Narcos சீரிஸை இயக்கிய Andrés Baiz இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Griselda’. மயாமி அண்டர்வேல்ட் போதை பொருள் கும்பல் தலைவி Griselda Blanco வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள்.
2020ல் வெளியான `Guilty’ படத்தின் இயக்குநர் Ruchi Narain இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் `Karmma Calling'. பழிவாங்க கிளம்பும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த சீரிஸ்.
2020ல் வெளியான ஒரு ஃபீல் குட் சீரிஸ் `Panchayat’. அதன் இரண்டாவது சீசன் 2022ல் வெளியாகி கலவையான ரெஸ்பான்ஸைப் பெற்றது. வரவிருக்கும் மூன்றாவது சீரிஸில் கம்பேக் கொடுக்குமா என்று பொருத்திருந்து பார்ப்போம். உத்திர பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில், பஞ்சாயத் செயலாளராக பணிக்கு சேர்கிறார் ஒரு நகரத்து இளைஞன். அவனுக்கும் அந்த கிராமத்துக்குமான உறவை சொல்லும் சீரிஸ் இது..
மேண்டரின் படமான The Farewellஐ இயக்கிய Lulu Wang இயக்கியுள்ள சீரிஸ் `Expats’. Janice Y. K. Lee எழுதிய `The Expatriates' நாவலைத் தழுவி உருவாகியிருக்கிறது. ஹாங் காங்கில் வாழும் பல்வேறு படி நிலைகளைச் சேர்ந்த பெண்களைப் பற்றிய கூறுகிறது சீரிஸ்.
Donald L. Miller எழுதிய Masters of the Air: America's Bomber Boys Who Fought the Air War Against Nazi Germany புத்தகத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் சீரிஸ் `Masters of the Air’. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அமெரிக்காவின் பாமர் பாய்ஸ், ஜெர்மானிய படையை எதிர்த்து எப்படி போராடியது என்பதை சொல்கிறது இந்த சீரிஸ்.
Michael Winnick இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Disquiet’. ஒரு பெரிய விபத்திற்கு பிறகு, சாம் ஒரு கைவிடப்பட்ட மருத்துவமனையில் கண் விழிக்கிறார். அங்கு இருக்கும் மர்மமான சக்தி அவனை வெளியே செல்லவிடாமல் தடுக்கிறது. அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.
கன்னடத்தில் Bell Bottom என்ற ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குநர் Jayatheertha. அவர் இயக்கத்தில் அடுத்தாக உருவான படம் `Banaras’. ஹீரோ - ஹீரோயின் காதலில் ஒரு வித்யாசமான பிரச்சனை வருகிறது. அது என்ன? எப்படி சரியாகிறது என்பதே கதை.
Jeethu Joseph - Mohanlal கூட்டணியில் உருவான படம் `Neru’. சாரா, பார்வை சவால் கொண்டவர். அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக நீதிப் போராட்டம் நடத்துகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.
Sapta Sagaradaache Ello – Side Aவில் மனு - ப்ரியாவின் காதலில் துவங்கி, மனு செய்யாத குற்றத்திற்கு சிறை சென்று, பத்து வருடங்கள் கழித்து வெளியாவதில் முடிந்தது. அதன் பின்பு நடக்கும் நிகழ்வுகளே படத்தின் கதை.
Sandeep Reddy Vanga இயக்கத்தில் Ranbir Kapoor, Anil Kapoor, Bobby Deol, Rashmika Mandanna, Triptii Dimri நடித்த படம் `Animal’. தந்தையை கொல்ல நினைக்கும் நபரை, வேட்டையாட கிளம்பும் மகனின் தேடுதலே கதை. தியேட்டரில் வெளியான படத்தின் நீளம் 3 மணிநேரம் 21 நிமிடம் 23 வினாடிகள். ஓடிடி வெர்ஷனில் கூடுதலாக 8 நிமிடம் 1 வினாடியை சேர்த்து, 3 மணிநேரம் 29 நிமிடம் 24 வினாடிகளாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Talvar, Raazi, Chhapaak போன்ற படங்களை இயக்கிய Meghna Gulzar இயக்கத்தில் உருவான படம் `Sam Bahadur'. இந்திய ராணுவ அதிகாரியாக இருந்து முதன் முதலில் படைத் தலைவராக பதவி உயர்வு பெற்ற சாம் மனேக்ஷாவின் பயோபிக்காக உருவானது இப்படம்.
விஜயகுமார் நாயகனாக நடித்து வெளியான படம் `ஃபைட் க்ளப்’. பணத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் எளிய மனிதர்களின் வாழ்வில் நிகழ்த்தப்படும் அரசியலும், சூழ்ச்சிகளுமே படத்தின் கதை.
கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கும் படம் `சிங்கப்பூர் சலூன்’. படிப்பில் கில்லி, நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு இருந்தும், தன் மனதுக்குப் பிடித்த சிகை அலங்கார நிபுணராக ஆசைப்படும் ஒரு இளைஞன் பற்றிய கதை. அவர் சந்திக்கும் சவால்கள் என்ன? அவனது கனவு நிறைவேறியதா? என்பதே கதை.
அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, திவ்யா துரைசாமி நடித்திருக்கும் படம் `ப்ளூ ஸ்டார்’. அரக்கோணத்தைச் சேர்ந்த இரு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களுக்கு இடையிலான மோதலும், விளையாட்டில் கலக்கும் அரசியலுமே கதைக் களம்.
யோகிபாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கும் படம் `தூக்குதுரை’. கிணறு வெட்ட பூதம் கிளம்புவதைப் போல, விலைமதிப்பற்ற க்ரீடத்தை தூக்க, பேய் கிளம்புகிறது. அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.
வீரபாபு இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் படம் `முடக்கறுத்தான்’. குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக போராடும் போலீஸின் கதைதான் படம்.
Lijo Jose Pellissery இயக்கத்தில் Mohanlal நடித்திருக்கும் படம் `Malaikottai Vaaliban'. சரித்திரத்தில் புகழ்பெற்ற ஒரு வீரனைப் பற்றியும், மக்களுக்காக அவன் செய்த போரட்டத்தைப் பற்றியும் சொல்லும் பீரியட் சினிமாவாக உருவாகியிருக்கிறது.
War. Pathaan என யஷ்ராஜ் யுனிவர்ஸை இயக்கிய கையோடு, தனது யுனிவர்ஸை Fighter மூலம் துவங்கியிருக்கிறார் இயக்குநர் Siddharth Anand. இந்திய விமானப்படை வீரர்கள் சேர்ந்து, ரஜினி ஸ்டைலில் தரையில் கால் வைக்காமல் , சும்மா பறந்து பறந்து நாட்டுக்கு வரும் ஆபத்தை விரட்டியடிப்பதே கதை. குடியரசு தினத்தை குறிவைத்து தேசபக்தி படமாக தயாராகியிருக்கிறது.
தினேஷ், யோகிபாபு, உபசனா நடித்திருக்கும் படம் `லோக்கல் சரக்கு’. மதுவுக்கு அடிமையான ஒருவன், திருமணத்திற்குப் பிறகு என்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் என சொல்லும் படம்.
நவீன்குமார் சந்திரன் இயக்கி நடித்திருக்கும் படம் `நியதி’. செழியன் என்ற துப்பறிவாளர் வாழ்க்கையில் பல பிரச்சனைகள். ஒன்றை சரி செய்தால், மற்றொன்று எழுகிறது. இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.