்டர் பெங்களூரிலும், அவனது மனைவி துபாயிலும் வேலை பார்க்கிறார்கள். எதிர்பாராத சில சம்பவ்ங்களால் விக்டர் ஒரு கொலைகாரன் ஆகிறார். அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.

20. Family Star (Telugu) - Apr 5

`கீதா கோவிந்தம்’ படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா - பரசுராம் கூட்டணி இணைந்து உருவாக்கியுள்ள படம் `Family Star’. கோவர்தன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர். ஆனால் அதில் சில சிக்கல்கள் வருகிறது. அவற்றை சமாளித்தாரா என்பதே கதை.

21. Avatara Purusha 2 (Kannada) - Apr 5

சிம்பிள் சுனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Avatara Purusha 2’. வழக்கம் போல் ஒரு ஹாரர் காமெடி படமாக உருவாகியிருக்கிறது.

22. Dukaan (Hindi) - Apr 5

சித்தார்த் - கரிம்மா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Dukaan’. வாடகைத் தாயாக மாறும் பெண் பற்றிய கதை.

23. One Life (English) - Apr 5

James Hawes இயக்கத்தில் Anthony Hopkins, Helena Bonham Carter நடித்துள்ள படம் `One Life'. இரண்டாம் உலகப்போரின் போது செகோஸ்லோவியாவில் நடந்த மீட்பு பணிகளைப் பற்றிய படம்.

24. Love Lies Bleeding (English) - Apr 5

Rose Glass இயக்கத்தில் Kristen Stewart, Katy O'Brian நடித்துள்ள படம் `Love Lies Bleeding'. ஜிம் ட்ரைனருக்கும், விரைவிலே வர இருக்கும் போட்டிக்கு தயாராகும் பாடிபில்டருக்கும் இடையில் காதல் பூக்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

25. The First Omen (English) - Apr 5

Arkasha Stevenson இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The First Omen’. சீக்குவல் எடுத்து எடுத்து சலித்துப் போன ஹாலிவுட் இம்முறை ப்ரீக்குவல் பேய்ப்படம் எடுத்திருக்கிறது. 1976ல் வெளியான The Omen படத்திற்கு ப்ரீக்குவலாக உருவாகியிருக்கிறது படம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com