வில் ஸ்மித் தொகுப்பாளரை அறைந்த ஆஸ்கர் விழாவை 15.36 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறையை விட 56% அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதாகவும் தகவல்.
நேற்று ஒளிபரப்பான ஆஸ்கர் விருது விழாவை 15.36 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்ததாக ஏபிசி நிறுவனம் வெலியிட்ட ஆரம்ப பார்வையாளர்களின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பார்வையாளர் இன்றி விழா நடந்ததால், தொலைக்காட்சியில் விழாவைப் பார்த்தவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவில் சரிந்தது. கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை 9.85 மில்லியன் நேரடி பார்வையாளர்கள் பார்த்தனர். ஆஸ்கர் வரலாற்றிலேயே மிகக் குறைந்த பார்வையாளர்களை பெற்றதால் இந்தாண்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல ஆஸ்கர் குழு திட்டமிட்டது.
சிறந்த துணை நடிகருக்கான விருது, ட்யூன் படக்குழுவோடு உரையாடல் என பல விஷயங்கள் சுவாரஸ்யமாக நிக்ழ்ந்தன. அனைத்திற்கும் உச்சமாக வில் ஸ்மித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்தது இணையத்தில் வைரலாகியது. டிவிட்டர் ட்ரெண்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்றது. இந்நிலையில் ஏபிசி நிறுவனம் வெளியிட்ட துவக்க பார்வையாளர் புள்ளிவிவரத்தில் நேற்றைய ஆஸ்கர் விழாவை சுமார் 15.36 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்தாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறையை விட 56% பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும் 2019 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகள் 23.6 மில்லியன் அமெரிக்கர்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தனியார் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரம். அதிகாரப்பூர்வ பார்வையாளர் ரேட்டிங் இனிதான் வெளியாகும்.