’நஸ்ரியா இனி அவ்வளவுதான். கல்யாணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டாப்பா. எந்த கணவன், தன் மனைவி நடிக்கறதை அனுமதிச்சிருக்காங் க. அப்படியே நடிச்சாலும் ரொமான்டிக் காட்சியில நடிக்கவே மாட்டாங்க’- இப்படியெல்லாம் என்னை பத்தி நிறைய பேசினாங்க. அவங்க பேசினது சரிதான். ஆனா, நான் அதுல இருந்து மாறுபட்டவள். அழகான ரொமான்டிக் கதையில இப்ப நடிச்சிருக்கேன்’’ என்கிறார் நஸ்ரியா.
-திருமணத்துக்குப் பிறகு நான்கு வருடம் சினிமாவுக்கு லீவ் போட்டிருந்த நஸ்ரியா, ’கூடே’ மூலம் திரும்பி வந்திருக்கிறார் கேமராவுக்கு முன்னால். ’பெங்களூர் டேஸ்’ படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கியிருக்கும் படம். பிருத்விராஜ், பார்வதி மேனன், ரோஷனுடன் நஸ்ரியாவுக்கும் முக்கிய வேடம்.
’’கல்யாணம் பண்ணியாச்சு. ’சும்மா இருந்துட்டிருக்கியே, அடுத்தாப்ல கதை ஏதும் கேட்கலையா?’ன்னு கேட்டார் கணவர் பஹத் பாசில். ‘இப்போதைக்கு வேண்டாம். இந்த இடைவெளியை ரொம்ப ரசிக்கிறேன்’ன்னு பதில் சொன்னேன். நிறைய பேர், சும்மா இருக்கிறது போரடிக் கலையான்னு கேட்டாங்க. நான் எங்க சும்மா இருந்தேன்? நானும் பஹத்தும் லண்டன், ஆம்ஸ்டர்டாம், அமெரிக்காவுக்கு டிராவல் பண்ணினோம். கல்யாணத்துக்கு பிறகு அவர் ஒரு வருஷம் பிரேக் எடுத்துக்கிட்டார். தனிப்பட்ட முறையிலயும் கேரியர்லயும் திருமண வாழ்க்கை எந்த வகையிலயும் பாதிக்கலை. முதல்ல எப்படி இருந்தேனோ, அப்படியேதான் இப்பவும் இருக்கிறேன். அப்பதான் அஞ்சலி மேனன் என்னை பார்த்தாங்க. ’நாம படம் பண்ண வேண்டாமா?’ன்னு கேட்டாங்க. கரெக்டா ஆறு மாசத்துக்குப் பிறகு இந்தக் கதையோட வந்தாங்க. எனக்குப் பிடிச்சிருந்தது. களத்துல இறங்கிட்டேன்’ என்று கூலாகிறார் நஸ்ரியா.
படத்தில், பிருத்விக்கு தங்கையாக நடித்திருக்கிறார். ‘’ஆமா. அவரோட உயரத்துல பாதிதான் நான் இருக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்ல முதல்ல ஹாய், ஹாய்னு பேசிக்கிட்டோம். அப்புறம் ’ஹாய் பிரதர், ஹாய் சிஸ்டர்’ன்னு பேச ஆரம்பிச்சுட்டோம். இந்தப் படத்துக்கு முன்னால அவர்ட் ட அதிகமா பேசிப்பழகியதில்லை. பழகுன பிறகு அவரது நிஜ கேரக்டர் பிடிச்சிருந்தது. அதே போலதான் பார்வதியும். அவங்களோட ஏற்கன வே நடிச்சிருக்கேன். அதனால இதுல ஈசியா இருந்தது’ என்கிற நஸ்ரியாவிடம், ‘சோஷியல் மீடியாவுல உங்களுக்கு அதிக பாலோயர்கள் இருக்காங்களே?’ என்று கேட்டால், ‘ஆமா. நான் உடல் எடை கூடினா, உடனே வருத்தப்படறாங்க.
இதை என் மேல உள்ள அக்கறைன் னு எடுத்துக்கறேன். எடையை குறைச்சாலும் இதே போல கமென்ட்ஸ். சில மோசமான கமென்ட்டுகளும் வருது. அது என்னைப் பாதிக்காதுன்னு சொல்ல முடியாது. எங்க போனாலும் சின்ன குழந்தை கூட. அடுத்தாப்ல எப்ப நடிப்பீங்கன்னு கேட்கிறாங்க. அந்த ஜெனரேஷனுக்கு முன்னாலயே நடிப்பை நான் நிறுத்திட்டாலும் என்னை ஞாபகம் வச்சுக் கேட்கிறாங்களேன்னு ஆச்சரியமா இருக்கும்’ என்கிறார் நஸ்ரியா.