புனேவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழச்சியை இடைமறித்து நிறுத்திய காவலர்கள் - நடந்தது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இரவு 10 மணியை கடந்தும் நடத்தப்பட்ட ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காவல்துறையினர் இடைமறித்து நிறுத்திய சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான், புனே
ஏ.ஆர்.ரஹ்மான், புனே@arrahaman twitter
Published on

கடந்த ஏப்ரல் 30-ம் தேதி இரவு மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் ராஜ பகதூர் மில்ஸில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், இசை நிகழ்ச்சி நடந்த மேடை மீது ஏறிய காவலர் ஒருவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிற இசைக் கலைஞர்களை நோக்கி நிகழ்ச்சியை நிறுத்தும்படி கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை தாண்டி இசை நிகழ்ச்சி நடைபெற்றதால், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இசை நிகழ்ச்சியை நிறுத்த சொல்லியதாக புனே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், இசை நிகழ்ச்சியை வெகுவாக ரசித்த புனே மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால், இசை நிகழ்ச்சி இடைமறித்து நிறுத்தப்பட்டது தொடர்பாக எதையும் அவர் குறிப்பிடவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com