kalki The bear
kalki The bearKALKI | THE BEAR

KALKI | THE BEAR ... இந்த வார ஓடிடி தியேட்டர் வாட்ச்லிஸ்ட் இதோ..!

KALKI | THE BEAR ... இந்த வார ஓடிடி தியேட்டர் வாட்ச்லிஸ்ட் இதோ..!

1. The Bear S3 (English) Hotstar - June 27

The Bear
The BearHotstar

கார்மன் தனது குடும்பத்திற்கு சொந்தமான உணவகத்தை எடுத்து நடத்தும் போது அவருக்கு வரும் சவால்களே `The Bear’ சீரிஸின் கதை.

2. WondLa (English) Apple tv+ - June 28

WondLa
WondLaApple tv+

The Search for WondLa என்ற புத்தகத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் அனிமேஷன் சீரிஸ் `WondLa'. இந்த உலகத்தில் தனக்கான இடத்தை தேடும் இளம் பெண்ணின் பயணமே கதை.

3. Sharmajee Ki Beti (Hindi) Prime - June 28

Sharmajee Ki Beti
Sharmajee Ki Beti Prime

தஹிரா காஷ்யப் குரானா இயக்கத்தில் சாக்‌ஷி தன்வர், திவ்யா தத், சயாமி கெர் நடித்துள்ள படம் `Sharmajee Ki Beti'. வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த பெண்களைப் பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது.

4. Rautu Ki Beli (Hindi) Zee5 - June 28

Rautu Ki Beli
Rautu Ki BeliZee5

நவாசுதீன் சித்திக் நடித்துள்ள படம் `Rautu Ki Beli'. பள்ளி ஒன்றின் வாட்ச்மேன் கொலை செய்யப்பட, அந்த வழக்கு இன்ஸ்பெக்டர் தீபக் நெகிக்கு வருகிறது. இதை கண்டுபிடிக்கும் தேடுதலில் அவர் அறியும் உண்மைகள் என்ன என்பதே கதை.

5. A Family Affair (English) Netflix - June 28

A Family Affair
A Family Affair Netflix

Richard LaGravenese இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `A Family Affair'. ஒரு இளம் பெண் தனது அம்மாவின் காதல் பற்றி அறிந்த பின் நடப்பைவே கதை.

6. Fancy Dance (English) Apple tv+ - June 28

Erica Tremblay இயக்கத்தில் Lily Gladstone நடித்துள்ள படம் `Fancy Dance’. தொலைந்து போன தனது தங்கையை தேடும் ஜேக்ஸ் என்ற பெண்ணைப் பற்றிய கதை.

7. Uyir Thamizhukku (Tamil) Aha - June 25

ஆதம் பாவா இயக்கத்தில் அமீர் நடித்த படம் `உயிர் தமிழுக்கு’. ஒரு பொலிட்டிகல் காமெடி படமாக உருவாகியிருக்கிறது.

8. Silent Night (English) Prime - June 25

Broken Arrow, Face/Off, Mission: Impossible 2 போன்ற படங்களில் இயக்குநர் John Woo இயக்கத்தில் உருவான படம் `Silent Night’. தனது மகனின் சாவுக்குக் காரணமான, கும்பலை பழி தீர்க்க கிளம்பும் ஒரு தந்தையைப் பற்றிய கதை.

9. Love Mouli (Telugu) Aha - June 27

நவ்தீப் நடித்த படம் `Love Mouli’, ஒரு இளைஞனின் வாழ்வில் வரும் காதல், அதனால் நடக்கும் மாற்றங்களே கதை.

10. Guruvayoor Ambalanadayil (Malayalam) Hotstar - June 27

Guruvayoor Ambalanadayil
Guruvayoor Ambalanadayil

விபின் தாஸ் இயக்கத்தில் ப்ரித்விராஜ், பேசில் ஜோசப் நடித்த படம் `Guruvayoor Ambalanadayil'. திருமண வீடு ஒன்றில் ஏற்படும் குழப்பமும், அதைத் தொடர்ந்து நடக்கும் கலாட்டாக்களுமே கதை.

11. Bhaje Vaayu Vegam (Telugu) Netflix - June 28

கார்த்திகேயா நடித்த படம் `Bhaje Vaayu Vegam'. அரசியல்வாதிகளாலும், போலீஸ், ரௌடி என அனைவரும் ஒரு இளைஞனை துரத்துகிறார்கள். இதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com