ஆன்லைன் சினிமா டிக்கெட்: சேவைக் கட்டணத்தில் மாற்றம்

ஆன்லைன் சினிமா டிக்கெட்: சேவைக் கட்டணத்தில் மாற்றம்
ஆன்லைன் சினிமா டிக்கெட்: சேவைக் கட்டணத்தில் மாற்றம்
Published on

ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக இருப்பது தியேட்டர்கள். திரையங்கில் படங்களை காண தற்போது அந்தந்த தியேட்டர்களில் நேரடியாக டிக்கெட் வாங்க முடியும். அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் வழியாகவும் டிக்கெட் புக் செய்ய முடியும். இதனிடையே ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆன்லைனில் எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்கும் நடைமுறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com