இந்திய தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் நீக்கி தங்கல் படத்தை பாகிஸ்தானில் வெளியிட வேண்டிய அவசியமில்லை என அமீர்கான் கூறியிருக்கிறார்.
கடந்த வருடம் பாகிஸ்தானில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் இந்திய படங்கள் திரையிடுவதற்குத் தற்காலிகமாகத் தடை விதித்தனர். அதன் பிறகு இந்த வருடம் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் உண்மைக் கதையைத் தழுவி ஆமீர்கான் நடிப்பில் உருவான தங்கல் படத்தை பாகிஸ்தானில் வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தனர் உள்ளூர் பட விநியோகஸ்தர்கள்.
ஆனால் இந்த படத்தில் வரும் இந்திய தேசியக்கொடி, தேசியகீதம் உள்ளிட்டவை நீக்கப்படவேண்டும் என பாகிஸ்தான் சென்சார் போர்ட் கூறியது. அப்படி தேசியக்கொடி, தேசியகீதம் வரும் காட்சிகளை நீக்கி தங்கல் படம் பாகிஸ்தானில் வெளியிடப்பட வேண்டிய அவசியம் இல்லை என ஆமீர் கான் கூறியுள்ளார்.