BOYS | மகாராஜா | INSIDE OUT 2
BOYS | மகாராஜா | INSIDE OUT 2BOYS | மகாராஜா | INSIDE OUT 2

BOYS | மகாராஜா | INSIDE OUT 2... இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

BOYS | மகாராஜா | INSIDE OUT 2... இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

1. Gaanth, Chapter 1: Jamnaa Paar (Hindi) Jio Cinema - June 11

Gaanth, Chapter 1: Jamnaa Paar
Gaanth, Chapter 1: Jamnaa Paar Jio Cinema

Kanishk Varma இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Gaanth, Chapter 1: Jamnaa Paar'. கடர் சிங் ஒரு குடும்பம் மொத்தமும் மரணமடைந்த வழக்கை விசாரிக்கிறார். இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை கண்டுபிடிப்பதே கதை.

2. Not Dead Yet: S2 (English) Hotstar - June 12

Not Dead Yet: S2
Not Dead Yet: S2 Hotstar

Sitcom வகைமை சீரிஸ் `Not Dead Yet'. இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. Nell Serrano உடைந்து போன தனது வாழ்வையும், வேலை வாய்ப்பையும் சரி செய்யும் சூழலில் சிக்குகிறார். அதற்காக அவர் என்ன செய்கிறார் என்பதே கதை.

3. Presumed Innocent (English) Apple TV+ - June 12

Presumed Innocent
Presumed InnocentApple TV+

Greg Yaitanes, Anne Sewitsky இயக்கத்தில் Jake Gyllenhaal நடித்துள்ள சீரிஸ் `Presumed Innocent’. ஒரு கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபராக வழக்கறிஞர் ஒருவர் சிக்குகிறார். அதன் பின் நடப்பவையே கதை.

4. The Boys: S4 (English) Prime - June 13

The Boys: S4
The Boys: S4Prime

புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ சீரிஸ் `The Boys'. இதன் நான்காவது சீசன் வெளியாகவுள்ளது. சூப்பர் ஹீரோஸ் செய்யும் அக்கிரமங்களை தட்டிக் கேட்கும் குழுவைப் பற்றிய கதை.

5. Bridgerton S3: P2 (English) Netflix - June 13

Bridgerton S3: P2
Bridgerton S3: P2Netflix

Julia Quinn எழுதிய Bridgerton நாவலைத் தழுவி அதே பெயரில் சீரிஸ் உருவானது. இப்போது அதில் மூன்றாவது சீசனின் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இங்கிலாந்தில் வாழும் அதிகாரமிக்க Bridgerton குடும்பத்தில் நிகழும் விஷயங்களே கதை.

6. Paruvu (Telugu) Zee5 - June 14

Paruvu
ParuvuZee5

Siddharth naidu , Rajashekar Vadlapati இயக்கத்தில் நரேஷ், நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள சீரிஸ் `Paruvu’. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி, தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகிறது. அங்கு அவர்கள் சிக்கிக் கொள்ளும் ஒரு பிரச்சனையில் இருந்து வெளி வந்தார்களா என்பதே கதை.

7. Luv Ki Arrange Marriage (Hindi) Zee5 - June 14

Luv Ki Arrange Marriage
Luv Ki Arrange MarriageZee5

இஷார்த் கான் இயக்கியிருக்கும் படம் `Luv Ki Arrange Marriage'. இஷிகாவை பார்த்ததும் லூவ்விற்கு காதல். அவளை திருமணம் செய்யும் முயற்சியில் அவன் இருக்க, இன்னொரு பக்கம் இஷிகாவின் அம்மாவின் மீது காதலில் விழுகிறார் லுவ்வின் தந்தை. இதன் பின் நடக்கும் காமெடி கலாட்டாக்களே கதை.

8. Maharaj (Hindi) Netflix - June 14

Maharaj
MaharajNetflix

அமீர்கானின் மகன் ஜூனயத் கான் நடித்துள்ள படம் `Maharaj’. 1862ல் நடந்த Maharaj Libel Caseஐ மையப்படுத்தி உருவாகியிருக்கிறது.
The film is based on the Maharaj Libel Case which took place in 1862.

9. Ultraman: Rising (English) Netflix - June 14

Ultraman: Rising
Ultraman: Rising Netflix

Shannon Tindle இயக்கத்தில் உருவாகியிருக்கும் அனிமேஷன் படம் `Ultraman: Rising'. டோக்கியோ நகரத்திற்கு வரும் ஆபத்திலியிருந்து அல்ட்ராமேன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.

10. Paarijatha Parvam (Telugu) Aha - June 12

Paarijatha Parvam
Paarijatha ParvamAha

சந்தோஷ் இயக்கிய படம் `Paarijatha Parvam'. இரண்டு கேங்குகள், ஒரே நபரை கடத்த திட்டமிடுகிறார்கள், அதில் நடக்கும் கலாட்டாக்களும் காமெடிகளுமே கதை.

11. Gangs of Godavari (Telugu) Netflix - June 13

Gangs of Godavari
Gangs of Godavari Netflix

விஷ்வாக் சென் நடித்த படம் `Gangs of Godavari’. 1980களில் கோதாவரி கடற்கரை பகுதிகளில் நடக்கும் அரசியலும், ரௌடியிசமும் தான் கதைக் களம்.

12. Kurangu Pedal (Tamil) Aha - June 14

Kurangu Pedal
Kurangu Pedal Aha

மதுபானக்கடை என்ற தரமான படத்தைக் கொடுத்த கமலக்கண்ணன், இப்போது இயக்கிய படம் `குரங்கு பெடல்’. தந்தை - மகன் - சைக்கிள் இம்மூன்றையும் மையப்படுத்திய ஒரு கதை.

13. The Iron Claw (English) Lionsgate Play - June 14

The Iron Claw
The Iron ClawLionsgate Play

Sean Durkin இயக்கத்தில் உருவான படம் `The Iron Claw'. 80களில் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்ட Von Erich brothers பற்றிய படமாக உருவாகியிருக்கிறது.

14. Maharaja (Tamil) - June 13

Maharaja
Maharaja

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியிருக்கிறது `மஹாராஜா’. முடி திருத்தும் கலைஞர் ஒருவர், தனது சொந்த இழப்பு ஒன்றுக்காக பழிவாங்க அலைகிறார். அது என்ன என்பதே கதை.

15. Harom Hara - The Revolt (Telugu) - June 14

Harom Hara
Harom Hara

ஞானசேகர் த்வாரகா இயக்கத்தில் சுதீர் பாபு படம் `Harom Hara'. 1980களில் வேலை வாய்ப்பு இல்லாமல், சட்டத்துக்கு புறம்பான ஆயுத உற்பத்திக்குள் நுழையும் நபர், எப்படி ஆயுத சாம்ராஜ்யத்தை உருவாக்கினான் என்பதே கதை.

16. Yevam (Telugu) - June 14

Yevam
Yevam

பிரகாஷ் இயக்கத்தில் சாந்தினி சௌத்ரி நடித்துள்ள படம் `Yevam’. பெண் காவலதிகாரி சௌம்யா, தன்னுடைய பணியில் சந்திக்கும் சவால்களே கதை.

17. Grrr (Malayalam) - June 14

Grrr
Grrr

பிரித்விராஜ் நடிப்பில் எஸ்ரா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த ஜே கே, தற்போது இயக்கியிருக்கும் படம் `Grrr'. விலங்குகள் சரணாலயத்தில் சிங்கம் இருக்கும் பகுதியில் இருவர் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பிக்க செய்யும் முயற்சிகளே கதை.

18. DNA (Malayalam) - June 14

DNA
DNA

சுரேஷ்பாபு இயக்கத்தில் லக்‌ஷ்மிராய் நடித்துள்ள படம் `DNA’. நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் குற்றங்களை விசாரிக்கும் போலீஸ், குற்றவாளியை பிடித்தார்களா என்பதே கதை.

19. Kotee (Kannada) - June 14

Kotee
Kotee

பரம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Kotee’. அதிகாரம் மிக்க கேங்க் லீடரை எதிர்த்து போராடும் இளைஞனைப் பற்றிய கதை.

20. Shivamma Yarehanchinnala (Kannada) - June 14

Shivamma Yarehanchinnala
Shivamma Yarehanchinnala

ஜெய்ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Shivamma Yarehanchinnala'. 46 வயதான சிவாம்மா, விரைவாக பணம் சம்பாதிக்க பல விதத்தில் முதலீடு செய்கிறார். ஆனால் அவை எல்லாம் அவரது மகளின் திருமணத்திற்கு முட்டுக்கட்டையாகவே மாறுகிறது. இது எப்படி சரியானது என்பதே கதை.

21. Chandu Champion (Hindi) - June 14

Chandu Champion
Chandu Champion

கபீர் கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Chandu Champion’. ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்கப் போராடியவரின் கதை.

22. Inside Out 2 (English) - June 14

Inside Out 2
Inside Out 2

2015ல் வெளியான Inside Out படத்தின் சீக்குவல் `Inside Out 2’. முதல் பாகத்தில் சிறுமி ரெய்லியின் உணர்வுகளை பேசியது படம். இப்போது அவள் தனது பதின் பருவத்தில் இருக்கிறாள். அவளுக்குள் எற்படும் புதிய உணர்வுகளைப் பற்றி கூறுகிறது படம்.

23. The Watchers (English) - June 14

The Watchers
The Watchers

மனோஜ் நைட் ஷ்யாமளனின் மகள் இஷானா ஷ்யாமளன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The Watchers’. மினா என்ற பெண், காட்டில் சிக்கிக் கொள்கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் சிக்கல்களே படம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com