Thor: Ragnarok, Jojo Rabbit, Thor: Love and Thunder போன்ற படங்களை இயக்கிய Taika Waititi இப்போது இயக்கியுள்ள சீரிஸ் `Time Bandits'. ஒரு திருட்டு கும்பல், வரலாறு மேல் ஆர்வம் கொண்ட ஒரு சிறுவனுடன் இணைந்து செல்லும் டைம் ட்ராவல் தான் கதை.
Michael Uppendahl இயக்கியுள்ள சீரிஸ் `The Decameron'. 1348ம் ஆண்டு நிகழ்ந்த ப்ளாக் டெத் சூழலில் வர்க பேதம், அதிகார மோதல், உயிர் பிழைத்திருக்க முயற்சிகள் போன்றவற்றை சொல்கிறது.
ராதா மோகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள சீரிஸ் `சட்னி சாம்பார்’. குடும்பம் ஏதும் இல்லாத ஒரு தட்டுக்கடை வியாபாரி, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்த பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
Guy Ritchie இயக்கியுள்ள படம் `The Ministry of Ungentlemanly Warfare’. ப்ரிட்டிஷ் ராணுவம் ஒரு திறமையான குழுவை, ஜெர்மன் படைக்கு எதிராக சண்டையிட இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அனுப்புகிறது. அதில் நடக்கும் அதிரடிகள் தான் படம்.
பாலிவுட்டில் சுந்தர் சி, லாரன்ஸுக்கே சவால் விடும் ஹாரர் பட இயக்குநர் விக்ரம் பட். இப்போது இவர் எடுத்திருக்கும் ஹாரர் படம் `Bloody Ishq’. நேஹா ஒரு பெரிய இழப்புக்கு பின், நிம்மதி தேடி ஒரு அமைதியான இடத்திற்கு செல்கிறார். ஆனால் அங்கு அவளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகளே கதை.
சஜின் லால் இயக்கிய படம் `கிரா2ண்மா’. பெண் குழந்தை ஒன்று இறந்து போன தன் பாட்டியின் ஆன்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். இது தெரிய வந்த பின் நடப்பவையே கதை.
மோகன்ராஜ் இயக்கியுள்ள படம் `காழ்’. ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பின் ஒரு தம்பதியும், ஒரு மாணவனும் சந்திக்கும் சிக்கல்களும், அதிலிருந்து அவர்கள் மீழ்வதுமே கதை.
கிருஷ்ணமாச்சாரி இயக்கிய படம் `Raju Yadav'. எதிர்பாராத விபத்திற்குப் பிறகு ராஜூவுக்கு ஒரு பிரச்சனை உண்டாகிறது. எப்போதும் அவர் சிரித்துக் கொண்டிருப்பதைப் போல முகம் மாறிவிடுகிறது. இதனால் அவர் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதே கதை.
குகன் இயக்கத்தில் வசந்த் ரவி, சத்யராஜ் நடித்த படம் `வெப்பன்’. சூப்பர் ஹுமன் ஒருவரைத் தேடும் படலத்தில் நடக்கும் விஷயங்களே கதை.
பிரசன்னா இயக்கத்தில் ரோஷன் மேத்திவ், தர்ஷனா நடித்த படம் `Paradise'. தங்களது ஐந்தாவது திருமண நாளை கொண்டாட இலங்கை வருகிறார்கள் ஒரு தம்பதி. அங்கு நடக்கும் சம்பவங்களால் அவர்கள் உறவில் என்ன மாற்றம் வருகிறது என்பதே கதை.
நசீர் இயக்கத்தில் உருவாகிய படம் `Swakaryam Sambhavabahulam'. ஒரு கிராமத்திலிருக்கும் சில நபர்களின் வாழ்க்கை ஒரு சம்பவத்தால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதே கதை.
மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான 100வது படம் `Bhaiyya Ji’. தன்னுடைய குடும்பத்தில் நிகழ்ந்த இழப்புக்கு பழி வாங்க புறப்படும் ஒருவனின் கதை.
Peter Hutchings இயக்கிய படம் `Which Brings Me to You'. ஜேன் - வில் இருவரும் காதலில் விழ, அவர்களின் காதலில் என்ன பிரச்சனை வருகிறது, அது சரியானதா இல்லையா என்பதே கதை.
Ghostbusters பட வரிசையில் ஐந்தாவது படமாக உருவானது `Ghostbusters: Frozen Empire’. ஒரு பழைமையான விமானத்தில் இருந்து கிளம்பும் தீய சக்திகளை வேட்டையாட செல்கிறது Ghostbusters குழு. அவர்கள் ஜெயித்தார்களா என்பதே கதை.
மகேந்திரா இயக்கிய படம் `Bharathanatyam’. சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றும் ராஜூசுந்தரம் என்ற இளைஞனைப் பற்றிய கதை.
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் `ராயன்’. ஒரு இளைஞன் தன் குடும்பத்துக்காக பழி வாங்க கிளம்புகிறான், அந்தப் பயணத்தில் நடப்பவையே கதை.
ராம் இயக்கியுள்ள படம் `Purushothamudu’. ரச்சித் ராம் என்ற இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளும், அதை எப்படி தீர்க்கிறார் என்பதுமே கதை.
அர்ஃபாஸ் இயக்கியுள்ள படம் `Level Cross'. சைத்தாலி என்ற பெண், ரகுவை சந்தித்த பின் நடக்கும் நிகவுகளே கதை.
நீரஜ் சஹாய் இயக்கியுள்ள படம் `The UP Files’. அபய் சிங் உத்திரபிரதேசத்தின் முதலமைச்சராகிறார். அதன் பின் அந்த மாநிலம் சந்திக்கும் சிக்கல்கள் என்பதை சொல்கிறது படம்.
Shawn Levy இயக்கியுள்ள படம் `Deadpool & Wolverine'. தலைப்பிலேயே படத்திக் கதை தெரிந்திருக்கும். ஆம், Deadpool மற்றும் Wolverine இணைந்து எதிரிகளை அழிப்பதே கதை